391. பிறர் கூறுவதை நியாயப் படுத்திப் பார்ப்பது மனித நேயத்தில் ஒரு சிறந்த அணுகுமுறை. ஆனால் சுலபத்தில் வராது. அதிகம் முயற்சிக்க வேண்டும்.
392. புலி பசித்தாலும் புல்லைத் தின்ணாது. எக்காரணத்தைக் கொண்டும் தன்னுடைய மரியாதை, தரம், தகுதி கீழே போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
393. ஒருவர் கூறுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா, "இவ்வளவு அறிவிலியாக இருக்கிறாரே" என்று மனதில் நினைத்து அவரை இரக்கத்துடன் பாருங்கள்.
394. "லங்கணம் பரம ஔஷதம்" என்பதைத் தவிர எனக்கு கை மருத்துவத்தில் நம்பிக்கை கிடையாது. வேண்டும் என்றால் முதல் சிகிச்சையாக பரிசோதிக்கலாம்.
395. ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகுவது மிகவும் தவறு. பாலியல் குற்றங்களுக்கு இதுவே முதல் காரணம். ஆனால் பலர் இதை ஒப்புக் கொள்ளமாட்டார்கள்
396. ஒரு காலத்தில் வருவாய் குறைவாக இருந்ததால், சிக்கனம் குறிக்கோளாக இருந்தது. இப்போது அதிகமாக இருப்பதால் சிக்கனம் காணாமல் போய் விட்டது.
397. வாழ்க்கை என்ற ஒரு வழிப் பாதையில், அறுபதுக்கு முன் முட்படுக்கை, அறுபதுக்குப் பின் மலர்ப்படுக்கை. வாழத் தெரிந்தவர்களுக்கு மட்டும்.
398. நகரத்திலிருந்து கிராமத்தைப் பார்த்தாலும், கிராமத்திலிருந்து நகரத்தைப் பார்த்தாலும் இரண்டும் இனிமையாக இருக்கிறது.அது மனதை பொருத்தது
399. 1947இல் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிவினையை சரியான முறையில் நடத்தி இருந்தால் இதுவரை கோடிக்கணக்கான பணம்,உயிர் நஷ்டம் ஆகி இருக்காது.
400. எந்த வயதினர் ஆயினும், தாய்,மனைவி,சகோதரி, மகள் இவர்களைத் தவிர வேறு பெண்களைத் தொட்டுப் பேசுதல் தவறு.கை கூப்பி வணக்கம் சொல்ல வேண்டும்
401. நிலை மாறினால், குணம் மாறுவார், பொய் நீதியும், நேர்மையும் பேசுவார், தினம் ஜாதியும், பேதமும் கூறுவார், அது வேதம், விதி என்றோதுவார்.
402. லஞ்சத்தை நம் நாட்டை விட்டு விரட்ட ஒரே வழி "இந்திய லஞ்சக் கட்டுப்பாடு சட்டம்" என்ற சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தால் ஒழிந்து விடும்.
403. சைனாவின் ஜனத்தொகை 138 கோடி. இந்தியா 131 கோடி. 2022 வருடத்தில் இந்தியாவின் ஜனத்தொகை சைனாவை மிஞ்சி விடும் என்று கணிக்கப் படுகிறது.
404. கல்வித் தரத்தில் உலகில் முதலிடம் வகிப்பது பின்லாந்து, இரண்டாவது இடம் ஜப்பான், மூன்றாவது இடம் தென்கொரியா. 20வது இடம் அமெரிக்கா.
405. மனதை அது போகும் போக்கில் விடாமல், தீமைகளிலிருந்து விலக்கி, நன்மையில் போக விடுவதே அறிவு. பெரியோர்களின் அறிவுரைகளைப் பின் பற்றுவோம்.

No comments :
Post a Comment