Sunday, June 15, 2025

எதிர்மறை எண்ணங்களை விரட்ட 5 வழிகள்!

வாழ்க்கை எப்போதும் நாம் நினைக்கும் விதமாக இருக்காது. ‘நினைப்பதெல்லாம்நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லைநடந்ததையே நினைத்திருந்தால் அமைதிஎன்றும் இல்லை’ என்று தொடங்கும் திரைப்பாடலில் ஒவ்வொரு வரியும் தத்துவச்செறிவாய் எழுதியிருப்பார் கவிஞர் கண்ணதாசன்நம்முடைய அன்றாடவாழ்க்கையில் தான் எத்தனை பிரச்னைகள்ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டம்அக்கப்போர்வீட்டில் நிம்மதி இல்லை என்று வெளியே வந்தால் வெளியில்அதற்கு மேல் ஆயிரம் இடர்கள்நேர்மறை எண்ணங்களுடன் இருந்தால்எத்தகைய பிரச்னையாக இருந்தாலும் சமாளித்து மீண்டு வரலாம்தொடர்ந்துநெகட்டிவ் எண்ணங்கள் மனத்தை நச்சரித்தால் என்ன செய்வதுமனம் நமக்குவெளியே இருந்தால் கூட தப்பித்து ஓடலாம்ஆனால் நமக்குள்ளேயே இருந்துநம்மை பலவிதமாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறதேமனம்நிலைகொள்ளாமல் தவிக்கும் போது உள்ளுக்குள் ஆழமான ஒரு காயத்தால்ஏற்பட்ட வலி சற்றும் குறையாமல் இருக்கும் போது என்ன செய்யலாம்பாசிட்டிவ்வாக இருக்க பின்வரும் 5 வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் எதுவும்எளிதாகும்.


மனத்தை திசை திருப்புங்கள்


நமக்குத் தெரியாமலேயே சிறுகச் சிறுக எதிர்மறை எண்ணங்களை வளரவிட்டிருப்போம். ANT என்று சுறுக்கமாகச் சொல்லப்பட்டு Automatic Negative Thoughts தான் அவைஅதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட வேண்டும் இல்லைஎனில் ஆக்டோபஸ் கரங்கள் கொண்டு நம்மை ஆக்ரமித்திருக்கும்இந்நிலையில்மனத்தை துயர் அடையச் செய்யும் பழைய எண்ணங்கள் மீண்டும் மீண்டும்நம்மை அறியாமல் மேல் எழும்பி வரும்அதிலிருந்து தப்பிக்கநீங்கள் என்னசொன்னாலும் காது கொடுத்துக் கேட்க கூடிய நெருங்கிய நண்பரோ உறவினரோஇருந்தால் அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள் வளர்ப்புப் பிராணி வீட்டில்இருந்தால் அவற்றுடன் அதிக நேரம் செலவிடுங்கள்உடற்பயிற்சி அல்லதுபூங்காவிற்குச் சென்று நடைபயிற்சி செய்யத் தொடங்குங்கள்புது வகையானஉணவை சமைத்து சாப்பிடுங்கள்புதிய எந்த விஷயத்தையாவது கற்றுக்கொள்ளுங்கள்அல்லது உங்களால் முடிந்தால் மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள் மால்கள் அல்லது கடைகளுக்குச் சென்று உங்களுக்குபிடித்தமானவற்றை வாங்கிக் குவியுங்கள்இனிப்பு பலகாரங்களை உணவில்சேர்த்துக் கொள்ளுங்கள் இவை எல்லாம் வாழ்தலுக்கான பற்றினைஉங்களுக்கு ஏற்படுத்தும்பழைய நினைவுகள் காலப்போக்கில் மறையத்தொடங்கி மனத்தில் உற்சாகம் மீண்டு(ம்வரும்.


