Friday, October 29, 2021

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1741 TO 1755

1741. குதிரையை தண்ணீர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லத்தான் முடியும். தண்ணீர் குடிப்பது அதன் இஷ்டம். நம்மால் அதைக் குடிக்க வைக்க முடியாது.

1742. நமக்குள் ஒருவரை ஒருவர் நம்ப வேண்டும். எல்லோரையும் நம்புவது முட்டாள் தனம். ஒருவரையும் நம்பாமல் இருப்பது அதை விட பெரிய முட்டாள் தனம்.

1743. 50 வயது வரை கடமைகளை செய்ய வேண்டும். 60 வயது வரை ஞானத்தை வளர்க்க வேண்டும். அதன்பின் ஆசைகளை துறந்து கடவுள் மீது பக்தி செலுத்த வேண்டும்.

1744. சட்டப்படி பெண் 18, ஆண் 21 வயதுக்கு முன் திருமணம் செய்யக்கூடாது என்பது 18% மக்களுக்குத் தெரியவில்லை, விருப்பமில்லை, நம்பிக்கையில்லை.

1745. நகைச்சுவை உணர்வு மிக முக்கியம். சிலர் புன்முறுவல் செய்யவே மிகவும் யோசிப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில், மிகவும் கஷ்டப் படுவார்கள்.

1746. ஒருவனை ஏமாற்றுதல் என்பது பெரிய குற்றம். அதிலும் படிப்பறிவு இல்லாதவனையும் ஏழையையும் ஏமாற்றுதல் என்பது மன்னிக்க முடியாத ஒரு குற்றம்.

1747. நாம் சிறைப் பறவைகள். வீட்டிற்கு வெளியே வந்தால் தான் ஊர் தெரியும். ஊருக்கு வெளியே நாடு தெரியும். நாட்டுக்கு வெளியே உலகம் தெரியும்.

1748. வளரும் வயது, பறக்கும் காலம், நிற்காத நேரம், துடிக்கும் இளமை, ஒதுங்கும் உறவுகள், மனதில் லக்ஷியம், இவை தினசரி வாழ்க்கைப் போராட்டம்.

1749. நமது வாழ்க்கையை சுலபமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இருப்பதை நினைத்து சந்தோஷப் படுவோம். இல்லாததை நினைத்து வருத்தப் படாமல் இருப்போம்.

1750. சிலர் எப்பொழுதும் பிறரைத் திருத்த முயற்சி செய்கிறார்கள். தன்னை விட்டு விட்டு பிறரை திருத்த முயலுவது அவர்களின் அறியாமையை காட்டுகிறது.

1751. நமது நாட்டில் ஏழ்மையைக் குறைக்க எனக்குத் தோன்றிய ஒரு வழி. பணக்காரர்கள் ஏழைகளைத் திருமணம் செய்து கொண்டால் ஏழ்மை குறைந்து விடும்.

1752. நாம் குடும்பம் என்ற கூண்டில் அடைபட்டுத் தவிக்கிறோம். உள்ளே இருக்கவும் இஷ்டம் இல்லை. வெளியே போகவும் இஷ்டம் இல்லை. மூச்சு முட்டுகிறது.

1753. வாழ்க்கை ஒரு ரிலே ரேஸ். சரியான சமயத்தில், சரியான விதத்தில் நம் பொறுப்புக்களை அடுத்த தலைமுறைக்குக்  கொடுப்பது தான் புத்திசாலித்தனம்.

1754. காலம் பொன் போன்றது. வாழ்க்கையில் சந்தோஷம் மிக முக்கியம். மகிழ்ச்சியாய் ஒருவர் வாழ்ந்த  தருணங்கள் எல்லாம் வீணாக செலவழிக்க வில்லை.

1755. குழந்தைகளுக்குத் திருமணம் செய்த பின் கடமை முடிந்தது. பொறுப்புகளை அவர்களிடம் கொடுத்துவிட்டு கிருஷ்ணா, ராமா என்று சுற்றுலா போகலாமே. 

No comments :

Post a Comment