Wednesday, December 4, 2024

மினிமலிஸம் / minimalism.

மினிமலிஸம் - நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை! மினிமலிஸ்ட் வாழ்க்கை வாழ்வதற்கான வழிகள் என்ன? 


1 - பட்ஜெட் போட்டு வாழப் பழகுதல். - மினிமலிஸ வாழ்க்கையில் முக்கியமானது இதுதான். நம்முடைய வரவுக்கு மேல் ஒரு பைசாக்கூட செலவழிக்கக் கூடாது. அதற்கு ஒரே வழி திட்டமிடல். செலவழிக்கிற ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.


2 - குறைவான பொருள்களில் வாழ்வது - வீட்டு பீரோவில் 30 சட்டைகள் அடுக்கி வைத்திருப் போம். ஆன்லைனில் புதிய ஆஃபர் ஒன்றைப் பார்த்ததும் இன்னொரு சட்டை வாங்க ஆசை வரும்... அப்படி இல்லாமல் நம்மிடம் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன, அதை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பட்டியலிட்டு வைத்துக்கொள்வது, அவசிய மில்லாமல் இருக்கிற பொருள்களையே மீண்டும் மீண்டும் வாங்குவதைத் தடுக்கும்.


3 - வருங்காலத்திற்குத் திட்டமிடல் - மெடிக்கல் இன்ஷூரன்ஸ் மாதிரி விஷயங்கள் மிகமிக முக்கியம். அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்டை மாதந்தோறும் கட்டாயம் பொறுமையாக வாசித்து எது தேவை, தேவையில்லை என்பதை முடிவு செய்து அடுத்தடுத்த மாதங்களில் கட்டுப்படுத்துதல். வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை வெவ்வேறு முதலீட்டுத் திட்டங்களில் போட்டுவைப்பது.


4 - ஒவ்வொரு பர்ச்சேஸையும் கேள்வி கேட்பது - எதை வாங்குவதாக இருந்தாலும் அதை வாங்குவதற்குமுன் இது எனக்கு அவசியம்தானா... இது இல்லாமல் வாழ முடியுமா... முடியும் என்றால் எத்தனை நாளைக்கு என்பதைக் கணக்கிட்டு அதற்கு பிறகும் அந்தப் பொருளை வாங்குகிற உந்துதல் இருந்தால் மட்டும் வாங்குவது.


5 - அடுத்தவர்களுக்கு வழங்குவது - உலகில் மிகப் பெரிய மகிழ்ச்சி அடுத்தவர் களுக்கு உதவுவதுதான் என்பது வாரன் பஃபெட் தொடங்கி பில்கேட்ஸ் வரைக்கும் அத்தனை பேருமே பின்பற்றுகிற சீக்ரெட் ஃபார்முலா. மாதந்தோறும் முடிந்த அளவு தொகையைப் பிறருக்கு கொடுங்கள் அதுவே உங்களைத் திருப்தியாக வாழவைக்கும்.


இந்த ஐந்து கட்டளைகள் நம்முடைய செலவுகளைக் குறைப்பதுடன், சேமிப்பையும் அதிகப்படுத்தும் கூடவே குறைந்த செலவில் திருப்தியான வாழ்வை வாழவும் உதவும். இப்படித்தான் நம் பெற்றோர்கள் வாழ்ந்தார்கள். அதனால்தான் அவர்களால் சிறிய வருமானத்திலும் சிறப்பாக வாழமுடிந்தது. 


“மினிமலிசம் என்றாலே எல்லோரும் நினைக்கிறார்கள், நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் குறைத்துக்கொள்வது என்று. உடை, கருவிகள். நுகர்வுப் பொருட்கள் என்று எல்லாவற்றையும். ஆனால், நாங்கள் சொல்கிறோம் மினிமலிச வாழ்வியல் உங்களுக்கு வாழ்க்கையில் பலவற்றைப் பெருக்கிக்கொள்ளும் வாய்ப்பைத் தருகிறது. நிறைய நேரம், நிறைய படைப்புத்திறன், நிறைய சுதந்திரம். தேவையற்றதும், ஆடம்பரமானதும், உங்கள் மீது திணிக்கப்படுபவையுமான பொருட்களைச் சேர்த்துக்கொண்டே இருக்கும் இந்த நுகர்வுக் கலாச்சார வாழ்க்கைக்காக உழைப்பதின் மூலமும், ஓடிக்கொண்டே இருப்பதன் மூலமும் நீங்கள் இழப்பது உங்கள் நேரத்தையும், சுதந்திரத்தையும், படைப்புத்திறனையும்தான். மினிமலிச வாழ்வியல் இவற்றை நிறையவே உங்களுக்குப் பெற்றுத்தரும்".

No comments :

Post a Comment