Tuesday, February 4, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1351 TO 1365

1351. தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக. அது அடிக்கும்போது எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேலையில் இருக்கும் போது பேசாதீர்கள்.

1352. உங்கள் குடும்பத்தின் முக்கியமான நிகழ்வுகளை புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

1353. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைகளுடன் எப்படி அன்பாக இருக்க வேண்டும் என்று சிறிது யோசியுங்கள்.

1354. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே! ஆணவம் ஆயுளை குறைக்கும்.

1355. புளியை சுட்டுக்கொள் உப்பை வறுத்துக்கொள் நெய்யை உருக்கிக்கொள் தயிரை பெருக்கிக்கொள் மொத்தத்தில் வாயைக் கட்டிக்கொள் இதுவே முது மொழி.

1356. கடவுள் எங்கும் நிறைந்து இருந்தாலும் கண்ணுக்குத் தெரிவதில்லை. தன்னிடம் இருக்கும் கடவுளை உணர்வதே இல்லை. அனுபவித்துதான் அறிய முடியும்.

1357. முன்னணி நடிகர்களை ரசிப்பவர்கள் ஜனரஞ்சகமான திரைப்படங்களைத் தான் ரசிப்பார்கள். தரமான படங்களை ரசிக்க மாட்டார்கள். அந்த ரசனையே வேறு.

1358. உலகில் கடினமான உடல் உழைப்பு யாருடையது என்று கேட்டால் எறும்புகள் தான். தன் எடை கொண்ட சக எறும்பை தனியாக முதுகில் எடுத்து செல்லும்.

1359. ஒரு பெண்ணால் மயக்கத்தை வரவழைக்கவும் முடியும், அந்த மயக்கத்தை தெளியவைக்கவும் முடியும். அவளால் முடியாதது ஒன்றுமில்லை. பெண் ஒரு மாயை.

1360. என்னமோ தெரியல்லே, இந்தக் காதல் கத்திரிக்காய் கவிதை கண்ராவியைப் படித்தால் கடுப்புதான் வருகிறது. ஏன் என்று தெரியவில்லை மரமண்டைக்கு.

1361. தனக்குத் தெரியும் என்று நினைப்பவர் சிலர், பிறருக்குத் தெரியாது என்று நினைப்பவர் சிலர், தனக்குத் தெரியாது என்று நினைப்பவர் சிலர்.

1362. 'ஓம் நமோ பகவதே ஸூர்ய நாராயணாய நமஹ" என்று தினமும் 12 தடவை சொல்லி விட்டு, கிழக்கு நோக்கி 12 நமஸ்காரம் செய்தால் ஆரோக்கியம் உண்டாகும்.

1363. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இதயங்கள் சேரும்போது காதல் மலர்கிறது. ஆனால் அவர்களின் மூளைகள் போட்டியிடும்போது அந்தக் காதல் முறிகிறது.

1364. இதய பூர்வமாக சிந்திக்கும் போது அன்பு பிறக்கிறது. அறிவு பூர்வமாக சிந்திக்கும் போது ஆணவம் பிறக்கிறது. அன்பு ஒன்று தான் உலக மகாசக்தி.

1365. அறிவு மூன்று வகை. கடவுள் கொடுத்தது, அனுபவத்தில் வருவது, படிப்பது மூலம் வருவது. ஏதாவது ஒன்று போதாது. எல்லாம் வேண்டும். அது அறிவு.

No comments :

Post a Comment