Wednesday, November 4, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1561 TO 1575

1561. அனைத்தும் சத்தியத்திலிருந்தே பிறந்து, உருவாகிக் கடைசியில் சத்தியத்திலேயே ஐக்கியமாகிறது. சத்யம் இல்லாத இடமே இப்பூவுலகில் இல்லை.

1562. பண்டைய முனிவரும், மகரிஷிகளும் உண்மையே பேசு, இனிமையாகப் பேசு, மனதிற்கு ரசிக்காத உண்மையைப் பேசாதே என்றனர்.நம்மால் பின்பற்ற முடியுமா?

1563. ஒருவர் தன்னுடைய கடமைகளைச் செய்து முடித்து, ஞானம் அடைந்து,கடவுளிடம் பக்தி செலுத்த வேண்டும்.ஆசைகளைத் துறக்காமல் இறைவனை அடைவது கஷ்டம்.

1564. நம்முடைய வாழ்க்கையை சரியாக வாழத் தெரியவேண்டும். பலன் இல்லாமல் பேசுவது, பயன் இல்லாத செயல்கள், அதைக் கெடுத்து நாசம் செய்து விடும்.

1565. மனிதரில் பிரிவுகள் உணவு,வாழ்க்கை முறை, நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. வேற்றுமையை மறந்து ஒருவரை ஒருவர் நேசித்து வாழ்வது நல்லது.

1566. சூரியன் கிழக்கே உதிக்கிறான் என்றால் கூட அதை மறுத்துப் பேச நாலு அறிவு ஜீவிகள் இருப்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கிறது.

1567. நம் நாட்டுக்கு நல்லது செய்த, செய்கின்ற, செய்யப் போகின்றவர்கள் பலர். அது அவர்கள் வேலை. நாம் என்ன செய்வது என்று சிறிது யோசியுங்கள்.

1568. தத்துவங்கள் கேட்பதற்கு சுவையாக இருக்கும். பசித்தவனுக்குத்தான் பசியின் அருமை தெரியும். முதலில் பசியை போக்குவோம். தத்துவம் பிறகு.

1569. நல்லதை நினைக்கும் போது.நல்லதை பார்க்கும் போது.நல்லதை கேட்கும் போது.நல்லதை பேசும் போது,நல்லதை செய்யும் போது, அது நமக்கு நல்ல நேரம்.

1570. கடமைகளைச் செய்வது,பெற்றோரை சந்தோஷப் படுத்துவது,ஏழைகளுக்கு உதவுவது, இதையெல்லாம் செய்துவிட்டு பிறகு இறைவனை வேண்டுவது சாலச் சிறந்தது.

1571. தினம் காலையில் ஒரு பத்து நிமிடங்கள் உங்கள் பெற்றோருக்காக ஒதுக்குங்கள். அவர்கள் தூக்கம், உணவு, ஆரோக்கியம் பற்றி அன்பாகப் பேசுங்கள். 

1572. எங்கள் குடும்பம் ஒரு கார் [சிற்றுந்து] என்றால், மகள் என்ஜின், மகன் பெட்ரோல், மனைவி இயக்குநர், நான் ஓட்டுனர். வண்டி நன்றாக ஓடுகிறது.

1573. தனது சக்தி,தகுதி,தரம் அறிந்து அதன் படி நடக்கத் தெரிய வேண்டும்.அவை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.புலி புல்லைத் தின்னக் கூடாது

1574. இளமையில் மனம் நட்பை நாடுகிறது. அது அதிக காலம் நீடிக்கிறது. முதுமையில் மனம்  தனிமையை நாடுகிறது.  நட்பு அதிக காலம் நீடிப்பதில்லை

1575. தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள்,நடிகைகள் அழகும் திறமையும் இருந்தும் சினிமாவில் நடிக்க சந்தர்ப்பம் கிடைப்பதில்லை ஏன்? 

No comments :

Post a Comment