Sunday, June 3, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 346 TO 360

346. நமது கலாசாரம், பண்பாடு, குடும்பம், உறவுகள், வாழ்க்கைமுறை, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், தர்மங்கள் என்றும் மாறாது, மாற்ற முடியாது

347. தான் சொல்வது தான் சரி மற்றவர்கள் கூறுவது தவறு என்கிற மனோபாவத்தில் விவாதம் செய்வது ஒருவரது வெற்றிக்கு வழி காட்டாது. பகையை வளர்க்கும்

348. மனது, மனிதனுக்கு இறைவன் கொடுத்த பரிசு. அதை நல்ல வழியில் உபயோகப் படுத்தினால் ஆரோக்கியம் கூடும். தவறாக உபயோகித்தால் வியாதிகள் வரும்.

349. மாற்றம் தேவை என்று எல்லோரும் கோஷம் போடுகிறார்கள்.விளைவு உபயோகமானதாக இருந்தால் வரவேற்கலாம். இல்லை என்றால் அந்த மாற்றம் தேவையே இல்லை.

350. இப்பொழுது ஆடைகள் அதிகம் வாங்குகிறோம். முதியோர் இல்லங்கள் பெருகி விட்டன. உங்கள் பழைய ஆடைகளை அவர்களுக்குக் கொடுத்தால் வாழ்த்துவார்கள்

351. மது அருந்துவது, அரசியல், மதம், ஜாதி, சினிமா, டிவி சீரியல் பற்றி பேசிப் பொழுதைக் கழிப்பது இவை தனி மனித முன்னேற்றத்திற்குத் தடை ஆகும்

352. பெரியவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் இளைய தலைமுறைக்கு ஒரு நல்ல வழிகாட்டி. அதை உதாசீனப் படுத்துவது, எள்ளி நகையாடுவது , அழிவின் அறிகுறி.

353. ஒரு மாநிலம் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்காமல், எதிர்க்காமல், அமல்படுத்தாமல் இருந்தால் அந்த மாநிலத்தின் மீது என்ன நடவடிக்கை எடுப்பது?

354. எவ்வளவோ பேர்கள் அரசியல், மற்றும் சினிமாவைப் பற்றி வீடியோ எடுத்து பிழைப்பு நடத்துகின்றனர். ஆதாரமற்றதை உண்மை என்று நம்புவது சரியல்ல.

355. மோட்டார் வாகனங்களைத் தவிர்த்து பேருந்தில் சென்றால், செலவு குறையும், ஆரோக்கியம் கூடும், ஆபத்து இல்லை, சாலை சீராகும், உலகம் தெரியும்

356. என் மனைவியும் நானும் ஹோட்டலில் டிபன் சாப்பிடும் பொழுது அவற்றைப் பகிர்ந்து உண்போம்.செலவு குறையும், திருப்தி அதிகம், ஆரோக்கியம் கூடும்

357. ஒருவர் தன்னுடைய மகள்,மருமகன் வாழ்க்கை முறையில் இருந்து விலகி இருப்பது சுலபம். ஆனால் மகன், மருமகளிடம் இருந்து விலகி இருப்பது கடினம்.

358. மாதம் இருமுறை விடுமுறை நாளில் வீட்டில் பொருட்களை இடம் மாற்றி வைத்தால், வீடு சுத்தமாகும், அழகு கூடும், ஆரோக்கியம் வரும், மனம் களிக்கும்

359. ஒரு திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வந்த பின் உடனே அதை மறப்பது என் வழக்கம். பலமுறை பார்ப்பது, பலரிடம் பேசுவது நான் விரும்புவதில்லை.

360. எம்.ஜி.ஆர் பல வெற்றிகளை அடைந்ததற்குக் காரணம் அவரது அரசியல், சினிமா கவர்ச்சி, பொது வாழ்க்கை, பாடிய பாடல்கள் எதுவென்று கூற முடியுமா?




No comments :

Post a Comment