Friday, June 5, 2020

திருநெல்வேலி மோர்க் குழம்பு

திருநெல்வேலி பக்கம் மோர்க் குழம்பு வேறு விதமாக சமைப்பார்கள். அதன் சுவை பிரமாதமாக இருக்கும். நீங்கள் அதை ருசித்து இருக்கிறீர்களா? அதன் செய்முறையை விளக்குகிறேன்.

தேவையான பொருட்கள்:

தனியா- 3 தேக்கரண்டி.

கடலைப்பபருப்பு- 2 தேக்கரண்டி.

ஜீரகம்- 1 தேக்கரண்டி.

செய்முறை:

தனியா, கடலைப்பபருப்பு, ஜீரகம், இஞ்சி இவற்றைக் கால் மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், வத்தல் மிளகாய் 2, பச்சை மிளகாய் 2, கொ. மல்லி, கறிவேப்பிலை கலந்து, மிக்ஸியில் நீர் விட்டு நைசாக அறைக்கவும்.

பிறகு, சுமாராகப் புளித்த தயிரை நன்கு கடைந்து, அதில் அரைத்த விழுதை கலக்கவும். உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும். அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். மேலாக நுரைத்து வரும்போது இறக்கி விடவும். பிறகு வாணலியில் வெந்தயத்தை எண்ணை விடாமல் வறுத்து குழம்பில் கலக்கவும். பிறகு ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணையில் கடுகு தாளிக்கவும்.

கத்தரி, வெண்டை, பூசணி முதலிய காய்களில் ஏதாவது ஒன்றை தனியாக வேகவைத்து குழம்புடன் சேர்க்கவும்.

சுவையான மோர்குழம்பு இப்போது ரெடி. சாதத்துடன் கலந்து சாப்பிடும் போது என்னை நினைத்துக் கொள்ளவும்.



No comments :

Post a Comment