Friday, June 1, 2018

அமெரிக்கா, அமெரிக்கா தான்.

நண்பர்களே, 

முதலில் நான் ஒரு இந்தியன். எனக்கும் நாட்டுப் பற்று உண்டு. அதற்காக மற்ற நாடுகளில் உள்ள நல்ல விஷயங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. 


அமெரிக்க பயணத்தில் நான் கண்ட காட்சிகளைத் தொகுத்து அளிக்கிறேன். ஏழை நாடு பணக்கார நாடு என்றில்லை. மக்களின் மனோபாவம் தான் முக்கியம். 


அறுபது வருடங்களுக்கு முன் இந்தியாவின் கலாசாரமும் மக்களின் மனோபாவமும் சிறந்து விளங்கின.உலகில் ஒரு சிறந்த நாடாக நமது நாடு விளங்கியது


இப்பொழுது வசதிகள் அதிகமானாலும் மக்கள் மனோபாவம் சரியாக இல்லை.மக்கள் மாற வேண்டும்.நமது நாடு பழைய உயர்ந்த நிலைக்குத் திரும்ப வேண்டும் 


1. அமெரிக்காவில்  இருப்பது பெருமை அல்ல, இந்தியாவில் இருப்பது சிறுமை அல்ல. என் பதிவுகள் அமெரிக்காவைப் பற்றி நண்பர்கள் தெரிந்து கொள்ளவே.


2. அணில் பெருச்சாளி மாதிரி இருக்கும். மேலே கோடுகள் இல்லாமல் பார்க்க சகிக்காது. நமது ஊரில் அணில் எவ்வளவு அழகாக இருக்கும்.


3. காய்கறி, பழங்கள், மளிகை சாமான்கள் ஆகிய எல்லாப் பொருட்களின் தரம் சிறப்பாக இருக்கும்.கலப்படம், சொத்தை எதுவும் இருக்காது


4. பிரஜை, தொழில் செய்வோருக்கு "சமூக பாதுகாப்பு எண்" ஒன்று தரப்படும். அது அவர் ஜாதகம். அது இல்லாமல் எதுவும் செய்ய முடியாது


5. மக்கள் தேசப்பற்று மிகுந்தவர்கள்.தேசியக் கொடிக்கு அதிக மரியாதை கொடுப்பவர்கள்.எல்லா இடங்களிலும் தேசியக் கொடியை பார்க்கலாம்.


6. மக்கள் குளிர் காலத்தில் தங்கள் உடலை 90 சதவிகிதம் ஆடையால் மறைத்து இருப்பார்கள்.கோடை காலத்தில் 10%மறைத்து இருப்பார்கள்


7. தெரு நாய்கள் இல்லை. நாய் வளர்காதவர்கள் குறைவு. அவர்கள் நாய் தெருவில் மலம் கழித்தால் அவர்களே சுத்தம் செய்து விடுவார்கள்


8. தூசி என்கிற பேச்சுக்கே இடமில்லை. ஒரு மேஜையின் மேல் ஆறு மாதங்கள் வரை துடைக்ாவிட்டாலும் ஒரு துளி தூசி கூட இருக்காது.


9. பட்டப் படிப்பு 4 வருஷம். கட்டணம் வருஷத்திற்கு 7 லட்சம். முதுகலை பட்டப் படிப்பு 2 வருஷம். கட்டணம் வருஷத்திற்கு 17 லட்சம்


10. அமெரிக்காவில் கிழக்கு கரையில் இருந்து மேற்குக் கரைக்கு நேரம் வித்யாசம் மூன்று மணி. இந்தியாவில் கல்கத்தா, மும்பை இடையில்  வித்யாசம் கிடையாது.


11. கடையில் வாங்கின பொருளை 90 நாட்களுக்குள் திருப்பி கொடுத்து மாற்றலாம் அல்லது பணம் திரும்பப் பெறலாம். அவ்வளவு நம்பிக்கை


12. சாலை போக்குவரத்து வலது பக்கம். ஓட்டுனர் இடதுப்பக்கம். இந்தியாவில் சாலை போக்குவரத்து இடது பக்கம். ஓட்டுனர் வலது பக்கம்


13. மரங்கள் அடர்ந்து காணப்படும். எங்கு பார்த்தாலும் உயரமான, அடர்த்தியான மரங்கள். FALL காலத்தில் பலவித வண்ணங்களில் மாறும்


14. மார்ச் 21 முதல் ஜூன் 21 வரை இளவேனில் காலத்து ஒவ்வாமை எல்லோரையும் பாதிக்கும். தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.


