Wednesday, May 19, 2021

திரைப்படம் / MOVIE

திரைப்படம் என்பது எல்லோரையும் கவர்ந்த ஒரு சாதனம். அதைப் பலர் பலவிதமாக ரசிக்கின்றனர். நான் அதை ரசிக்கும் விதம் வேறு. 

The movie is an influential medium enjoyed by one and all. Different people like it in different ways. I have my own way of enjoying a movie.

1. ஒரு சிறந்த கதையை சிறந்த விதமாகச் சொல்லியிருந்தால் அது எனக்கு சிறந்த திரைப்படம். 80 மதிப்பெண்கள் கொடுப்பேன்.

1. A good story, if presented interestingly then it is a good movie for me. I give 80 marks for that movie.

2. ஒரு சிறந்த கதையை சுமாராகச் சொல்லியிருந்தால், அது எனக்கு சுமாரான திரைப்படம். 50 மதிப்பெண்கள் கொடுப்பேன்.

2. A good story, if presented in an average way, then it is an average movie for me. I give 50 marks for that movie.

3. ஒரு சுமாரான கதையை சிறந்த விதமாகச் சொல்லியிருந்தால் அது எனக்கு சுமாரான திரைப்படம். 50 மதிப்பெண்கள் கொடுப்பேன்.

3. An average story, if presented interestingly, then it is an average movie for me. I give 50 marks for that movie.

4. ஒரு சுமாரான கதையை சுமாராகச் சொல்லியிருந்தால் அது எனக்கு ரசிக்காத திரைப்படம். 30 மதிப்பெண்கள் கொடுப்பேன்.

4. An average story, if presented in an average way then I do not enjoy such a movie. I give 30 marks for that movie.

5. எனக்குக் கதையும் அதை சொல்லியிருக்கிற விதமும் தான் முக்கியம். மற்றபடி நடிகர்களோ மற்றவர்களோ எனக்கு முக்கியம் இல்லை. 

5. The story and how it is presented are only important to me. I am not concerned about the actors or anybody else. 

No comments :

Post a Comment