Monday, February 25, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1141 TO 1155.

1041. மனிதரில் குணத்தினால் ஸத்வம், தமஸ், ராக்ஷஸம் என்ற பிரிவுகள் உண்டு. 70% ஸத்வம், 20% தமஸ், 10% ராஷஸம் சிறந்தது. ஸத்வ குணம் முக்கியம்.

1042. தாய்,தாய்நாடு, தாய்மொழி என்கிறோம். உங்கள் தாயை பற்றி ஆங்கிலம் அல்லது தமிழில் ஒரு பக்கத்திற்கு ஒரு சிறிய கட்டுரை எழுதி பாருங்களேன்.


1043. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாமல் வெளுத்தது எல்லாம் பால் என்று வாழ்வது ஒருவருடைய அறியாமையைக் குறிக்கும். அது நல்லதல்ல.


1144. தமிழ் இலக்கணத்தை நான் மறந்து விட்டேன். அதுவும் என்னைக் கை விட்டு விட்டது. பரவாயில்லை. இப்போது நான் ஒன்றும் கவிதைகள் எழுதவில்லையே.


1145. ஒரு நாடு தன்னைச் சுற்றி உள்ள நாடுகளுடன் நட்புறவுடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த உலகில் அப்படி நட்புறவுடன் இல்லாத நாடுகள் எவை?


1146. ஒரு தனி மனிதன் நாட்டிற்கு நல்லது செய்ய விரும்பினால் எதிர் கட்சிகள் அவரை விலாசம் இல்லாமல் செய்துவிடும்.இது இந்த நாட்டின் தலைஎழுத்து


1147. "நான் ஒரு இந்தியன்" என்ற தேசப்பற்று உள்ளவராக இருந்தால், தனது மாநிலம், தனது மொழி என்ற பற்றுதல் அதிகம் இருக்காது என்று நினைக்கிறேன்.


1148. ஒரு நாத்தி மருமகளிடம் சொல்கிறார். நீ என் வீட்டில் வேலை செய்ய வேண்டாம். நான் உன் வீட்டில் வேலை செய்ய மாட்டேன். இந்த அணுகுமுறை சரியா?


1149. "பேரன்பு" திரைப்படம் பார்த்தேன். படம் முடிந்ததும் பலர் கை தட்டினார்கள். அதுவும் ஹைதராபாதில், தமிழ் படத்துக்கு. ஆச்சரியமாக இருந்தது


1150. மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற திரைப்படங்களை தியேட்டரில் காசு கொடுத்து பாருங்கள்.முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை டிவியில் பாருங்கள்


1151. ஓம் முருகா,ஷண்முகா. இன்று ஸ்ரீமுருகனுக்கு தைப்பூச நெய்வேத்யம்: சர்க்கரை பொங்கல்,புளி சாதம்,தேங்காய் சாதம்,தயிர் சாதம்,அப்பளம்,பழம்


1152. சிவனுக்கு ஒரு அவதாரம்.விஷ்ணுக்கு பத்து அவதாரம்.சிவனை விட விஷ்ணு பெரியவரா? எனக்கோ கணக்கில்லாத பிறவிகள். விஷ்ணுவை விட நான் பெரியவனா?

1153. மேற்கு வங்கம்,கேரளா, திரிபுரா மாநிலங்களில் கம்யூனிஸ்ட் ஆட்சி வருவது உண்டு.ஒரு மாறுதலுக்கு அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்தால் என்ன?


1154. 
நான் பொழுது போக்குவதற்காக என் மனதில் தோன்றுவதை எல்லாம் கிறுக்குகிறேன். சமுதாயத்தைத் திருத்தவோ,அறிவுரை கூறவோ எனக்கு தகுதி கிடையாது.

1155. நான் ஒரு திறந்த புத்தகம். என்னிடம் பொய், ஒளிவு மறைவு, ரகசியங்கள் எதுவும் கிடையாது. அதனால் மன அழுத்தம் குறைகிறது என்று நினைக்கிறேன்.


No comments :

Post a Comment