Wednesday, January 30, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1051 TO 1065

1051. இளைய தலைமுறையினர் இன்றய பாடல்களை விரும்புகிறார்கள்.பழைய பாடல்களை விரும்புவதில்லை. முந்திய தலைமுறையினர் அதற்கு நேர் எதிர்மாறு. ஏன்?

1052. பிறர் தவறை மன்னிப்பது என்பது ஒரு அருமையான குணம். தனது மனைவியையே கடத்திய பகைவனை, மன்னித்த ஸ்ரீராமபிரான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

1053. பயணம் செய்யும் போது,சில வறியவர்கள் தங்கள் கைகளால், ,அவர்கள் வயிற்றிலேயே தாளம் போட்டுக்கொண்டு, அருமையாகப் பாடுவதை கவனித்தது உண்டா?

1054. சும்மா இருத்தலே சுகம் என்று மௌனியாய் சும்மா இருக்க அருளாய். சுத்த நிர்குணமான பரதெய்வமே, பரஞ்சோதியே, சுகவாரியே. [தாயுமானவர்] 

1055. தவத்திரு தாயுமான அடிகள் இயற்றிய "பராபரக்கண்ணி" பாடல்கள் மொத்தம் 389. ஒவ்வொரு பாடலும் "பராபரமே" என்று இறைவனை துதித்து முடிவு பெறும்

1056. ரெடிமேட் ஆடைகள் அநியாய விலையில் விற்கப் படுகிறது.அதன் விலை நியாயமா என்று சிறிது யோசித்து பார்த்து பிறகு வாங்குவது மிகவும் சிறந்தது

1057. அநியாய விலை கொடுத்து ரெடிமேட் ஆடைகள் வாங்குவதற்கு பதிலாக, துணி வாங்கி தைத்துக் கொண்டால், செலவும் குறைவு, அளவும் சரியாக இருக்கும்.

1058. எல்லோருக்கும் அவரவர் தாய்மொழி சிறந்தது.ஆனால் சிலர் எப்போதும் அவரது மொழியை பாராட்டிப் பேசுவார் அல்லது பிறர் மொழியைக் கேலி செய்வார்.

1059. சிலர் வெற்றி அடைவதற்காக சிறந்த முறையில் எழுதுவார்கள். வெற்றி அடைந்த பிறகு, உளற ஆரம்பித்து விடுவார்கள். வெற்றியால் வந்த விளைவு இது.

1060. அது அழகானது, வெண்மையானது, ஆரோக்கியமானது, சுவையானது, எளிதில் ஜீரணமாவது, மலிவானது, சிறந்தது, எல்லோரும் விரும்புவது. அது இட்லி ஒன்றே.

1061. ரெடிமேட் துணுக்குகளை நான் உபயோகிப்பது இல்லை.சொந்தமாக யோசித்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் துணுக்குகள்,கட்டுரைகள் எழுதுகிறேன். நன்றி

1062. ஒரு கதை, நாட்டில் நடப்பவைகளை வைத்து எழுதப்படுகிறது. ஒரு கதையை வைத்து நாட்டில் காரியங்கள் நடக்கவில்லை. அதேபோலத் தான் சினிமாவும்.

1063. சினிமாவை நான் ரசிப்பது என் சொந்த விருப்பு வெறுப்புகளை பொருத்தது.அது சமுதாயத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எனக்கு தெரியாது

1064. சினிமாவில் தொடர்ந்து கற்பழிப்பு, வன்முறை, மது அருந்துதல், ஆபாச நடனங்கள் போன்றவை காட்டப்பட்டால், அது சமுதாய சீர்கேடைக் காட்டுகிறது.

1065. சினிமா ஒரு வியாபார நோக்கம் கொண்டது. அது காலத்திற்கு, சமுதாயத்திற்க்கு தகுந்தால் போல மாறுகிறது. யாரும் நஷ்டம் அடைய விரும்புவதில்லை.






No comments :

Post a Comment