Friday, February 22, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1126 TO 1140

1126. அப்போது பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மஹாபாரதம், ராமாயணம் போன்ற புராணங்களில் இருந்து உதாரணம் காட்டி அறிவுரைகள் கூறுவார்கள். இப்போது?

1127. சாந்தமும், நல்ல குணமும், தப்பு வழியே இல்லாமல் சரியானபடி போகும் போக்கும், அந்தக் காலத்தில் இருந்தன. இப்போது அந்த நிலை மாறி விட்டது.


1128. 
மஹாபாரதத்தில் எது இல்லை? கீதைக்கு ஸ்ரீகிருஷ்ணர், பொறுமைக்கு தர்மர்,சத்தியத்திற்கு பீஷ்மர்,தானத்திற்கு கர்ணன்,வீரத்திற்கு அர்ஜுனன்.

1129. 
சத்தியமும்,நீதியும், தர்மமும் மக்களுடைய மனதில் நிலை நிறுத்தப்பட வேண்டும்.அப்படி நிலை நிறுத்த புராணங்களே மிகவும் உதவியாக இருக்கும்.

1130. பொதுவாக வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்பட்டுவிட்டால் அப்புறம் அதன் ஒவ்வொரு துறையிலுமே ஒழுக்கத்தினால் உண்டாகிற அழகும் ஏற்பட்டு விடுகிறது.


1131. தர்மம், நீதி இரண்டும் சேர்ந்துதான் பண்பு.அந்த பண்பாட்டை மாற்றுவதற்கும், குலைப்பதற்கும் இப்போது எத்தனையோ ஏற்பாடுகள் வந்திருக்கின்றன


1132. இறைவன் நமக்கு கை கொடுத்திருக்கிறார்;கால் கொடுத்திருக்கிறார்;கண் கொடுத்திருக்கிறார். ஆலோசிப்பதற்குப் புத்தியும் கொடுத்திருக்கிறார்.


1133. மற்றவர்களுடைய சந்தோஷத்திற்காக வாழ்பவர்கள், சந்தோஷமாக இருக்கிறார்கள். தனது சந்தோஷத்திற்காக மட்டும் வாழ்பவர்கள், கஷ்டப்படுகிறார்கள்.


1134. ஜனங்கள் வழி தெரியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும்போது, அநேக கட்சிகள் அவர்களுடைய புத்தியைப் பலவிதமாகக் குழப்பிக் கொண்டிருக்கின்றன.


1135. தினம் காலையில் எழுந்தபின், பல் விளக்கிவிட்டு, ஒரு ஐந்து நிமிடம் இறைவனை தியானம் செய்தால், மனதில் நல்ல எண்ணங்கள் தோன்ற வாய்ப்புண்டு.


1136. 
பசிக்கிறது. கையில் இருபது ரூபாய் மட்டும் இருக்கிறது. எந்த உணவு சாப்பிடலாம் என்று யோசிப்பது போல எந்த நெருக்கடியிலும் யோசிக்க வேண்டும்.

1137. வாழ்நாள் முழுவதும் கெட்ட வழிகளில் வாழ்ந்து விட்டு கடைசி காலத்தில் பெரிய ஞாநி போல உபதேசம் செய்பவரை போற்றுதல் கூடாது. அது வீண் வேலை.


1138. தண்ணீர் பல அளவில் உண்டு. சொட்டு, டம்ளர், பானை, கிணறு, ஆறு, கடல், சமுத்திரம் என்று. அறிவும் அப்படித்தான். நமக்கு எந்த அளவு அறிவு?


1139. நேரத்திற்கு பசி எடுக்கிறது.தினம் காலையில் இயற்கை உந்துதல் ஏற்படுகிறது. இரவு தூக்கம் நன்றாக வருகிறது.இவை நல்ல ஆரோகியத்தின் அறிகுறி.


1140. தம்மையும் உயர்த்திக்கொண்டு, வாசகர்களையும் உயர்த்த வேண்டும், என்கிற கடமையைப் பத்திரிக்கையாளர்களும் எழுத்தாளர்களும் பெற வேண்டும்.




Wednesday, February 20, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1111 TO 1125

1111. நாட்டில் நடக்கும் எதையும் கிண்டல் செய்து எழுதுவதால் ஏற்படும் ஒரு சிறந்த லாபம் என்னவென்றால்,அவர் எந்த பக்கம் என்று நமக்கு தெரியாது.

1112. நாம் எழுதியதை மறுபடியும் ஒருமுறை படித்துப் பார்த்துத் தவறுகளைத் திருத்த வேண்டும். இல்லாவிடில், மற்றவர் நகைப்பதற்குக் காரணமாகும்.


