Saturday, November 21, 2020

எனது உளரல்கள்.

1. யார் புத்திசாலி?

ஐந்தறிவு உள்ள நாய், ஒன்றுக்கொன்று சண்டையிடுகின்றன, ஆனால் ஆறறிவு உள்ள மனிதனுடன் நட்பாக இருக்கின்றன. ஆறறிவு உள்ள மனிதன் ஒருவருக்கொருவர் சண்டையிடுகின்றனர். ஆனால் ஐந்தறிவு உள்ள நாயுடன் நட்பாக இருக்கின்றனர். யார் புத்திசாலி?

2. சிறந்த வழி.

பாவம் செய்யாமல் இருப்பதே புண்ணியம் செய்வதாகும். நாம் செய்வது எல்லாம் புண்ணியம் என்று நாமே நினைத்துக் கொள்ளக்கூடாது. வாழ்க்கையை நேர்மையான வழியில் வாழ்வது தான் முக்கியம். அப்படி இல்லாமல் ஆன்மீக எண்ணங்கள் அதிகமாக இருந்தால், உலக சுக துக்கங்களில் இருந்து விடுபட்டு கோயில் கோயிலாக சென்று இறைவனை வழிபட்டு, கிடைத்ததை உண்டு, காலத்தைக் கடத்துவதே சிறந்த வழி.

3. குழந்தைகளின் எதிர்காலம் 

இப்போது பணத்தின் தேவைகள் அதிகமாகி விட்டதாலும், பெண்களின் கல்வித் தகுதியாலும் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு போகின்றனர். அதனால் குழந்தைகளை சரியாகக் கவனிக்க முடியவில்லை. அவர்கள் பெற்றோரின் அன்புக்கும், அரவணைப்புக்கும் ஏங்குகின்றனர். அதை சரி செய்ய, ஆரோக்கியமற்ற பொருட்களை அவர்களுக்கு வாங்கிக் கொடுக்கின்றனர். இதனால் குழந்தைகளின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

4. செய்திகள்.

பண்டைய காலத்தில் புறா மூலம் செய்திகள் அனுப்பினர். பிறகு தூதுவன் மூலம் அனுப்பினர். பிறகு தபால் மூலம் அனுப்பினர். அதன் பிறகு தொலைபேசி மூலம் கட்டணம் கட்டிப் பேசினர். பிறகு கைபேசி மூலம் அதிக கட்டணம் செலுத்திப் பேசினர். பிறகு கட்டணம் கட்டாமல் பேச வாட்சாப் வந்தது. ஆனால் எல்லோரும் பேசுவதைத் தவிர்த்து மறுபடியும் செய்திகள் அனுப்ப ஆரம்பித்து விட்டனர். ஒருவருடன் ஒருவர் பேசும்போது ஏற்படும் சந்தோஷமும் திருப்தியும் கிடைக்குமா?


No comments :

Post a Comment