Saturday, July 1, 2023

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1876 to 1890

1876. பொருளைத் தேடி அலைவதால் வாழ்க்கை தரம் உயர்வதில்லை. தரமான வாழ்வு என்பது அவரவர் பெற்றிருக்கும் மனநிறைவைப் பொறுத்த விஷயம்.


1877. மனம் தியானத்தில் நிலைத்து நிற்க வேண்டுமானால், இறைவனின் திருவடிகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.


1878. அது வேண்டும், இது வேண்டும் என்று ஏதாவதுஒன்றைத் தேடி அலையும் வரையில், எத்தனை பணம் இருந்தாலும் அவனை பரம ஏழை தான்.


1879. சுவரில் எறிந்த பந்து திரும்புவது போல, மனதில் நிறைவேறாத ஆசைகளே கோபமாகத் திரும்பி, நம்மைப் பாவச் செயல்களில் தள்ளிவிடுகிறது.


1880. பழைய பாவங்களுக்குப் பரிகாரம் தேடுவதை விட, புதிய பாவச்சுமை சேராமல் பார்த்துக்கொள்வது அவசியம். அதற்கு ஒரே வழி இறைவனின் திருவடியைச் சரணடைவது.


1881. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்கிற பஞ்ச பூதங்களை, கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஐம்புலன்களால் உணரப்படுவதே பக்தி ஆகும்.


1882. மனிதன் பழக்கத்திற்கு அடிமை. பூ விற்பவருக்கு மீன் வாடை தலைவலி தரும். மீன் விற்பவருக்கு பூவின் வாசம் வேதனை தரும். இது இயற்கை.


1883. வாழ்க்கை தத்துவம்: இளமைக்காலத்தில் முன்னேற துணிவு வேணும். முதுமைக்காலத்தில் காப்பாற்ற வாரிசு வேணும்.


1884. மழை பெய்யும் வரை தான் ஒரு குடையின் உபயோகம். மழை நின்றுவிட்டால் அந்தக்குடையே ஒரு சுமைதான். புரிந்தால் சரி.


1885. வானவில்லை ரசிக்க வேண்டும் என்றால் மழையைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு சுகத்தை அடைய ஒரு கஷ்டத்தை அனுபவிக்கத்தான் வேண்டும்.


1886. சனாதன தர்மம் என்பது நித்திய தர்மம், ஒழுங்கு,கடமைகள், நடைமுறைகள் என்று பொருள். இந்துக்களால் பயன்படுத்தப்படும் பெயராகும்.


1887. அவமானம் என்று தனிப்பட எதுவும் கிடையாது. வாழ்க்கை கற்றுத்தரும் கசப்பான பாடத்தைத்தான் நாம் அவமானம் என்று கூறுகிறோம்.


1888. எதிலும் (கடமையைத் தவிர) தனக்கும் அதற்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது கடினம். ஆனால் நிம்மதி கிடைக்கும்.


1889. ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும். பணம் இருந்தாலும் கஞ்சத்தனம் போகாது. குணம் செத்தால் போகும். ரூபம் சுட்டால் போகும்.


1890. வருத்தங்களை தனக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். பிறரிடம் சொல்லக் கூடாது. சந்தோஷங்களை தனக்குள் வைத்துக் கொள்ளக்கூடாது. பிறரிடம் சொல்ல வேண்டும்.

No comments :

Post a Comment