Tuesday, October 24, 2023

கை மேல் கை.

ஒருமுறை அவையில் அக்பர் திடீரென ஒரு சந்தேகத்துக்கு எல்லோரிடமும் விளக்கம் கேட்டார்.


பொதுவாக தானம் கொடுப்போர் கை உயர்ந்தும், தானம் பெறுபவர்கள் கை தாழ்ந்தும் இருக்கும், இதுவே நாம் எங்கும் கண்டிருக்கிறோம். ஆனால் தானத்தில் கொடுப்பவர்கள் கை தாழ்ந்தும், தானத்தை பெறுபவர்கள் கை உயர்ந்தும் இருக்கும். அது எப்போது? சரியான விளக்கம் கூறுங்கள்" என்று அமைச்சர்களைப் பார்த்து கேட்டார்.


அமைச்சர்கள் எவ்வளவுயோசித்தும், பதில் தெரியாததால், அமைதியாக தலைகுனிந்து அமர்ந்திருந்தனர். அப்போதுதான் வந்த பீர்பாலிடமும் இதே கதைக்கூறி விடையைக்கேட்டார்.


பீர்பால் சிரித்துக்கொண்டே " மன்னா! இந்தக் கேள்விக்கு யார்வேண்டுமானாலும் பதில் சொல்லிவிடுவார்களே... நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். 


மூக்குப்பொடி போடுபவரிடம், கொஞ்சம் பொடி கேட்டால், அவர் பொடிடப்பாவை தூக்கி நம் முன் நீட்டுவார்.. நாம் நம் கைவிரல்களை பொடிடப்பாவில் விட்டு பொடியை எடுக்கும்போது, நம் கை மேலே இருக்கும். கொடுப்பவர் கை தாழ்ந்திருக்கும்.".

No comments :

Post a Comment