Sunday, December 8, 2024

நாட்டு வைத்தியம் 1.

1. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிதுவெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும்.


சர்க்கரை வியாதிக்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து பாகற்காயை கழுவிவட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கிநிழலில் காய வைத்துமிக்ஸியில்அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும்.


குறிஞ்சாக் கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும்.


2. மாங்கொட்டையின் பருப்பை உலர்த்திநன்றாகப் பொடி செய்துதேன்சேர்த்து சாப்பிட்டு வந்தால்வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளிவந்து விடும்மூல நோயும் குணமாகும்மாத விடாய் அதிகமாக போவதும் நின்றுவிடும்கொசுக்களை விரட்ட மாம்பூக்களைப் பொடி செய்துசாம்பிராணி போலபுகைபோட்டால் கொசுக்கள் ஓடி விடும்.


3. இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய்கட்டுப்படும்இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்துகுடித்தால் வாந்தி நிற்கும்அஜீரணத்துக் இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித்தடவலாம்.


4. கொத்துமல்லி தழையை அரைத்து சர்க்கரை போட்டு பால் சேர்த்து தினம் 100 கிராம் சாப்பிட மன நோய் நீங்கும்மல்லி நீரால் கண்களைக் கழுவ கண்கள்பளிச்சிடும்தாகத்தைத் தணிக்கும்பல் வலிஈறு வீக்கம் ஆகியவை கட்டுப்படும்இதன் விதை எண்ணெய் சுளுக்கு நீக்கியாகப் பயன்படும்.


5. பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப்பிட்டாலும் வாயுத் தொல்லைவயிற்று உப்புசம் குறையும்இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சிஅதைத்தேய்த்தால் வாத வலி போகும்பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப்பிழிந்து சுளுக்குக்குத் தடவசுளுக்கு விட்டுப் போகும்.


6. சிரங்கு தொல்லையா?

சிரங்கு : 100மி.லி., தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டுநன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ நல்ல குணம் கிடைக்கும்.


7. தினமும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம்செய்துபச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும்பித்தமும் நீங்கும்.


8. இரவின் பூவன் பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்துஅதில்சீரகத்தை வைத்து மூடி வைத்துஅதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரமூலவியாதி முச்சு காட்டாது.


9. சீரகத்தை நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால்தலை பாரம்பித்த மயக்கம் நீங்கும்.


10. வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்றுவலி தீரும்.


11. நீங்கள் பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலிஉள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.


12. தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக்தேயுங்கள்அதில் உள்ள அமிலம் கரும்புள்ளிகளைக் கரைத்துவிடும்.


13. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய்முருங்கைக் கீரைமுள்ளங்கி ஆகியவற்றைஉணவில் சேர்த்துக் கொண்டால் கைகால்முகம்பாதம் வீக்கம் வராதுகுழந்தைப் பேறு எளிதாக அமையும்.


14. தக்காளிகோஸ்கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.


15. கசகசாவை நைசாக அரைத்து குழந்தையின் தொப்புள் சுற்றி தடவினால்குழந்தையின் அழுகை நின்றுவிடும்.


16. மெலிந்த உடல் பெருக்க கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பதுநாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.


17.தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியைசாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்.


18. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கிபனங்கற்கண்டு சேர்த்து காலைமாலை ஒரு தேக் கரண்டி சாப்பிடவயிற்றின் சுற்றளவு குறையும்.


19. மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும்.


20. சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலிகுறையும்.


21. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்துசிறிது வெல்லம்சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.


22. கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்துசாப்பிட மூலம் தீரும்.


23. இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்தகுணமாகும்எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.


24. சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காதுசாப்பிட்டபின் அருந்தினால்பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும்நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.


25. வயிற்றுவலியாஒரு டம்ளர் கொதிநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்துகுடித்தால் 1/4 மணி நேரத்தில் வலி பறந்துவிடும்.


26. காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள்மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்துஇரவில் அருந்தினால் இருமல் குணமாகும்கற்கண்டுடன் ஜீரகம் சேர்த்துசாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.


27. உடல் அசதியாமுருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில்போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.


28. காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.

No comments :

Post a Comment