Sunday, August 1, 2021

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1696 TO 1710

1696. இறைவன், பேச ஒரு வாயும், கேட்க இரண்டு காதுகளும், படைத்ததன் நோக்கமே, குறைவாக பேசவும், அதிகமாக கேட்கவும் வேண்டும் என்பதற்காகவே..!

1697. அறிவுரை கூறுவதை விட அக்கறை கொள்வது சிறந்தது. புகழ்வதை விட ஊக்கப் படுத்துதல் சிறந்தது. வாழச் சொல்வதை விட வாழ வைப்பது சிறந்தது.

1698. வாழ்க்கையில் சந்தோஷங்கள் வரும்போது அவற்றை அனுபவிப்பது போல, கஷ்டங்கள் வரும்போதும் அவற்றை அனுபவிக்க மனது வேண்டும்.அதுவே மனமுதிர்ச்சி.

1699. இருளாக  இருக்கும் வானத்தைப் பார்க்கக் கூடாது. அதில் அழகாக ஒளிரும் நிலவையும் நட்சத்திரங்களையும் பார்க்க வேண்டும். அதுதான் மகிழ்ச்சி.

1700. ஆற்றில் வெள்ளம் வரும்போது, இடுப்பில் கயிரைக் கட்டிக் கொண்டு கடக்கலாம். முடியவில்லை என்றால் அதே கயிரைப் பிடித்துக்கொண்டு திரும்பலாம்.

1701. யுதிஷ்டிரன் கூறுகிறார்: நேர்மையான மனிதனை இயற்கை காக்கிறது. பணமோ, படிப்போ, பதவியோ, உறவோ அல்ல. நேர்மை இல்லாதவனை அந்த இயற்கையே கொல்கிறது.

1702. பெண்கள் வெளியே வேலை செய்து, சம்பாதித்து, குடும்பத்திற்கு உதவுவது சந்தோஷமா அல்லது வீட்டில் இருந்து குடும்பத்தை பராமரிப்பது சந்தோஷமா?

1703. நான் காதி [KHADHI] தயாரிக்கும் தேன்[HONEY] கலந்த ஓட்மீல் [OATMEAL] சோப் உபயோகிக்கிறேன்.நீங்களும் உபயோகித்து பலன் அடையுங்கள்.

1704. இரவு ஒரு மணிக்கு மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் ஹோட்டலில் சூடாக இட்லி நெய் சாம்பார் சாப்பிட்ட அனுபவம் இருக்கிறதா உங்களுக்கு?

1705. ஆண்களுக்கு சமம், அவர்களுக்கு மேல் என்ற பெண்களின் முழக்கமெல்லாம் அவர்களது படுக்கை அறையில் ஒரு கரப்பான் பூச்சியை பார்க்கும் வரை தான்.

1706. டிஎம்எஸ் கணீர் குரல், ஏஎம் ராஜா இனிமையான குரல், ஜேசுதாஸ் இரண்டும் சேர்ந்தது, பிபி ஸ்ரீனிவாஸ் மூன்றும் சேர்ந்தது, எஸ் பி பி நான்கும் சேர்ந்தது.

1707. நான் உன்னை நேசிக்கிறேன் "I love you" என்று உங்கள் வாழ்க்கைத் துணையிடம் தினம் ஒருமுறையாவது  கூறுங்கள். அதன் பலன் கைமேல் தெரியும்.

1708. தினம் காலையில், வெறும் வயிற்றில், ஒரு தேக்கரண்டி உருக்கிய நெய் அருந்தி பிறகு காபி அல்லது தேனீர் குடித்தால் ஆரோக்கியம் என்கிறது ஆயுர்வேதம்.

1709. ஒருமுறை காய்ச்சி உபயோகித்த எண்ணையை மறுமுறை காய்ச்சக் கூடாது. அதனால் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புண்டு தெரியுமா?

1710. தேவையில்லாமல், டாக்டர் பரிந்துரை இல்லாமல், வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவது உடல்  ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை. தெரியுமா?

 

No comments :

Post a Comment