Sunday, June 3, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 376 TO 390

376. அந்தக் காலத்தில் பெரிய கூட்டுக் குடும்பங்களின் தேவைகளை, பெண்கள் தனியாக, எந்த சாதனங்களின் உதவியும் இல்லாமல் எப்படி சமாளித்தார்கள்?

377. வேலைக்குப் போகும் காரணத்தினால், பலவித நவீன சாதனங்கள் இருந்தும், பெண்களால் தனது சிறிய குடும்பத்தை, இப்பொழுது சமாளிக்க முடிவதில்லை.


378. 
டிவி,செல்போன்,ஃப்ரிட்ஜ், ஏசி,கெய்ஸர்,மிக்ஸி,வெட் கிரைன்டர், காஸ்ஸ்டவ், பிரஷர்குக்கர்,காபி மேக்கர்,அவன்,இந்த சாதனங்கள் இல்லை எனில்?

379. மேல் ஜாதிக்காரர் தான் தாழ்ந்தவர் இல்லை என்கிறார். கீழ் ஜாதிக்காரர் தான் உயர்ந்தவர் இல்லை என்கிறார். இவர்கள் மாற்றி சிந்தித்தால்?


380. எனது பத்து: சந்திரலேகா,உத்தம புத்திரன்,பாசமலர், கல்யாணபரிசு, துலாபாரம்,நெஞ்சில் ஓர் ஆலயம்,மூன்றாம் பிறை,பாட்ஷா,நாயகன், எந்திரன்.


381. எல்லா மதம்,ஜாதியில் நல்லவர்கள்,கெட்டவர்கள் இருக்கிறார்கள்.இதை நன்கு உணர்ந்தால் தன்னை உயர்த்தி,பிறரைத் தாழ்த்தி பேசும் தன்மை வராது.


382. நமது நாட்டில் ஏழைகளில் பலர், அரசாங்கம் அவர்களுக்குக் கொடுக்கும் சலுகைகளை நன்கு பயன் படுத்தி, வாழ்க்கையில் முன்னேற மறுக்கிறார்கள்.


383. அரசு தரும் உதவிப் பணத்தை ஏழை மக்கள் உபயோகமாக செலவு செய்யாமல், மது, மாது, சினிமா, சூதாட்டம் போன்றவற்றில் வீணாக செலவு செய்கிறார்கள்.


384. நமது நாட்டில் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசு தரும் உதவித் தொகை, மற்ற சலுகைகளால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது


385. அரசு ஏழைகளுக்கு தரும் சலுகைகளை நிறுத்தினால் நாடு முன்னேறும்.ஏழைகள் வீண்செலவு செய்யமாட்டார்கள். ஆனால் அரசியல்வாதிகள் எதிர்ப்பார்கள்


386. ஜனநாயகம் என்பது ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது. பணக்காரர்களை ஏழையாக்குவது அல்ல.ஏழைகள் உயர மறுத்தால் அங்கு ஜனநாயகம் தோற்கும்.


387. வெளிநாட்டுப் பொருட்களின் மேல் நமக்கு உள்ள மோகம் தான் எல்லாக் கஷ்டங்களுக்கும் காரணம். இந்த உண்மையை அறிந்தவர் சிலர், அறியாதவர் பலர். 


388. குடும்பத்தை வெறுப்பது வேறு,குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்வது வேறு,குடும்பத்துக்காக உயிரை விடுவது வேறு.உயிரை விடுபவர்கள் மிகச் சிலரே.


389. முன்பெல்லாம் சினிமாவில் ஆபாசம், வன்முறை கதைக்குத் தகுந்தாற்போல் குறைந்த அளவில் இருந்தது. இப்பொழுது மிக அதிக அளவில் இருப்பது வேதனை


390. நான் சாதாரணமானவன். அதிகம் படித்தவன் அல்ல. கடற்கரையில் ஒரு கூழாங்கல். தண்ணீரில் ஒரு நீர்குமிழி.முகநூலில் தெரிந்ததைக் கிறுக்குகிறேன்

No comments :

Post a Comment