Saturday, April 5, 2025

சிரிப்பு வெடிகள் 22.

கணவன்நேத்து ராத்திரி ஒரு அழகான பொண்ணு என் கனவுல வந்தா


மனைவிதனியா வந்துருப்பாளே


கணவன்அது உனக்கு எப்படி தெரியும்


மனைவிஅவ புருசன் தான் என் கனவுல வந்தானே


-இனி பேசுவ

__________________________


கணவன் : எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,


மனைவி : அப்படியா எங்க இருக்கிங்க..?


கணவன் : "Zoo"ல இருக்கேன்மா.


மனைவி : 👊👊👊

__________________________


மனைவி:உங்களை பார்க்காமலே

கல்யாணத்துக்கு OK சொன்னேன்.

நான் தான் தியாகி...!!


கணவர்உன்னை பார்த்த பின்னாலும், கல்யாணத்துக்கு OK சொன்னேன். நான்தானே பெரிய தியாகி....!!!

__________________________


மனைவிநேத்திக்கு நான் வைரத் தோடு கேட்டப்ப முடியவே முடியாதுன்னுதலையை அங்கிட்டும் இங்கிட்டுமா ஆட்டுனீங்க.. இப்ப மட்டும் வாங்கிவந்திருக்கீங்க...?


கணவன் அதுவா...பொண்டாட்டி ஆசைப்பட்டதை வாங்கித் தராட்டிஅடுத்தஜென்மத்திலேயும் அவளே பொண்டாட்டியா வருவானு பெரியவங்கசொன்னாங்க.. அதான்எதுக்கு வம்புன்னுதான் .. !


மனைவி: !!!!!!!!!!!!!!!


__________________________


மனைவிஏங்க இறந்து போனதுக்கு அப்புறம் பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்குபோவாங்களாமேஅப்படியா?


கணவன்அப்படித்தான் சொல்றாங்க..


மனைவிஅப்ப நீங்க எங்கே போவிங்க?


கணவன்நீங்க எல்லோரும் அங்கே போயிட்டா இங்க எங்களுக்குசொர்க்கம்தானே?

__________________________


மழைமனைவி - இரண்டிற்கும் என்ன ஒற்றுமை???


ரெண்டுமே இல்லாதப்போ எப்ப வரும்ன்னு ஏங்குவோம்..

வந்தா ஏண்டா வந்ததுதுன்னு புலம்புவோம்.

__________________________


மின்சாரம் இல்லாதபோது

ஃப்ரிஜில் இருக்கிற பொருள்களுக்கு

குளிர்விட்டு போயிடுது...!!


சம்சாரம் இல்லாதபோது

வீட்டில் இருக்கிற கணவனுக்கு

குளிர்விட்டு போயிடுது,,!

__________________________

No comments :

Post a Comment