சும்மா இருக்காதீர்கள்


பிரிவுதுரோகம்இழப்புமரணம்துக்கம் இவையெல்லாம் எதிர்பாராது வருபவைஇவை தவிர்த்து மனித வாழ்க்கை இல்லைமரணம் இல்லாத வீட்டிலிருந்து ஒருபிடி கடுகு வாங்கி வாஉன் மகனின் உயிரை மீட்டுத் தருகிறேன் என்று பெற்றமகனைப் பறி கொடுத்த தாயிடம் புத்தர் சொல்வார்அதெப்படி சாத்தியம்எனவேஉணர்ச்சிகளை மேலெழுப்பும் நிகழ்வுகளில்  மனத்தை தளர விடாதீர்கள்எதிர்மறை எண்ணங்கள் மனத்தை ஆக்கிரமிக்கும் சமயங்களில் அதிலே உழன்றுகொண்டிருக்காமல் மீள என்ன வழி என்று யோசிக்க தொடங்குகள்அதைஎதிர்த்து போராடிக் கொண்டிருந்தால் இன்னும் வலி அதிகரிக்கும்காலப்போக்கில் காயங்கள் மாறிவிடும்எந்த வேலையும் செய்யாமல் சும்மாஇருந்தால் மனம் துருப் பிடித்துவிடும்நாளாவட்டத்தில் கடுமையான மனஅழுத்தம் ஏற்பட்டுவிடும்எனவே இதைத் தவிர்க்க உங்களுக்கு ஆர்வமானவிஷயங்களில் ஈடுபடுங்கள்புத்தகங்கள் படிப்பதுநகைச்சுவை நிகழ்ச்சிகளைப்பார்ப்பதுஅல்லது வண்டி ஓட்டுவது என உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒருவிஷயத்தில் ஆர்வம் செலுத்தி உங்களை நீங்களே தற்காலிகமாக காத்துக்கொள்ளுங்கள்அதன் பின் மெல்ல அந்நிலை மாறும்உங்கள் மனது ஓரளவுக்குச்சமாதானம் ஆகும்.


பயணம் செய்யுங்கள்


மனத்துக்கு மகிழ்வளிக்கும் சில விஷயங்களுள் ஒன்று இயற்கையுடன் சற்றுநேரம் மனம் கலந்திருப்பதுதான்அருவிமலைச் சாரல்கடல்தொன்மையானகட்டிடங்கள்கோவில் கோபுரங்கள்ஸ்தூபிகள் அழகியல் விஷயங்களில்ஈடுபடுகையில் மனம் எதிர்மறையாகச் செல்லாமல் நேராக இயங்கும்நம்மைமீறிய சக்தியான இயற்கையை தரிசிக்கும் போது மனித வாழ்க்கை எவ்வளவுகுறுகியது என்று நினைத்து வாழும் காலம் வரை வாழ்க்கையை இனிமையாககழிக்கத் தோன்றும்பயணம் மனத்தை விசாலமாக்கும்எண்ணங்களைவிரிவடையச் செய்யும்குறிப்பிட்ட வாழ்நிலை சூழல்களில் சலித்துப் போனமனத்துக்கு ஒத்தடம் அளித்து மீண்டும் உற்சாகமாக பயணம் செய்ய ஊக்கம்தரும்.  


உடனே அழித்துவிடுங்கள்!


எதிர்மறை எண்ணங்களை போக்குவது துணியைத் துவைத்து காய வைப்பதுபோல் அத்தனை சுலபமானது அல்லஆனால் துணியில் ஏற்பட்ட கறை நன்றாகதுவைத்த பின் சுத்தமாவதைப் போல மனத்தையும் தெளிவாக்க முடியும்இதுசற்று பழைய வழக்கம் தான்ஆனால் முயற்சித்துப் பாருங்கள்ஒரு வெள்ளைத்தாளை எடுத்து உங்கள் மனத்தை கஷ்டப்படுத்தும் விஷயங்களை வரிசையாகஎழுதுங்கள்அதன் பின் அந்த பேப்பரை எரித்து சாம்பலாக்கிவிடுங்கள்அல்லதுஒரு வொய்ட் போர்ட்டில் இதை எழுதி அழித்துவிடுங்கள்நானே நொந்துபோயிருக்கேன்என்னால முடியாது போன்ற எதிர்மறைச் சொற்களைமனத்திலிருந்து அழித்துவிடுங்கள்உள்ளே உறைந்து கிடக்கும் குப்பையானநினைவுகளை வேறெப்படி நீக்குவதுஇப்படி புறத்தில் அவற்றை அழித்துப்பழிகினால் நாளாவட்டத்தில் அகத்திலும் துயர் நீங்கி மனம் புத்துயிர் பெறும்.


