211. ஒருவர் வாயை மூடிக்கொண்டு காதுகளை திறந்து வைத்திருந்தால் முன்னேறலாம். காதுகளை மூடிக்கொண்டு வாயை திறந்து வைத்திருந்தால் பின்னேறலாம்.
212. ஒருவர் தன்னுடைய கடமையை செய்யாமல் உரிமையை கேட்பது தவறான செயல். அது வேலையை செய்யாமல் கூலியை கேட்பதற்கு சமமாகும். கடமைக்கு பிறகு உரிமை.
213. தினம் கடும் வெய்யிலில் கால் கடுக்க சேற்றில் உழைப்பதற்கு மனத்திடம் வேண்டும். மனது வைத்தால் அவர்களால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை
214. அதிகமாக உணர்ச்சி வசப்படுவது ஒருவருடைய ஆரோக்கியத்திற்குக் கேடு. உறவையும் பாதிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.
215. பிறர் ஒழுக்கமாக இருக்கிறாரா என்று பார்ப்பது நமது வேலை இல்லை. நாம் ஒழுக்கமாக இருக்க வேண்டும். இல்லாவிடில் நமது ஆரோக்கியம் பாதிக்கும்.
216. பெற்றவர்கள் வயதாகி கீழே விழும்போது தாங்குவதற்கு இரண்டில் ஒன்று தேறுமா அல்லது அதுவும் தேறாதா என்பது தான் இன்றய தலயாய கேள்விக் குறி.
217. மனிதன் ஒரு வயிறுடன் மட்டும் பிறக்கவில்லை. இரண்டு கைகளுடன் பிறக்கிறான். ஒரு வயிற்றிற்குத் தேவையான உணவை இரண்டு கைகள் உழைத்துப் பெறும்
218. 2011 ஜனத்தொகை கணக்கின் படி இந்தியாவில் சொந்த வீடு வைத்து இருப்பவர் சதவீதம் 86.6%. பீஹார் 98.6%. தமிழ்நாடு 74.4%. நம்பமுடியவில்லை. அல்லவா?
219. அரசியல், மதம், சாதி, சினிமா சம்பந்தமாக எனக்கென்று சில நம்பிக்கைகள் உண்டு. அவைகளை மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.. அதுதான் பிரச்சனையே.
220. தமிழ்ப் பதிவுகளுக்கு உள்ள வரவேற்பு ஆங்கிலப் பதிவுகளுக்கு இல்லை என்கிற நிதர்சன உண்மை எனக்கு சிறிது வருத்தத்தை அளிக்கிறது. வேறு என்ன செய்ய?
221. புலிக்கு எலியைப் பிடிப்பதில்லை. கொடி கட்டிப் பறக்கும் சில எழுத்தாளர்கள் சிறு எழுத்தாளர்களின் பதிவுகளை லைக் பண்ணுவதில்லை.
222. 72 வருடங்கள் வாழ்ந்தாகி விட்டது. ஆசை எதுவும் இல்லை. இனி எனக்கு ஒன்றும் வேண்டாம். நிம்மதியான, நிரந்தர நித்திரையைத் தவிர.
223. என் விருப்பத்தை அறியாமல், என் மனைவி , தான் சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று தினமும் இறைவனை வேண்டுகிறாள்.
224. மக்களுக்காக உழப்பவர் தான் பொது வாழ்வில் இருப்பவர். மற்ற பெரும் புள்ளிகள் தனிப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்கள். அவர்களைப் பற்றி நமக்கு என்ன கவலை?
225. எங்கள் வீட்டில் சமையலுக்கு "கனோலா" எண்ணை உபயோகப் படுத்துகிறோம். அது மிகச் சிறந்த எண்ணை. விரும்பினால் நீங்களும் உபயோகப் படுத்தலாம்.

No comments :
Post a Comment