Thursday, March 22, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 226 TO 240

226. பிரச்சனைகள் சிறிய கற்கள் போன்றது. கண் அருகில் வைத்துப் பார்த்தால் மலையாகத் தெரியும். தள்ளி வைத்துப் பார்த்தால் சிறிதாகத் தெரியும்.

227. உலகில் எவ்வளவோ ஊனமுற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் ஒப்பிடும்போது இறைவன் நம் மீது எவ்வளவு கருணை வைத்துள்ளார் என்பது தெரியும்.

228. நல்ல விஷயங்களை யோசித்து, யோசித்து என் மனதில் இப்பொழுது நல்ல எண்ணங்கள் அதிகம்  தோன்றுகிறது. படித்தபின் உங்கள் அனுபவம் என்ன?

229. பெற்றோர்கள் குழந்தைகளை 25 வருடங்கள் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்குகிறார்கள். குழந்தைகள் 25 வருடம் அவர்களை கவனித்துக்கொண்டால் போதுமே.

230. சிணுங்கினாலோ, முறைத்தாலோ, கோபப் பட்டாலோ பெண்கள் ஏன் மிக அதிக அழகாகத் தெரிகிறார்கள்?  உங்களுக்குத் தெரிந்த காரணத்தைச் சொல்லுங்களேன்.

231. பிரசவ வைராக்கியம், மயான வைராக்கியம் என்று சொல்வார்கள். எல்லாம் அந்த சமயத்துடன் சரி. மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் எறிவிடும்.

232. சில பெற்றோர்கள் குழந்தைகளை அடிக்கிறார்கள். அடிப்பது தவறு. நாளை அதற்கு உடல் வலு வந்தவுடன் உங்களை அடிக்கக் காத்திருக்கும் ஜாக்கிரதை.

233. சிலர் நல்ல விதமாக வளர்க்க குழந்தைகளை  குறைக்கிறார்கள்.சிலர் எதிர்கால பாதுகாப்பிற்கு அதிக குழந்தைகளை பெற்று கொள்கிறார்கள். எது சரி?

234. சிலர் சிறிய அளவிலும், பலர் பெரிய அளவிலும் வரி எய்ப்பு செய்கிறார்கள். அங்கு தான் கருப்பு பணம் உற்பத்தி ஆகிறது. யாரை நொந்து என்ன பலன்?

235. வருமான வரி உட்பட எனது எல்லா வரிகளையும் நான் குறித்த காலத்தில் நேர்மையாக  செலுத்திவிட்டேன் என்று உங்களால் உறுதியிட்டு கூறமுடியுமா?

236. எங்கே உங்கள் நெஞ்சில் கை வைத்து உறுதியாகக் கூறுங்கள். நான் என் வாழ்க்கையில் எல்லா விஷயத்திலும் நேர்மையாக இருந்திருக்கிறேன் என்று.

237. அலுவலகத்தில் வேலை பார்க்கும் எத்தனை பேர் அவர்களுக்கு கொடுக்கப்படும் பயணப் படி போன்ற சலுகைகளைப் பெறுவதில் நியாயமாக இருக்கிறார்கள்?

238. பிறக்கும் வரை நாம் எந்த மதம் என்ன சாதி என்று தெரியாது. அதன்பிறகு தான் மதம், சாதி, அழகு, நிறம், அறிவு, தகுதி எல்லாம் நம்மை வந்து அடைகின்றன

239. எனது நண்பர்களை வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், இன்னொருவருடைய மனம் புண்படும்படி எந்தக் காரணம் கொண்டும் அவதூராக எழத வேண்டாம்.

240. நாம் இன்னொருவருடைய மத நம்பிக்கையில் தலையிடும் போது, அவர்கள் நம் மத நம்பிக்கையில் தலையிடுகிறார்கள். ஒருவருக்கொருவர் சண்டை வருகிறது.


No comments :

Post a Comment