Wednesday, December 11, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1321 TO 1335

1321. பெண்கள் இரவில் தனியாக சாலையில் நிற்க நேர்ந்தால் 1091 அல்லது 7837018555 எண்ணை அழைக்ககவும். போலீஸ் உங்களை வீட்டில்  பத்திரமாக விடும்.

1322. அழகிய பெண் மானைப் போன்றவளே, இளமைப் பார்வையும் நாணமும் உடையவளே, இயற்கையிலேயே அழகான உனக்குப் பொருத்தமற்ற அணிகலன்களை அணிவது ஏனோ?

1323. "வீட்டுக்காரம்மாள் அந்த தெய்வம் போல தானே. அது கோயில் தெய்வம், இது குடும்ப தெய்வம். அங்கேயும், இங்கேயும், சரணாகதியே"  சரிதானே ஐயா?

1324. கட்டுபாடான வாழ்வுக்கு, கட்டுபாடான உணவு மகா அவசியம் என்பதை சித்தர்கள் வலியுறுத்தினர், ரிஷிகளும் ஞானிகளும் அப்படித்தான் வாழ்ந்தனர்.

1325. மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம். கற்பு நெறி உள்ள பெண் ஒருவனுக்கு மனைவியாக வாய்த்தால் அதை விட சிறந்த பெருமை அவனுக்கு வேறில்லை. 

1326. இரக்க குணம் பொருந்தி, தன் கணவனின் வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்து இல்லற வாழ்க்கையை செம்மையாக நடத்துபவளே உண்மையான மனைவி ஆவாள்.

1327. ஒரு தந்தையின் இறுதிக்காலங்களில் அவருடைய சில எண்ணங்கள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் மகனால் உணரப்படாத நேரங்கள் அவருக்கு மரண வேதனையே!.

1328. தான் கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்பவர் சிலர். தான் கற்றது உலகளவு, கல்லாதது கைமண் அளவு  என்பவர் பலர். காலம் மாறிப் போச்சு.

1329. தாய், சகோதரி, மனைவி, மகள், மருமகள் இவர்களில் யார்   வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம் என்று உங்களால் வரிசைப் படுத்திக் கூற முடியுமா?

1330. மனதைத் தொடுகிறது: "உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி. என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா, என் உயிர் நின்னதன்றோ"

1331. மனதைத் தொடுகிறது: இல்லை என்போர் இருக்கையிலே, இருப்பவர்கள் இல்லை என்றால், மடி நிறைய பொருள் இருக்கும், மனம் நிறைய இருள் இருக்கும்.

1332. மனதைத் தொடுகிறது: விலைக்கு மேலே விலை வைத்தாலும் மனிதன் விலை என்ன? உயிர் விட்டு விட்டால், உடல் சுட்டு  விட்டால் அதில் அடுத்த கதை என்ன?

1333. மனதைத் தொடுகிறது: எங்கே வாழ்க்கை தொடங்கும்? எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது.

1334. மனதைத் தொடுகிறது: உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும். உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் உன் நிழலும் கூட மிதிக்கும்.

1335. மகிழ்ச்சியைத் தேடி துரத்துவது அல்ல வாழ்க்கை. அதை தன்னம்பிக்கையுடன் அமைதியாய் ரசிக்கும்போது மகிழ்ச்சி தானே வந்து சேர்ந்துவிடும்!



No comments :

Post a Comment