Tuesday, June 5, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 421 TO 435

421. அமெரிக்க பயணத்தில் நான் கண்ட காட்சிகளைத் தொகுத்து அளிக்கிறேன். ஏழை நாடு பணக்கார நாடு என்றில்லை. மக்களின் மனோபாவம் தான் முக்கியம். 

422. மற்ற நாடுகளில் உள்ள நல்ல விஷயங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. நல்லதை வரவில் வைப்போம். கெட்டதை செலவில் வைப்போம். வாழ்க வளமுடன்.


423. அமெரிக்காவில் கடையில் வாங்கின பொருளை 90 நாட்களுக்குள் திருப்பி கொடுத்து மாற்றலாம் அல்லது பணம் திரும்பப் பெறலாம். அவ்வளவு நம்பிக்கை


424. அமெரிக்காவில் சாலை போக்குவரத்து வலது பக்கம். ஓட்டுனர் இடதுப்பக்கம். இந்தியாவில் சாலை போக்குவரத்து இடது பக்கம்.ஓட்டுனர் வலது பக்கம்


425. அமெரிக்காவில் மரங்கள் அடர்ந்து காணப்படும். எங்கு பார்த்தாலும் உயரமான, அடர்த்தியான மரங்கள். FALL காலத்தில் பலவித வண்ணங்களில் மாறும்


426. அமெரிக்காவில் மார்ச் 21 முதல் ஜூன் 21 வரை இளவேனில் காலத்து ஒவ்வாமை எல்லோரையும் பாதிக்கும். தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.


427. அமெரிக்காவின் பல பகுதிகளில் நவம்பர் முதல் ஞாயிறு முதல்,மார்ச் 2வது ஞாயிறு வரை இரவு 2 மணிக்கு நேரம் ஒரு மணி குறைத்து வைக்க படுகிறது


428. அமெரிக்காவில், பொது நிகழ்ச்சியில் மேடையில் ஒருவர் பேசும் போது,வேறு யாரும் பேசவோ, சத்தம் போடவோ கூடாது. முடிவில் அளவோடு கை தட்டலாம்


429. அமெரிக்காவில் சாலைகள் மிக அழகு, விதிகளைத் துல்லியமாக மதிப்பார்கள், அபராதம் அதிகம், லஞ்சம் கிடையாது, பாதசாரிகளுக்கு மரியாதை அதிகம்.


430. அமெரிக்காவில் எங்கும் எதிலும் வரிசை முறை தான்.வயதானவர்கள் கூட பொறுமையாக நிற்பார்கள்.எக்காரணம் கொண்டும் வரிசையைத் தாண்ட மாட்டார்கள்


431. அமெரிக்காவில் கார் இல்லாதவர்கள் இல்லை. பெரிய கார்கள் தான். 
சிறிய கார்கள் கிடையாது. பெட்ரோல் மலிவு. ஹாரன் ஒலி எழுப்ப மாட்டார்கள்.

432. அமெரிக்காவின் பரப்பளவு  இந்தியாவை விட மூன்று மடங்கு பெரியது. இந்தியாவின் ஜனத்தொகை அமெரிக்காவை விட நான்கு மடங்கு அதிகம்.


433. அமெரிக்காவில் இருப்பது பெருமை அல்ல, இந்தியாவில் இருப்பது சிறுமை அல்ல. என் பதிவுகள் அமெரிக்காவைப் பற்றி நண்பர்கள் தெரிந்து கொள்ளவே.


434. அமெரிக்காவில் வீட்டு வேலைகளைச் செய்வதற்கு வேலை ஆட்களை அமர்த்துவது இல்லை. ஊதியம் அதிகம்.எல்லா வேலைகளையும் தானே செய்து கொள்கிறார்கள்


435. அமெரிக்காவில் கிழக்கு கரையில் இருந்து மேற்குக் கரைக்கு நேரம் வித்யாசம் மூன்று மணி. இந்தியாவில் கல்கத்தா, மும்பை இடையில் கிடையாது.



No comments :

Post a Comment