1113. டாக்டராக தொழில் செய்வது கடினமான வேலை. நோயாளிகளையும் கவனிக்க வேண்டும், குடும்பத்தையும் கவனிக்க வேண்டும். எப்படி சமாளிக்கிறார்களோ!!!


1114. ஒருவருடைய தேசிய உணர்வு அவரது வாழ்க்கைத் தரம், வளர்ப்பைப் பொறுத்து அமையும். சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கும்.


1115. உரிமையைக் கேட்பது போல, கடமையையும் செய்ய வேண்டும். தவறை சுட்டிக் காட்டுவது போல நியாயத்தைப் பாராட்டவும் வேண்டும். அதுதான் நல்ல பண்பு.


1116. ஒரு பிரச்சனையை இருவிதத்தில் அணுகலாம். தன்னிலை, முன்னிலைப் படுத்தி. முதலாவதில் நமது தவறு தெரியாது. இரண்டாவதில் நமது தவறு தெரியும்.


1117. பரத நாட்டியமும், கிராமீய நடனமும் திரைப்படங்களில் காம உணர்ச்சியைத் தூண்ட முடியாததால், அதற்கு பதில் நவீன சல்சா நடனம் வந்திருக்கிறது.


1118. ரெடிமேட் துணுக்குகளில் ஒத்துக்கொள்ள முடியாத கருத்துக்கள் எவ்வளவோ இருக்கின்றன.அதனால் சொந்தமாக கற்பனை செய்து எழுதுவது சாலச் சிறந்தது


1119. காய்க்கும் மரம்தான் கல்லடி படும்.இறைவன் இருக்கின்றார்.இந்திய தேசம் முன்னேற வேண்டுமா அல்லது வேண்டாமா என்று அவருக்குத்தான் தெரியும்.


1120. நீ 90 மார்க் வாங்கினால்,நான் 90 மார்க் வாங்கியுள்ளேன் என்று மலை மேல் நின்று உரக்க கத்து.அடுத்தவன் வாங்கிய 30 மார்க்கை பற்றி பேசாதே


1121. எல்லாம் ஒரு காரணத்திற்காகத்தான் நடக்கிறது என்ற ஞானம் வந்துவிட்டால் லாப நஷ்டம்,வெற்றி தோல்வி, இன்ப துன்பம் எல்லாம் ஒன்றாக தெரியும்.


1122. சிலர் அதிகாரத்தைப் பெறுவதற்கு தேர்தலில் நிற்கிறார்கள்.சிலர் மக்களுக்கு சேவை செய்ய நிற்கிறார்கள்.மக்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும்

1123. நடிகர்கள் தேர்தலில் வெற்றி பெற நல்ல இமேஜ் வேண்டும். என்.டி.ஆர். "கிருஷ்ணா"இமேஜிலும், எம்.ஜி.அர் "ஏழைப்பங்காளர்" இமேஜிலும் வென்றனர்


1124. என்னிடம் யாராவது அன்பாகப் பேசினால் உருகிப் போய்விடுவேன். அவர்கள் சுயருபம் மாறி விட்டால் இறுகிப் போய்விடுவேன். மனம் கருகிப் போகும்.


1125. தனது தேசம்,நாடு,மொழி, மதம்,சாதி, கட்சி,தலைவர்,கொள்கை, எதைப்பற்றியும் பாராட்டி எழுதலாம்.பிறரை வசை பாடக்கூடாது.அது என் குறிக்கோள்.

Monday, February 18, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1096 TO 1110

1096. ஆயிரம் சாதிகள், ஆயிரம் பிரிவுகள், ஆயிரம் தெய்வங்கள், ஆயிரம் வழிபாடுகள், ஆயிரம் கொள்கைகள், ஆயிரம் நம்பிக்கைகள், ஆயிரம் பிரச்சனைகள்.

1097. பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகும் போது விதவிதமாக கண்ணை கவரும்படி ஆடை அணிகிறார்கள். வீட்டில் இருக்கும்போது அப்படி அணிவதில்லை ஏன்?


1098. காஷ்மீர் பிரச்சனையால் நமது நாட்டின் பாதுகாப்புக்கு கோடிக்கணக்கான பணமும், லக்ஷக்கணக்கான உயிர் பலியும் ஆகிறது. இதற்கு தீர்வு என்ன?


1099. காஷ்மீர் பிரச்னை70 வருடங்களாக இருக்கிறது.எந்த நாட்டுடன் சேரவேண்டும் என்று முடிவு எடுப்பதை காஷ்மீர் மக்களிடம் விட்டு விட்டால் என்ன?


