Friday, February 22, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1126 TO 1140

1126. அப்போது பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மஹாபாரதம், ராமாயணம் போன்ற புராணங்களில் இருந்து உதாரணம் காட்டி அறிவுரைகள் கூறுவார்கள். இப்போது?

1127. சாந்தமும், நல்ல குணமும், தப்பு வழியே இல்லாமல் சரியானபடி போகும் போக்கும், அந்தக் காலத்தில் இருந்தன. இப்போது அந்த நிலை மாறி விட்டது.


1128. 
மஹாபாரதத்தில் எது இல்லை? கீதைக்கு ஸ்ரீகிருஷ்ணர், பொறுமைக்கு தர்மர்,சத்தியத்திற்கு பீஷ்மர்,தானத்திற்கு கர்ணன்,வீரத்திற்கு அர்ஜுனன்.

1129. 
சத்தியமும்,நீதியும், தர்மமும் மக்களுடைய மனதில் நிலை நிறுத்தப்பட வேண்டும்.அப்படி நிலை நிறுத்த புராணங்களே மிகவும் உதவியாக இருக்கும்.

1130. பொதுவாக வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்பட்டுவிட்டால் அப்புறம் அதன் ஒவ்வொரு துறையிலுமே ஒழுக்கத்தினால் உண்டாகிற அழகும் ஏற்பட்டு விடுகிறது.


1131. தர்மம், நீதி இரண்டும் சேர்ந்துதான் பண்பு.அந்த பண்பாட்டை மாற்றுவதற்கும், குலைப்பதற்கும் இப்போது எத்தனையோ ஏற்பாடுகள் வந்திருக்கின்றன


1132. இறைவன் நமக்கு கை கொடுத்திருக்கிறார்;கால் கொடுத்திருக்கிறார்;கண் கொடுத்திருக்கிறார். ஆலோசிப்பதற்குப் புத்தியும் கொடுத்திருக்கிறார்.


1133. மற்றவர்களுடைய சந்தோஷத்திற்காக வாழ்பவர்கள், சந்தோஷமாக இருக்கிறார்கள். தனது சந்தோஷத்திற்காக மட்டும் வாழ்பவர்கள், கஷ்டப்படுகிறார்கள்.


1134. ஜனங்கள் வழி தெரியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும்போது, அநேக கட்சிகள் அவர்களுடைய புத்தியைப் பலவிதமாகக் குழப்பிக் கொண்டிருக்கின்றன.


1135. தினம் காலையில் எழுந்தபின், பல் விளக்கிவிட்டு, ஒரு ஐந்து நிமிடம் இறைவனை தியானம் செய்தால், மனதில் நல்ல எண்ணங்கள் தோன்ற வாய்ப்புண்டு.


1136. 
பசிக்கிறது. கையில் இருபது ரூபாய் மட்டும் இருக்கிறது. எந்த உணவு சாப்பிடலாம் என்று யோசிப்பது போல எந்த நெருக்கடியிலும் யோசிக்க வேண்டும்.

1137. வாழ்நாள் முழுவதும் கெட்ட வழிகளில் வாழ்ந்து விட்டு கடைசி காலத்தில் பெரிய ஞாநி போல உபதேசம் செய்பவரை போற்றுதல் கூடாது. அது வீண் வேலை.


1138. தண்ணீர் பல அளவில் உண்டு. சொட்டு, டம்ளர், பானை, கிணறு, ஆறு, கடல், சமுத்திரம் என்று. அறிவும் அப்படித்தான். நமக்கு எந்த அளவு அறிவு?


1139. நேரத்திற்கு பசி எடுக்கிறது.தினம் காலையில் இயற்கை உந்துதல் ஏற்படுகிறது. இரவு தூக்கம் நன்றாக வருகிறது.இவை நல்ல ஆரோகியத்தின் அறிகுறி.


1140. தம்மையும் உயர்த்திக்கொண்டு, வாசகர்களையும் உயர்த்த வேண்டும், என்கிற கடமையைப் பத்திரிக்கையாளர்களும் எழுத்தாளர்களும் பெற வேண்டும்.




No comments :

Post a Comment