15. பல பகுதிகளில் நவம்பர் முதல் ஞாயிறு முதல்,மார்ச் 2வது ஞாயிறு வரை இரவு 2 மணிக்கு நேரம் ஒரு மணி குறைத்து வைக்க படுகிறது


16. பொது நிகழ்ச்சியில் மேடையில் ஒருவர் பேசும் போது,வேறு யாரும் பேசவோ, சத்தம் போடவோ கூடாது. முடிவில் அளவோடு கை தட்டலாம்


17. சாலைகள் மிக அழகு, விதிகளைத் துல்லியமாக மதிப்பார்கள், அபராதம் அதிகம், லஞ்சம் கிடையாது, பாதசாரிகளுக்கு மரியாதை அதிகம்.


18. எங்கும் எதிலும் வரிசை முறை தான். வயதானவர்கள் கூட பொறுமையாக நிற்பார்கள். எக்காரணம் கொண்டும் வரிசையைத் தாண்ட மாட்டார்கள்


19. கார் இல்லாதவர்கள் இல்லை. பெரிய கார்கள் தான். 
சிறிய கார்கள் கிடையாது. பெட்ரோல் மலிவு. ஹாரன் ஒலி எழுப்ப மாட்டார்கள்.

20. அமெரிக்கா பரப்பளவு  இந்தியாவை விட மூன்று மடங்கு பெரியது. இந்தியாவின் ஜனத்தொகை அமெரிக்காவை விட நான்கு மடங்கு அதிகம்.


21. 60வயதுக்கு மேற்பட்டவர்களை அரசாங்கம் பாதுகாக்கிறது. அவர்களுக்கு மாத உதவித்தொகை, குறைந்த விலையில் வீடு, ரேஷன் அளிக்கிறது


22. வங்கிகளில் வட்டி விகிதம் [கொடுப்பது / வாங்குவது] மிகக் குறைவு. அதனால் சேமிப்பு குறைவு. செலவு செய்யும் மனோபாவம் அதிகம்


23. பாதையில் வாழும் ஏழைகள் குறைவு. அவர்களுக்கு குளிர் காலத்தில் உணவு, தங்கும் வசதிகள் கிருஸ்துவ மிஷன் செய்து கொடுக்கிறது


24. லஞ்சம் வாங்காமல், முப்பது நிமிடங்களில், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், தகுதி சான்றிதழ், மாசுக் கட்டுப்பாடுப் பரிசோதனை செய்யப் படுகிறது


25. வீட்டு வேலைகளைச் செய்வதற்கு வேலை ஆட்களை அமர்த்துவது இல்லை. ஊதியம் அதிகம்.எல்லா வேலைகளையும் தானே செய்து கொள்கிறார்கள்


26. வாசக சாலை அனுபவம் ஒரு அற்புதம். வெளியே வரவே மனது வராது. புத்தகங்கள் அழகாக, ஒழுங்காக, சுத்தமாக வைக்கப் பட்டு இருக்கும்.


27. சாலையில் உள்ள குப்பைகளை காற்றுத் துருத்தி மூலம் ஊதி, ஒன்று சேர்த்து இயந்திரம் மூலம் உறிஞ்சி எடுத்து கொண்டு போவார்கள்

28. சாலையில் இடைஞ்சலாக உள்ள மரக்கிளைகளை இயந்திரத்தினால் அறுத்து, இயந்திரம் மூலம் பொடி செய்து எடுத்துக் கொண்டு போவார்கள்.

29. சமயலறைக் கழுவுத் தொட்டியின் கீழே சிறிய கிரைன்டர் வைத்து இருக்கிறார்கள். அது குப்பையை அரைத்து வெளியே தள்ளி விடுகிறது.

30. ஒரு பொருளை வாங்கி கொஞ்சம் உபயோகப்படுத்திப் பார்த்து திருப்தி இல்லை என்று திருப்பிக் கொடுத்தால் பணம் கொடுத்து விடுவார்கள்.

31. அமெரிக்கப் புராணம் இத்துடன் முடிவுற்றது. நல்லதை வரவில் வைப்போம். கெட்டதை செலவில் வைப்போம். பொறுமையாக படித்தவர்க்கு நன்றி வணக்கம்.

No comments :

Post a Comment