Friday, July 15, 2022

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1801 TO 1815

1801. விவாதம் அறிவாளிகள் இடையே நடைபெறுவது. வாக்குவாதம் அறிவு இல்லாதவர்கள் இடையே நடைபெறுவது. விவாதம் பலன் தரும். வாக்குவாதம் விரோதம் வரும்.


1802. இன்று  நல்ல எண்ணங்களுடன் நல்ல செயல்கள் செய்ய வேண்டும் என்று தினமும் காலையில் உறுதி எடுத்து கொண்டு அதைத் தவறாமல் பின்பற்றவெண்டும்.


1803. பாதையிலே வெளிச்சமில்லை,பகல் இரவு புரியவில்லை,பாதையும் தெரியவில்லை. ஆயிரம் தான் வாழ்வில் வரும்,நிம்மதி வருவதில்லை.அறிவே வா,அறிவே வா.


1804. நேர்மையாக இருப்பவர்களுக்கு சோதனை மேல் சோதனை வரும். அதற்காக அவர் நேர்மையை கை விட்டுவிடக் கூடாது. அந்த நேர்மையே அவரைக் காப்பாற்றும்.


1805. மனைவி உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பது போல, கணவனும் மனைவிக்கு உண்மையாய் இருக்க வேண்டும். அதுவே மனைவிக்குக் கொடுக்கும் பரிசு.


1806. அடக்கியாளும் பெண்கள் அதிகம். அனுசரித்துப் போகும் ஆண்களும் அதிகம். அது அன்பின் வெளிப்பாடு. அனுபவித்தால் தான் தெரியும்.


1807. பெரும்பாலோர் வாழ்க்கையில் முதல் தடவை சரியான முடிவு எடுக்காமல் கோட்டை விட்டு விட்டு இரண்டாவது சந்தர்பத்திற்காகக் காத்திருக்கிறார்கள்.


1808. வாழ்க்கையில் எல்லோரும் விரும்புவது சந்தோஷம். சந்தோஷமான வாழ்க்கைக்கு எது மிக முக்கியம்? கல்வியா, செல்வமா, ஆரோக்கியமா, மனத்திருப்தியா?


1809. ஒருவர் எவ்விதம் யோசிக்கிறார் என்று நாம் சரியாக யோசிக்கத் தவறுவதால் தான் இருவர் இடையே கருத்து வேற்றுமையும் மனஸ்தாபமும் வருகின்றது.


1810. தாயிற் சிறந்த கோயிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. இந்தப் பொன்மொழியில் நம்பிக்கை உள்ளவர்கள் இப்போ இங்கு அதிகம் இல்லை.


1811. தன்னை விட வயதான அனுபவப் பட்ட பெரியவர்களுடன் கருத்து வேறுபாடு இருந்தால் அவர்களுடன் மறுத்துப்  பேசாமல் மௌனமாக இருத்தல் நல்ல குணம்.


1812. தாய் தந்தையை சந்தோஷப் படுத்தும் நேரம், கடமையில் வழுவாத நேரம், அறவழியில் பொருள் சேர்க்கும் நேரம் பிரம்மமுகூர்த்தம்.


1813. ஒருவனுக்கு எது தகுதியோ அது முயற்சியால் அவனை வந்து சேரும். அவன் எதை ஆசைப் படுகிறானோ, என்ன முயற்சி செய்தாலும் அது அவனை வந்து சேராது.


1814. குத்தக் குத்தக் குனிவார்கள், குனியக் குனியக் குத்துவார்கள் என்பது முதுமொழி. நான் குனிவதும் இல்லை, குத்துவதும் இல்லை. இது தனி வழி.


1815. இருவிழிகளில் பன்னீர் துளிகள் மகிழ்ச்சி. கருவிழிகளில் கண்ணீர் துளிகள் வீழ்ச்சி. விழிகளில் துளிகள் வருவது இயற்கை. காரணங்கள் தான் வேறு.  

No comments :

Post a Comment