Sunday, June 28, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1441 TO 1455

1441. உன்னை பார்க்காத கண்ணும், வேத மந்திரங்களை கேட்காத காதும், உன்னை தொழாத கைகளும், உன்னை நமஸ்கரிக்காத உடம்பும் இருந்து என்ன பயன் இறைவா?

1442. தஞ்சம் என்று வந்துவிட்டால் வஞ்சம் இன்றி அருள் பொழியும். நெஞ்சில் உடன் நிம்மதியும் வந்திடுமே. அஞ்ச இனி தேவையில்லை நீர் இருக்கையிலே.

1443. தனது தாயைத் தேடி அலையும் சிறிய கன்று, ஆயிரம் பசுக்களில் தன் தாயைச் சில நொடிகளில் கண்டுபிடித்து அதனிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது.

1444. மலர்களை விரும்புகிறவன் அதைக் கொய்து மாலையாக்கி மகிழ்வான், மலர்களை நேசிப்பவன் அதன் அழகை ரசித்து அம்மலர்ச் செடிக்கு நீர் ஊற்றுவான்.

1445. மரணம் மரணம் அது விதியே! சரணம் சரணம் எனது இறையே! வரணும் வரணும் எமது அகமே! தரணும் தரணும் உமது அருளே! தருணம் தருணம் இதுவே. ஸ்வாமியே.

1446. மருத்துவமனைக்கு ஒருமுறை சென்று பாருங்கள். ஆரோக்கியத்தைவிட மற்ற எதுவுமே பெரிதில்லை என்பதை மருத்துவமனை உங்களுக்குப் புரியவைக்கும்.

1447. சிறைச்சாலைக்கு சென்று பாருங்கள். சுதந்திரத்தைவிட விலை மதிப்பானது வேறு எதுவும் இல்லை என்பதை சிறைச்சாலை உங்களுக்குப் புரியவைக்கும்.

1448. ஒரு சுடுகாட்டுக்கு ஒருமுறை சென்று பாருங்கள். உயிரோடு வாழ்வதைவிடப் பெரியது எதுவுமே இல்லை என்பதை சுடுகாடு உங்களுக்குப் புரியவைக்கும்.

1449. நாம் செய்த தானம், தொண்டு இவற்றால் மற்றவர்கள் லாபமடைந்தாலும், அடையாவிட்டாலும் நம்முடைய மனதில் உள்ள அஹங்காரம் நிச்சயமாகக் குறையும்.

1450. எல்லாரும் சேர்ந்து குளம் வெட்டினால், நம் அஹம்பாவத்தையும் வெட்டி எடுக்கிறோம். குளத்தில் ஜலம் வருவதைவிட நம் நெஞ்சில் ஈரம் வருகிறது.

1451. செயல்கள் வேறு, காரியங்கள் வேறு. நல்ல [சுப] காரணங்களுக்காக செய்வது செயல்கள். கெட்ட [அசுப] காரணங்களுக்காக செய்வது காரியங்கள்.

1452. எல்லோரும் வாழ்க்கையில் அழுது கொண்டே தான் இருக்கிறார்கள். சிரிப்பவர்கள் மிகச் சிலரே. அவர்கள் எதையும் பிறரிடம் எதிர்பார்க்காதவர்கள்.

1453. வரும்போது நாம் எதையும் கொண்டு வரவில்லை. போகும்போது எதையும் கொண்டு போகப்போவதும் இல்லை. எனவே பிறரிடம் இரக்கமும் அன்பும் காட்டுங்கள்.

1454. பாலுக்கு சர்க்கரை அவசியமா, அல்லது கஞ்சிக்கு உப்பு அவசியமா என்பது பதில் சொல்லமுடியாத பெரிய கேள்விக்குறி. அவரவர் கஷ்டம் அவரவர்க்கு.

1455. உங்களுக்குத் தெரியுமா நமது நாட்டு பாதுகாப்பு பட்ஜெட்  2018இல் ரூ 404364 கோடி. 2019இல் ரூ431011 கோடி, 2020இல் ரூ448820 கோடி என்று?


No comments :

Post a Comment