Wednesday, December 20, 2023

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1981 to 1995.

1981. “ஓம் நமோ பகவதே ஸூர்ய நாராயணாய நமஹ" என்று சொல்லிக் கொண்டே, தினமும் கிழக்கு நோக்கி 12 நமஸ்காரம் செய்தால் ஆரோக்கியம் உண்டாகும்.


1982. சாதனை செய்ய வேண்டும் என்றால் பல சோதனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். பல வேதனைகளை அனுபவிக்க வேண்டும்.


1983. தனக்குத் தெரியும் என்று நினைப்பவர் பலர். பிறருக்குத் தெரியாது என்று நினைப்பவர் பலர். தனக்குத் தெரியாது என்று நினைப்பவர் சிலர்.


1984. அறிவு மூன்று வகை. கடவுள் கொடுத்தது. அனுபவத்தில் வருவது.  படிப்பது மூலம் வருவது. ஏதாவது ஒன்று போதாது. மூன்றும் வேண்டும். அது தான் அறிவு.


1985. துன்பம் மூன்று வகை. 1. நம்மிடமிருந்து வருவது (நோய், நொடி) 2. பிறரிடமிருந்து வருவது (பிரிவு, இறப்பு, விலங்குகள் மூலம்) 3. இயற்கையால் வருவது.


1986. நோய் மூன்று வகை. 1. பரம்பரையாக. 2. கெட்ட பழக்கங்கள் வழியாக 3. உணவுப் பழக்கங்கள் வழியாக.


1987. வாழ்க்கையில் யாராவது ஒருவர், ஏதாவது ஒரு பாடத்தை, நமக்கு கற்றுக் கொடுத்துக்கொண்டே, இருக்கிறார்கள்.


1988. அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் எண்ணங்கள். அந்த நினைவுகள் நெஞ்சில் திரும்பிடும் ஏக்கங்கள். சிலரது வார்த்தையில் மயங்கும் சோகங்கள்.


1989. பலர் வாழ்க்கையில் செய்யும் பெரிய தவறு, ஒரு முட்டாளை முட்டாளாகவும், ஒரு புத்திசாலியை புத்திசாலியாகவும், எடை போடத் தவறுவது தான்.


1990. பாகற்காய் பழுப்பதை தவிர்க்க மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பல நாட்கள் பழுக்காமல் இருக்கும்.


1991. சாப்பிட்ட பிறகு மீதமான சாப்பாடு கெட்டுப் போகாமல் இருக்க அதை ஏழைகளுக்குக் கொடுத்து விடலாம். கெட்டுப் போகாது. புண்ணியமும் கூட.


1992. உப்பைக் குறை, சக்கரையைக் குறை, எண்ணையைக் குறை, காரத்தைக் குறை. அப்ப என்னத்தை தான் சாப்பிடறது யா?


1993. பிறரிடம் நமது சந்தோஷத்தையோ துக்கத்தையோ சொல்வதால் எவ்விதப் பலனும் இல்லை. அது சில சமயம் பொறாமையையும் பரிதாபத்தையும் தான் வளர்க்கும்.


1994. உற்றுப்பாருங்கள். நமது உலகில், உடலில், உள்ளத்தில் நடக்கும் செயல்பாடுகள் யாரால், எதனால், எப்படி? “நான் அசைந்தால் அசையும் அகிலமெலாமே.”


1995. காலிப்ளவர், கொத்தவரங்காய், சௌசௌ, கோவக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், பரங்கிக்காய் இவற்றையெல்லாம் நான் வாங்குவதே கிடையாது.

No comments :

Post a Comment