Monday, April 3, 2023

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1831 to 1845

1831. கல்யாணம்  ஆகல'ங்கிறதையும் சோகமாதான் சொல்றாங்க, 'கல்யாணம் ஆயிடுச்சு'ங்கிறதையும் சோகமா தான் சொல்றாங்க.


1832. அப்பத்திற்கு மேலே நெய் மிதந்தால், அப்பம், தெப்பம் கொண்டாடும் என்பார்கள். அளவுக்கு மீறி எதுவும் வந்தால் ஆகாயத்தில் பறப்பார்கள்.


1833. ஒரு எரும்பு நினைத்தால் யாருடைய பாதத்தையும் கடிக்க முடியும். ஆனால் யாரும் எரும்பினுடைய பாதத்தை கடிக்கவே முடியாது. ஹி ஹி.


1834. கல்யாணம் ஆவதற்காக கோயில் கோயிலாக அலைவதும் கல்யாணம் ஆன பிறகு நிம்மதியைத் தேடி கோயில் கோயிலாக அலைவதும் இயற்கை.


1835. மானும் சிங்கமும் ஒரே கூண்டில் வாழ்வது தான் திருமணம். அதை விட ஆச்சரியம், மான் சொல்படி சிங்கம் கேட்டு நடப்பதுதான்.


1836. தாய், சகோதரி, மனைவி, மகள், மருமகள், சினேகிதி இவர்களில் யார் நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம் என்பதை வரிசைப்படுத்த முடியுமா?


1837. நேரம் இருக்கும் போது பணம் இருக்காது. பணம் இருக்கும் போது நேரம் இருக்காது. இரண்டும் இருக்கும் போது ஆரோக்கியம் இருக்காது.


1838. மூணு வேளை சாப்பாடு, நல்ல தூக்கம், சினிமா, 2GB நெட், 100% சார்ஜ், குடிக்கத் “தண்ணி” இவைகள் எல்லாம் இருந்தால் அதுவே சொர்க்கம் சிலருக்கு.


1839. மிளகு ரசம், சீரக ரசம், மைசூர் ரசம், தக்காளி ரசம், எலுமிச்சை ரசம், பைனாப்பிள் ரசம், இவற்றில் உங்களுக்குப் பிடித்தது எது?


1840. தேங்காய்த்துவையல், கொத்தமல்லி துவையல், கருவேப்பிலைத்துவையல், புதினாத்துவையல், பீர்க்கங்காய் துவையல் உங்களுக்கு எது பிடிக்கும்?


1841. உருளை ரோஸ்ட், சேம்பு ரோஸ்ட், வாழைக்காய் ரோஸ்ட், கத்தரி ரோஸ்ட், சேனை ரோஸ்ட், வெண்டைரோஸ்ட் இவைகளில் எது பிடிக்கும்?


1842. இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி,  ஆப்பம்,  பொங்கல், வடை, பரோட்டா, உப்புமா, அடை, இடியாப்பம் இவைகளில் எது உங்களுக்கு பிடிக்கும்?


1843. கொழாப்புட்டு ஒரு சிறந்த பணியாரம். அதை பிராமணர்கள் சாப்பிடுவது இல்லை ஏன் தெரியுமா? (Ans: அது அசைவம். It is non vegetarian)


1844. நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள், நஷ்டங்கள், துக்கங்கள், துயரங்கள், அவமானங்கள் அனைத்துமே நாம் இறுதியில் இறைவனடி சேர்வதற்கு உள்ள பயிற்சியே.


1845. நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தபின் நிம்மதியைத் தேடுவதுமே, ஆண்களின் வேலையாகப் போய் விட்டது.


No comments :

Post a Comment