Tuesday, May 5, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1396 TO 1410

1396. முடியுமோ, முடியாதோ என நினைத்து, முடிவாக முடிவு செய்து விட்டால், முடியாத காரியம் ஆனாலும், முடித்து வைப்பவன் அவனே, என்பது முடிவான முடிவல்லவோ!!

1397. அன்னை உந்தன் அடிபணிந்தேன் என்னை ஆதரிப்பாய். முன்னை பழவினைகள் என்னை அணுகாமல் கோள் வினைகள் மேலும் தொடராமல் உன்னை கைகூப்பித் தொழுதேன்.

1398. நாம் சந்தோஷமாக இருக்கும் போது இறைவனை மறந்தாலும், நமக்குத் துன்பம் வந்து கஷ்டப்படும் போது நமக்கு அவன் கண்டிப்பாகத் துணை இருப்பான்.

1399. கற்றதும் குருவின் அருளாம். பெற்றதும் அவரே காரணமாம். பற்றியே இருந்திடு குருவடியைத் தவமாய். வெற்றியும் தோல்வியும் நிலைத்திடும் சமமாய்.

1400. மிருகங்களில் யானை அபூர்வமானது. அதை எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது. மனதில் ஆச்சரியமும் சந்தோஷமும் தோன்றும். இறைவனும் அப்படியே.

1401. சிலர் நம்மை உயர்த்திப் பேசுவது போல் கிண்டல், நக்கலுடன் பேசுவார்கள். இவர்களுடன் நட்பாகவும் இருக்க முடியாது, விலக்கவும் முடியாது.

1402. ஒரு கருத்துக்கு மாற்றுககருத்தை வரவேற்கலாம். பொதுவான கருத்துக்கு மாற்றுக் கருத்து இல்லை. குறிப்பிட்ட கருத்துக்கு மட்டும் அது உண்டு.

1403. மாற்றுக்கருத்தை நல்ல பண்பான முறையில் தெரிவிக்கவேண்டும். தனிப்பட்ட முறையில் எழுதுவது தவறான செயலாகும். அது கண்டிக்க வேண்டியதும் கூட.

1404. நரி வலமாய்ப் போனால் என்ன, அல்லது இடமாய்ப் போனால் என்ன, கடிக்காமல் போனால் சரி என்றொரு பழமொழி உண்டு. தெரியுமா?

1405. கல்வி கற்றதன் பயனையும், சிந்தித்துத் திறனாயும் திறமையும் நமது கல்வி பலருக்குத் தரவில்லை  மூடநம்பிக்கைகள் மிகுந்து காணப்படுகின்றன.

1406. மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் விட்டாலும் நாறும். வெண் பொங்கல் வைத்த பாத்திரத்தை கழுவாமல் விட்டாலும் நாறும். பாத்திரத்தைக் கழுவணும்.

1407. கொரோனா வைரஸ் உலகத்தையே இந்திய முறைப்படி வணக்கம் செலுத்த வைத்துள்ளது . பல உலக நாடுகளும் இந்திய முறைப்படி வணக்கம் செலுத்துகிறது.

1408. படித்தவர்கள் கை கூப்பி வணங்குவது இல்லை. படிக்காதவர்கள் கை குலுக்குவதில்லை. படிப்பதற்கும் கை குலுக்குவதற்கும் சம்பந்தம் இருக்கிறதா?

1409. எதிரிகளிடம் இல்லாத உண்மை என்னும் ஆயுதம், நல்ல உள்ளம் என்னும் ஆயுதம், நண்பர்களிடம் இருப்பதுதான் நல்லவர்களின் உண்மையான பாதுகாப்பு.

1410. பிரச்சனைகள், சச்சரவுகள் இல்லாத குடும்பமே இல்லை. அதை சமாளிப்பதே தனிக் கலை. விலகி வெளியேறினால் வருவது தொல்லை. அதில் சந்தோஷமே எல்லை.

No comments :

Post a Comment