Sunday, April 7, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1201 TO 1215

1201. ஒவ்வொருவரும் நெஞ்சில் கைவைத்து நான் நேர்மையாக வாழ்கிறேனா என்று கேளுங்கள். ஆமாம் என்று பதில் உண்மையாக வந்தால் நீங்கள் சிறந்தவர்கள்.

1202. வேலை செய்வது கஷ்டமில்லை.தொழில் செய்வது கஷ்டம்.அதற்கு மனத்திடம்,ஆர்வம், ஈடுபாடு,நுணுக்கம், முதலீடு,கடும் உழைப்பு, முதலியன வேண்டும்.


1203. 
கல்வி கற்கும் வரை கஷ்டத்தைக் கொடுக்கும். பாதுகாப்பது சுலபம். செல்வம் சம்பாதிக்கும் வரை கஷ்டத்தைக் கொடுக்கும். பாதுகாப்பது கஷ்டம்.

1204. அரசியல்வாதிகள் அறிவாளிகள் ஆக இருக்க வேண்டிய அவசியமில்லை. நேர்மையானவராக, லஞ்சம், ஊழல், கறுப்புப் பணம் இல்லாதவர் ஆக இருக்க வேண்டும்.


1205. சர்க்கரை ஒரு ஸ்பூன், உப்பு ஒரு ஸ்பூன், இதை தனித்தனியாக சாப்பிட்ட பிறகு இரண்டுக்கும் வித்யாசம் தெரியாதவன் ஞாநி, தெரிந்தவன் அஞ்ஞானி.


1206. ஐம்புலன்களான கண், மூக்கு, செவி, வாய், சருமம் இவைகளை, தனது கட்டுகோப்பில் வைத்து நல்ல வழியில் உபயோகப் படுத்துபவன், வெற்றி அடைகிறான்.


1207. வாழ்க்கையில் நேர்மையாக வாழ்பவர்கள் சிறு சிறு கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். நேர்மையாக வாழாதவர்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிப்பார்கள்.


1208. பரமாச்சாரியார் கூறுகிறார்:கடந்த 50 வருடங்களில் மக்களின் மனப்பான்மையில் ஏற்பட்ட மாறுதல்,அதற்கு முந்திய 500 வருடங்களில் ஏற்படவில்லை 


1209. முகச்சவரம் செய்யும் டிஸ்போஸெபல் ப்ளேடில் மேற்புறம் நீல நிற கோடு ஒன்று இருக்கும்.அது வெள்ளையாக மாறும் வரை தான் ப்ளேட் வேலை செய்யும்


1210. சோப்பு தீரும் நிலை வரும்போது அதைத் தூக்கி ஏறியாமல், அடுத்து உபயோகிக்கும் புதிய சோப்பில் அதை ஒட்டிக் கொள்வது, சிக்கனமா கஞ்சத்தனமா?


1211. தினம் பனியன்,அண்டர்வேர், துண்டு,இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வேட்டி,மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாண்ட்,சட்டை. இதைத் நாமே துவைக்கலாமே.


1212. கற்பனை செய்வது எல்லோருக்கும் பொது.நேரம் தான் மாறுபடும்.எனக்கு குளிக்கும் போது, நடைப்பயணம் போகும் போது கற்பனை பெருகும். உங்களுக்கு?


1213. ஏனோ தெரியவில்லை, நான்,கால் மேல் கால் போட்டு [அட்நகால்] உட்காருவதும் இல்லை,அப்படி உட்காருபவர்களை எனக்கு கொஞ்சமும் பிடிப்பதும் இல்லை


1214. ஹிந்து, ஹிந்து என்று பெருமைப் படுகிறோம். திருநீரோ, திருமண்னோ தினம் அணியவேண்டும். வைஷ்ணவர்கள் அணிகிறார்கள். சைவர்கள் அணியவேண்டும்.


1215. 
இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட நமது வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம். நினைத்தால் சிரிப்பு வருகிறது. நாடகமே உலகம்.

No comments :

Post a Comment