Sunday, September 3, 2023

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1921 to 1935.

1921. ஒரு நாள் விடிவுகாலம் வரும் என்ற நம்பிக்கையில் தான் அனைவரின் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது.


1922. தேவையான அளவு சம்பாதித்து விட்டு பிறகு சந்தோஷமாக வாழலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் தேவையான அளவு எவ்வளவு என்பதுதான் தெரியவில்லை.


1923. நாம் எதைத் தேடுகிறோமோ, அதுவும் நம்மைத் தேடிக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் நாம் தேவைக்கும் மேல் தேடிக்கொண்டிருக்கிறோம். 


1924. நமக்குத் தேவையானது நம்மிடம் இருக்கிறது. நமது முயற்சிகள் மேலும் தேடுவதிலேயே இருப்பதால், நம்மிடம் உள்ளது நமக்குத் தெரிவதில்லை.


1925. செருப்புக்குள் சிக்கிய கல்லும், வாழ்க்கையில் விடாமல் துரத்தும் கவலையும் உறுத்திக் கொண்டே தான் இருக்கும், நாம் உதறித் தள்ளாத வரை.


1926. மன அமைதியைப் பாதுகாக்க, நமது சொந்த வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். பிறர் விஷயங்களில் தலையிடக்கூடாது.


1927. வாழ்வில் சில நேரம் தொடர் கஷ்டங்கள் வரலாம். அவற்றை நம்பிக்கையுடன் சந்தியுங்கள். அது தான் நமக்கு மகிழ்ச்சிக்கான வழி.


1928. கவலைக்கு நாம் இடம் கொடுத்தால், கவலை நமக்கு இடம் கொடுத்து வாழ்க்கையை கவலைக்கிடமாக்கி விடும்.


1929. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள். அது நம்மை மட்டும் அல்ல. நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.


1930. எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீங்களும் அதே பாதையில் அவர்கள் பின் செல்லாதீர்கள். உங்களுக்கான பாதையை நீங்கள் தேர்ந்தெடுங்கள்.


1931. நம்மை அவமானப்படுத்தும் போது அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும் அடுத்த நொடியில் இருந்துதான் நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது.


1932. பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும் தரையில் இருக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டீர்கள்.


1933. முருகா இன்றைய நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி. நாளைய பொழுது அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்.


1934. இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா.

                                  

1935. கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமே தூக்கம். எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள். நாளையபொழுது முருகன் அருள்.

No comments :

Post a Comment