361. கஷ்டப் படும் ஒரு ஏழைக்கு உதவி செய்தால் அவர் கண்களில் தெரியும் நன்றியும் அவர் புன்னகையில் தெரியும் சந்தோஷமும் விலை மதிப்பில்லாதது.
362. எந்த ஒரு பிரச்சனையிலும் சுயமாக முடிவு எடுப்பதை விட தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான இருவரைக் கலந்து ஆலோசிப்பது நல்ல முடிவைத் தரும்.
363. கடமைகளைத் தவறாமல் செய், பெற்றோர்களை சந்தோஷப் படுத்து, ஏழைகளுக்கு முடிந்த வரை உதவி செய், இறைவனைத் தியானம் செய். மனநிம்மதி நிச்சயம்.
364. இசையை ரசிப்பவர்கள் ஒன்று கூடி ஒரு குழு ஆரம்பித்தால் எல்லோரும் அவரவர்களுக்குப் பிடித்த பாடல்களை பதிவு செய்து எல்லோரும் ரசிக்கலாமே.
365. புலம்புவதால் பலனில்லை. வருவதை எதிர் கொள்ளத்தான் வேண்டும். விதைத்தது நாம் தான். அறுவடையும் நாம் தான் செய்யவேண்டும். தப்ப முடியாது.
366. உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியின் தீர்ப்பை விமர்சனம் செய்யும் அளவுக்கு நம் நாட்டில் அறிவு ஜீவிகள் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
367. தண்ணீர் எப்போதும் மேட்டில் இருந்து பள்ளத்திற்குப் பாயும். அது போல, பணம் இருப்பவன், இல்லாதவனுக்குக் கொடுத்தால் தான் ஏழ்மை மறையும்.
368. பொது மக்கள் பணத்தை கொள்ளை அடித்த ஒரு தனிமனிதனைக் குற்றவாளி என்று நிரூபிக்க கோடிக்கணக்கான பணமும் பலரது நேரமும் காலமும் வீணாகிறது.
369. மஹாத்மா காந்தியை நம் தேசப் பிதா என்கிறோம். ஆனால் நாட்டில் தினம் நடப்பதோ பொய் பித்தலாட்டம், வன்முறை, கற்பழிப்பு, லஞ்சம் ஆகியவை தான்
370. நான் எப்போதும் தூரப்பயணம் செய்யும் போது வெள்ளை வேஷ்டி, சட்டை, கதர் உள் ஆடைகள் தான் அணிவேன். பாண்ட் அணிவதில்லை. அதன் சுகமே தனி தான்.
371. என்ன ஆனாலும் சரி, ஒரு பைசா கூட லஞ்சமாக வாங்கவோ / கொடுக்கவோ மாட்டேன். என் தாயின் மீது சத்தியம் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
372. லஞ்சம், ஊழலை ஒழிப்பது தான் நமது எல்லோருடைய இன்றைய தலையாய கடமை. அதற்காக உண்ணாவிரதம், கடை அடைப்பு எதுவும் நடத்தியதாகத் தெரியவில்லை.
373. நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பிடித்த சனியாக இருப்பது லஞ்சம்,ஊழல்.எந்த கட்சி அதில் குறைந்த மார்க் வாங்குகிறதோ அதை தேர்ந்தெடுங்கள்
374. கீழ் கோர்ட், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், இவற்றின் குறிக்கோள் சட்டத்தை நிலை நாட்டுவது. ஆனால் அணுகுமுறை வேறு.அது அறிவு சார்ந்தது
375. ஒரு நாட்டின் ஒற்றுமைக்கு, கலாசாரம், மொழி, இயற்கை வளம், கல்வி அறிவு, வாழ்க்கை முறை, சட்ட திட்டங்கள், நல்ல ஆட்சி, தேசபக்தி முக்கியம்.

No comments :
Post a Comment