Wednesday, January 23, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1036 TO 1050

1036. பறவைகள் மிருகங்களுக்கு தீங்கு செய்யப்படவில்லை என்று திரைப்படங்களில் போடுகிறார்கள். ஆனால் பார்ப்பவர்களுக்குத் தீங்கு செய்கிறார்களே?

1037. 
ஆண்டவன் நமக்குள்ளே ஆத்மான்னு ஒரு காமெரா வச்சி ரெக்கார்ட் பண்றான். நாம பண்ற அக்கிரமத்துக்கு வட்டியும் முதலுமா ஒருநாள் வாங்கிடுவான்.

1038. 
ஒரு பாட்டின் ஜீவனே அந்தப் பாட்டின் கருத்தும் ராகமும் தான். இது இரண்டும் இல்லாத பாட்டு ஒரு பாடலே இல்லை. எப்படி அதை ரசிக்கிறார்கள்?

1039. மக்கள் செலுத்தும் வரி நாட்டு முன்னேற்றத்திற்கு செலவு செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதிகள் கட்சி பணத்தில் இருந்து கொடுக்க வேண்டும்


1040. இறைவனே பத்து அவதாரங்கள் தான் எடுத்தார், ஒரு நடிகர் ஏன் கணக்கற்ற திரைப்படங்களில் நடிக்க வேண்டும்? பார்த்துப் பார்த்து அலுக்கவில்லை?


1041. 
வெள்ளிக்கிழமையன்று, பெண்கள் ஒன்பது கஜம் புடவை அணிந்து ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தால், குடும்பத்திற்கும் மனதிற்கும் நல்லது.

1042. அறுபது வயதுக்கு மேல் ஆகும் பெண்களின் நிலை பரிதாபம்.அப்போது மாமியார் சொல் கேட்டு நடந்தனர்.இப்போது மருமகள் சொல் கேட்டு நடக்கின்றனர்.


1043. இன்றய நிலையில் "லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிப்பேன்" என்று உறுதி கூறும் தலைவர் தான் நமக்கு வேண்டும். எந்தத் தலைவர் உறுதி கூறுகிறார்?


1044. வெளிநாட்டில் ஒரு நாவல் வெளியாகும் போதே, அதன் நகல் இந்தியாவில் அச்சிட படுகிறது என்ற உண்மை பலருக்கு தெரியாது.விலை பத்து பங்கு குறைவு


1045. பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டு விடுமா என்ன? அதற்கு அறிவு கிடையாது. அப்படித் தான் நினைக்கும். நம்ம வேலையைப் பார்ப்போம்.


1046. வயது ஆக ஆக நாக்கில் சுவை அரும்புகள் தேய்ந்து அடிக்கடி ஏதாவது சாப்பிடத் தோன்றும். அந்த ஆசையை அடக்குவதே நமது ஆரோக்கியத்தின் ரகசியம்.


1047.ஹிந்து, கிருஸ்தவர், முஸ்லிம் மூன்று மதத்தினரும் ஒருவரை ஒருவர் வெறுக்கிறார்கள். ஆனால் மதங்களை,புனித நூல்களை,ஆலயங்களை வெறுக்கவில்லை.


1048. உடல்நலக் குறைவு வந்து, மருத்துவரிடம் சென்ற பிறகு, அவரிடம் தனது இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற விவரங்களைக் கூறிவிட வேண்டும்.


1049. இளமையில் நன்றாகப் படிக்காமலும், பிறகு கடினமாக உழைக்காமலும், அப்போது சேமிக்காமலும் இருந்தால், முதுமையில் மிகவும் கஷ்டப்பட வேண்டும்.


1050. பல்லி நம் மீது விழுந்தால் உடனே பஞ்சாங்கத்தை எடுத்து பலன் பார்க்க கூடாது. ஏதோ பிடி தவறி கீழே விழுந்து விட்டது என்று விட்டு விடணும்.




No comments :

Post a Comment