Tuesday, May 4, 2021

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1636 TO 1650

1636. என்னைச் சரணடை, என்னில் உன் பாரங்களை சுமத்து, என் காவலில் இருந்து உன் கடமையினை செய், எப்பொழுதும் உன்னோடு நானிருந்து காத்துவருவேன்.

1637. சும்மா இருத்தலே சுகம் என்பது பெரியவர்கள் வாக்கு. அது கண், மூக்கு, செவி, நாக்கு, தோல் என்ற ஐம்புலன்களுக்கு மட்டுமல்ல. மனதுக்கும் உண்டு.

1638. யாரிடமும் எதையும் எதிர் பார்க்கக்கூடாது. யாரையும் எதற்கும் மதிப்பீடு செய்யக்கூடாது. அதுவே நமது கஷ்டங்களுக்கு முக்கிய காரணம் ஆகும்.

1639. சென்ற தலைமுறைகளுக்கும் இன்றைய தலைமுறைக்கும் உள்ள வேறுபாடு என்ன? இவர்கள் யாரிடமும் எதிர்பார்ப்பது, யாரையும் மதிப்பீடு செய்வதில்லை.

1640. படிப்பு, பதவி, பணம், ஆரோக்கியமும் இருந்தால், யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல், யாரையும் மதிப்பீடு செய்யாமல் சந்தோஷமாக வாழலாம்.

1641. சமூகத்தில் பின் தங்கியவர்களுக்கு கல்வி கற்பதில் சலுகை அளிப்பது அவசியம். ஆனால் கல்வியின் தரம் குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

1642. உலகில் சந்தோஷமாக வாழ சிறந்த நாடு பின்லாந்து. உலகில் தரமான கல்வி கற்க சிறந்த நாடு பின்லாந்து. எதனால் இப்படி என்று சிறிது யோசியுங்கள்.

1643. பின்லாந்தில் எல்லோரும் ஆசிரியராகத் தான் விரும்புகிறார்கள். அங்கு ஆசிரியர் ஆவது கடினம். மிகுந்த தேர்ச்சி பெறவேண்டும்.குதிரைக் கொம்பு.

1644. நம் நாடு உலகில் சிறந்து விளங்க இரண்டே இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தினால் போதும்.1. தரமான சிறந்த சாலைகள். 2. தரமான சிறந்த கல்வி.

1645. தரமான சிறந்த சாலைகள் அமைத்தால் பெட்ரோல், டீசல் உபயோகம் குறைந்து கச்சா எண்ணையின் இறக்குமதி குறையும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும்.

1646. தரமான சிறந்த கல்வி கற்றால், தொழில் பெருகும், வேலை இல்லாத் திண்டாட்டம் ஒழியும், உற்பத்தி / பொருளாதாரம் செழிக்கும், நாடு வளம்பெறும்.

1647. வாழ்க்கையில் முதல் 30 வருடங்களில் படிக்கணும். அடுத்த 30ல் உழைக்கணும். கடைசி 30ல் அனுபவிக்கணும். ஆனால் இதை பெரும்பாலோர் செய்வதில்லை.

1648. சாப்பிடும் போது சமையலில் உள்ள குற்றம் குறைகளை சொல்வது தவறு. ஆனால் சமைத்தவர் குற்றம் குறைகளை ஒத்துக் கொள்ளாதது அதைவிட பெரிய தவறு.

1649. சினிமா இசை முதலிய கலைகள் தனிமனித விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது. ஒருவருக்குப் பிடித்தது மற்றவருக்கு பிடிக்க வேண்டிய அவசியமில்லை.

1650. எனக்குக் கர்நாடக இசையில் புலமை கிடையாது. ரசிக்கத் தெரியும். சோபில்லு" என்ற பாடல் பிடிக்கும். அதைப் பாடுவது கடினம். ப்ருகா அதிகம். 

No comments :

Post a Comment