Sunday, May 17, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1411 TO 1425

1411. சல்லடையில் தண்ணீர் தங்காது. ஆனால் அழுக்கான சல்லடை சுத்தமாகும். நல்ல விஷயங்கள் நமது மனதில் தங்காது. ஆனால் அழுக்கான மனது சுத்தமாகும்.

1412. ஒருமுறை, இருமுறை அல்ல, பலமுறை அனுபவித்த பிறகும் நான் சிறிதும் திருந்த மாட்டேன் என்று கூறினால் விதி வலியது என்று தானே கூற வேண்டும்?

1413. தும்மும் போது "நன்றாய் இரு", "இறைவனுக்கு நன்றி" என்று சொல்வதுண்டு. உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு "மில்லி செகண்ட்" நிற்குதாம்.

1414. கெட்டவனாக இருக்க வேண்டாம். கெட்டவனோடு சகவாசம் வைத்துக் கொண்டாலே போதும், அழிவதற்கு வேறெதுவும் தேவையில்லை என்பதை நாம் அறிய வேண்டும்.

1415. ஒரு புத்தகத்தைப் படிப்பதில் பொழுது போவதற்காகப் படிப்பதும், பின்பற்றுவதற்காகப் படிப்பதும் வேறு வேறு என்பது எனது தாழ்மையான எண்ணம்.

1416. மஹான்கள் எழுதுவதற்கும், மனிதர்கள் எழுதுவதற்கும் வித்யாசம் உண்டு. எதைப் போற்றுவது, எதை ஒதுக்குவது என்பது நமது அறிவைப் பொருத்தது.

1417. மிகச்சிறந்த வாழ்க்கை வாழ்ந்தவர்களால் தான் மிகச்சிறந்த கருத்துகளைக் கூற முடியும்.அந்தக் கருத்துகள் மட்டுமே நம்மை நல்வழிப் படுத்தும்.

1418. 20 கிராம் படிகாரம் எடுத்து இரண்டு லிட்டர் நீரில் கலக்கவும். இத்துடன் 100 கிராம் கல் உப்பை கலக்கவும். இயற்கையான ஸானிடைஸர் ரெடி.

1419. செல்போன் தண்ணீரில் விழுந்து விட்டால் அரிசி வைத்திருக்கும் டப்பாவில் போடவும். அரிசிக்கு தண்ணீரை இழுத்துக் கொள்ளும் சக்தி உண்டு.

1420. செல்போன் வெகு விரைவில் சார்ஜ் ஆக வேண்டுமா?. செல்போனை ப்ளைட் மோடில் வைத்து சார்ஜ் செய்யுங்கள். வெகு விரைவில் சார்ஜ் ஆகிவிடும்.

1421. வீட்டில் வெங்காயம் நறுக்கும் பொழுது கத்தியில் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் தடவிவிட்டு நறுக்குங்கள். உங்கள் கண்களில் தண்ணீர் வரவே வராது.

1422. வீட்டு மொட்டை மாடியில் அல்லது காம்பவுண்ட் சுவரில் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி வையுங்கள். அது பறவைகளின் தாகத்தை தணிக்க உதவும்.

1423. வாயுள்ள நாம் பிறரிடம் உதவி கேட்க முடியும். வாயில்லா ஜீவன்களான பறவைகள் யாரிடத்தில் உதவி கேட்கும். இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

1424. நடிகரின் முகம் பிடித்து விட்டால் அவர் எது செய்தாலும் அலுப்பதில்லை.அவர் முகம் அலுத்து விட்டால் அவர் எது செய்தாலும் பிடிப்பதில்லை.

1425. மகன்/ மருமகன் அரை நிஜார் அணியும் போது ஏற்றுக்கொள்ளும் தாய் , மகள்/ மருமகள் முன் தனது கணவன் அரை நிஜார் அணிவதை ஏன் விரும்புவதில்லை?


No comments :

Post a Comment