Monday, July 5, 2021

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1681 TO 1695

1681. க்ருஷ்ண பரமாத்மா: "சாகிற ஸமயத்திலும்" என்னையே ஸ்மரித்துக்கொண்டு எவன் தன் சரீரத்தை விடுகிறானோ. அவன் என்னை வந்து அடைந்துவிடுகிறான்.

1682. இது தன்வந்திரி ஸ்லோகம். நோயில் இருந்து பூரணமாக குணமாக இந்த ஸ்லோகத்தை காலையும், மாலையும் தவறாமல் சொல்லி வாருங்கள்.

ஓம் நமோ பகவதே 

வாசுதேவயா தன்வந்த்ரயே

அமிர்தகலாஷா ஹஸ்தியா

சர்வாமய வினஷானயா

த்ரைலோக்ய நாதாய

ஸ்ரீ மகாவிஷ்ணுவே நமஹ:

1683. இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறார். நேரம் வரும்போது ஒவ்வொருவருக்கும் அவர் தெரிவார். பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.

1684. உயிர் தான் நமது அடையாளம். உடல் ஒரு அலங்காரப் பொருள். இறந்தபின் உயிர் இறைவனை அடைகிறது. பிறகு ஏன் துக்கம், வருத்தம், அழுகை எல்லாம்?

1685. வலியினால் உடலிலும், மனதிலும் ஏற்படும் வேதனை நமக்கு நன்கு புரிந்தால், அந்த வேதனையை பிறருக்குக் கொடுக்க எப்படி நமக்கு மனது வருகிறது?

1686. வருடம் முழுதும், அல்லும் பகலும் தனது தாய், தந்தையை பேணிக் காப்பவர்களுக்கு எதற்கு தந்தையர் தினமும் , தாயார் தினமும்? தேவை இல்லையே.

1687. உங்கள் வீட்டில் யாராவது தவறு செய்தால், அவர்களைக் கண்டிக்காதீர்கள். உங்களைத் தண்டித்துக் கொள்ளுங்கள். அதற்கு நல்ல பலன் கிடைக்கும்.

1688. சிலருக்கு, ஒருவர் வேறு சாதி, மதம், மாவட்டம், மாநிலம், தேசம் என்றாலே ஒருவித வெறுப்பு  இருக்கிறதே. என்ன காரணம்? காழ்புணர்ச்சியா?

1689. "முதியோர் சொல்லும், முது நெல்லிக்கனியும், முதலில் கசக்கும், இறுதியில் இனிக்கும்"என்பது எவ்வளவு பெரிய சத்திய வார்த்தைகள்.

1690. அசைவ உணவுகளுக்குத் தனி மணம் உண்டு. சைவ உணவுகளுக்குத் தனி மணம் உண்டு. மசாலாவின் துணை கொண்டு சைவ உணவுகளுக்குக் கலப்பு மணம் செய்வது ஏன்?

1691. ஸ்பெயினில் ஒருவன் தனது தாயைக் கொன்று அவள் உடலை பதினைந்து நாட்களுக்கு சாப்பிட்டுக் கொண்டு இருந்தானாம். கொடூரம். கொடூரத்திலும் கொடூரம். OMG.

1692. இந்தியாவில் 33% மக்களுக்கு ரத்த அழுத்தம் இருக்கிறது.ஒரு நாளில் 4 கிராமுக்கு மேல் உப்பு சாப்பிடக்கூடாது.உப்பு, சர்க்கரை நமக்கு எமன்.

1693. தேங்காய் எண்ணையை சிறிது சூடு படுத்தி வாரம் இருமுறை தேய்த்துக் குளித்தால் சருமத்திற்கும் நல்லது, வியாபாரிக்கும் நல்லது.

1694. சீ,சீ, இந்தப் பழம் புளிக்கும் என்று நன்றாகத் தெரிகிறது. இருந்தாலும் அடுத்த பழம் நன்றாக இருக்காதா என்ற எதிர்பார்ப்பு  யாரை விட்டது?

1695. இப்பொழுது கதாநாயகன் போலீசை அடிப்பது போல காட்சிகள் வருகிறதே, அந்தக் காலத்தில் எம்ஜியார், சிவாஜி, நடித்த படங்களில் இதைப்போல  வந்ததா? 

No comments :

Post a Comment