Wednesday, June 17, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1426 TO 1440

1426. பகவான் கிருஷ்ணன்: த்வேஷமும், க்ரூரமும் கொண்ட அதமர்களைத் திரும்பத் திரும்ப அஸுரப் பிறப்பெடுக்குமாறு நானே தள்ளுகிறேன் (கீதை16.19)

1427. ஆயிரத்தில் ஒருவன்தான் ஸித்திக்கு முயற்சியே பண்ணுவான். அதிலும் அபூர்வமாக எவனோதான் முயற்சியில் ஜயித்து என்னை வந்தடைகிறான்’(கீதை7.3)

1428. சுவாமி விவேகானந்தர்: என்ன மாற்றங்கள் கொண்டு வந்தாலும், மனிதனின் குணம் மாறும் வரையில் அவனது துன்பம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

1429. நான் என்னும் சொல்லைக் கையாளுவதால் ஒருவனுக்கு அஹங்காரம் வந்துவிடாது. நான் என்னும் சொல்லைத் தவிர்த்துவிடுவதால் அஹங்காரம் போய்விடாது.

1430. மலை சார்ந்த இடம் குறிஞ்சி. காடு சார்ந்த இடம் முல்லை. வயல் சார்ந்த இடம் மருதம்.கடல் சார்ந்த இடம் நெய்தல்.வெறும் மணல் பிரதேசம் பாலை.

1431. ஒரு மனிதன் வாழ்ந்த வாழ்க்கைதான் அவனுடைய உண்மையான தகுதியைக் காட்டும். அவன் எழுதிய, பேசிய ஆடம்பரமான வார்த்தைகளில் மயங்குதல் கூடாது.

1432. மௌனமும், புன்னகையும் நமக்கு வெற்றி மந்திரங்கள்! தற்காப்பு ஆயுதங்கள். பிரச்சினையைத் தீர்க்க மௌனம்! பிரச்சினையைத் தவிர்க்க புன்னகை.

1433. அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, க்ரஹணம், மாளையம், ஆகிய முக்கியமான பித்ரு நாட்களில் கணவனும் மனைவியும் விலகி இருப்பது மிகவும் நல்லது.

1434. "நான்" என்கிற மகுடத்தைக் கழற்றிக் கீழே வைத்து விட்டு, மனித நேயத்தை நாம் கடைப் பிடித்தால் வெற்றி நம் காலடியில். இது சர்வ நிச்சயம்.

1435. கோபம் மிகவும் கொடியது. கோபத்துக்கான காரணங்களை விட, கோபத்தால் உண்டாகும் பின் விளைவுகளே அதிக வேதனையானவை. ஆகவே சினம் தவிர்ப்போம்.!

1436. வெற்றி அடைய, நாம் நமது சிந்தனைகளுக்கு எஜமானராக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல், நமது உணர்ச்சிகளுக்கு அடிமையாக இருக்கக் கூடாது.

1437. எல்லோருக்கும் மனசாட்சி, புரிதல், அறிவு, புத்திசாலித்தனம், நோக்கு, எண்ணங்கள், கற்பனை மற்றும் நம்பிக்கை இருக்கிறது. அறிவுரை தேவையா?

1438. பேசுவதைக் குறையுங்கள். அப்படியே பேசினாலும், மெதுவாகப் பேசுங்கள், அன்புடன் பேசுங்கள், உணர்ந்து பேசுங்கள், தேவையானதைப் பேசுங்கள்.

1439. நடை, உடை, பாவனை, மொழி, கலாசாரம், உணவு ஆகிய எல்லாவற்றிலும் இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களும் வேறுபட்டால் கட்டிக் காப்பது எவ்வாறு?

1440. சிறு சிறு தவறுகளுக்காக மனிதர்களைத் தவிர்த்தோமானால், இறுதியில் நமக்குத் தனிமைதான் மிஞ்சும். தவறு செய்யாதவர் யாரும் உலகில் கிடையாது.


No comments :

Post a Comment