தினமும் யோகா அல்லது தியானம் செய்யத் தொடங்கினால் எதிர்காலத்தில் இதுபோன்ற எந்த பிரச்னை ஏற்பட்டாலும் எவ்வித தன்முனைப்பும் இன்றி எதையும்ஏற்றுக் கொள்ளும் பக்குவம் ஏற்படும்.


அதை ஒரு பாடமாக ஏற்றுக் கொள்ளுங்கள்


சிந்தனையாளர் நீட்சே சொல்வது போல, ’எது நம்மை கொல்லாமல் விடுகிறதோஅது நம்மை பலமானவர்களாக்கிவிடுகிறது’ மேற்சொன்ன எந்த விஷயமும்உங்கள் துயரிலிருந்தோ மனக் குழப்பத்திலிருந்தோ அல்லது வேறு எந்தஎதிர்மறை சிந்தனைகளிலிருந்தும் உங்களை காப்பாற்ற முடியவில்லை என்றால்ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நம்புங்கள்அது தற்காலிகமானது தான்அது கடந்துபோகக் கூடியதுதான் எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு  பிரச்னை என்று உடைந்துபோகக் கூடாதுகாரணம் அது நமக்கு ஏதோ ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவேவந்துள்ளது என்று நினைத்துக் கொள்ளுங்கள்இதுவே நேர்மறைஎண்ணத்துக்கான முதல் படி.


ஒவ்வொரு நாளும் கடவுள் நமக்குக் கொடுத்த வரம்ஆலிஸ் அண்ட் டேவிட் என்றமலையாளத் திரைப்படத்தில் ஒரு காட்சிடேவிட் விபத்தில் சிக்கி கோமாவில்இருக்கும் சமயத்தில் அவன் மனத்துக்குள் ஆழமான கற்பனை காட்சிகள்தோன்றும்அதில் அவனை இறுதி யாத்திரைக்கு அழைத்துச் செல்ல கடவுளின்பிரதிநியான பீட்டர் வந்திருப்பார்பீட்டர் அவனிடம் பாவ புண்ணியக்கணக்குகளையும் அதுநாள் வரை அவன் செய்த பிழைகள் சிலவற்றையும் சுட்டிக்காட்டுவார்ஒரு மனிதன் வாழும் நாட்கள் குறைந்தது 60 வயது வரை என்றுகணக்கிட்டுப் பார்த்தால் அதில் பாதி நேரம் அவன் உறங்குவதற்கும்பல மணிநேரங்கள் சாப்பிடவும் வேலை செய்யவும் போய்விட எஞ்சி இருக்கும் குறைந்தநேரத்தில் தன்னைப் பற்றியும் தான் செய்த தவறுகளை அல்லது செய்யத் தவறியசரிகளைப் பற்றி நினைத்து ஆலோசிக்க அவனுக்கு எங்கே நேரம்இருந்திருக்கிறதுஎன்று கேட்பார்உண்மையில் நமக்கு கிடைத்த வரமாகியஇந்த வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் சரியாக வாழ்ந்துவிட்டால்விழிப்புணர்வுடன் இருந்தால் ஒருபோதும் நம்மை எவ்வித எதிர்மறைஎண்ணங்களும் அருகே வராது.


நமக்கான வரங்களை கேட்டு வாங்கிக் கொள்ளவே வாழ்க்கைசாபங்களைவரவேற்காமல் சந்தோஷங்களுக்கு வழி அமைப்போம்நம்முடைய உள் மனத்தின்அமைதிக்கான சாவி வேறெங்கும் இல்லைநம் கைகளில் தான் உள்ளதுதிறப்பதும்மறுப்பதும் நம் விருப்பம்.

No comments :

Post a Comment