1100. ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இல்லாவிட்டால், வெளி மனிதர்கள் குடும்பத்தில் குழப்பம்,சண்டை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்.


1101. மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரியல்ல.ஏற்றத் தாழ்வுகள் கண்டிப்பாய் உண்டு.சுண்டு விரல் சிறியதாய் இருப்பதால் யாரும் வெட்டி விடுவதில்லை.


1102. பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை இவை மூன்றும் மக்களிடையே இப்போது அதிகம் ஆகிவிட்டது தான், நாட்டில் எல்லா விதமான கோளாறுகளுக்கும் காரணம்.


1103. இந்திய மக்களுக்கு பொருளாதார அறிவோ பணவீக்கம் என்றால் என்னவென்றோ தெரியாது. அதை அவர்கள் புரிந்து கொள்வதுமில்லை. நியூயார்க் டைம்ஸ்.


1104. கருப்பு நிறத்திற்கு ஒரு தனி அழகுண்டு. கசப்பிற்கு ஒரு தனி ருசி உண்டு. கரிய நிறப் பெண்கள் அழகானவர்கள். கசப்பான பாகற்காய் மருந்தாகும்


1105. ஒரு நாட்டின் பிரச்னை அந்த நாட்டை சேர்ந்தது.இரு நாடுகளின் பிரச்னை ஐநா சபையை சேர்ந்தது.வேறு நாடு தலையிட்டால் தீவிரவாதம் முளைக்கிறது.


1106. நமது நாட்டில் ஹிந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதத்தினர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நட்பாக வாழ்ந்தால் தீவிரவாதம் உள்ளே நுழைய முடியாது


1107. அந்தக் காலத்திலிருந்து இந்த காலம் வரை நம்மிடம் ஒற்றுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. அதனால் தீவிரவாதிகள் உள்ளே நுழைவதில் ஆச்சரியமில்லை


1108. மதச்சார்பின்மை என்றால் ஒரு மதத்தை மட்டும் சாராமல் எல்லா மதங்களையும் வளர்ப்பது. எந்த மதத்தையுமே வளர்ப்பதில்லை என்று அர்த்தம் இல்லை.


1109. டிவி சீரியல்களில், திரைப்படங்களில் பெண்களைக் கெட்டவர்களாகக் காட்டுவதால், அவர்கள் மேல் உள்ள இரக்கம்  குறைவதற்கு சந்தர்ப்பம் உள்ளது.


1110. இப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மிகவும் அன்பாக இருப்பதால், குழந்தைகள் தாத்தா பாட்டியிடம் அதிகம் நெருக்கம் காட்டுவதில்லை.












Friday, February 15, 2019

சந்தோஷமாக வாழ என்ன வழி ?/ HOW TO LEAD A HAPPY LIFE?

தந்தை,தாய்,மகன்,மகள், மருமகள், மருமகன் சேர்ந்தது குடும்பம். இவர்கள் சந்தோஷமாக இருக்க என்ன வழி என்பதை அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

A family consists of father, mother, son, daughter, daughter in law, and son in law. Let us see how they can live happily in the following points.


இந்த ஆறு பேரும் குடும்பத்தின் அச்சு. சட்ட வாரிசுகள். பரஸ்பர அன்பு, மரியாதை, விட்டுக் கொடுத்தல், உதவி செய்தல்,ஒற்றுமையை வளர்க்கும்.

These six people are the fulcrum of the family. They are the legal heirs. Mutual love, respect, give and take and extending help will develop understanding.


மற்ற உறவினர்களால் குடும்பத்தில் எவ்விதக் குழப்பமும், பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க, புறக்கணிக்க வேண்டியது ஒவ்வொருடைய கடமையாகும்.


When other relatives to the family create any problem or trouble, these six people should take steps to ignore and to protect their unity.


திருமணம் ஆகாத குழந்தைகள் தங்களுடைய வருமானத்தில் தங்கள் அவசிய தேவை போக மீதியை பெற்றோர்களுக்கு மாதாமாதம் கண்டிப்பாக அனுப்ப வேண்டும்.


Unmarried children should send their entire salary every month to their parents after keeping just the minimum for their expenses.


திருமணம் ஆகிய குழந்தைகள் தங்கள் வருமானத்தில், அதிக பட்சம் முடிந்த அளவு, மாதாமாதம் பெற்றோர்களுக்கு கண்டிப்பாக பணம் அனுப்ப வேண்டும்.

Married children should try to send money to their maximum capacity from their earnings every month to their parents 

குழந்தைகளின் திருமணத்திற்குப் பிறகு பெற்றோர்கள் முடிந்தவரையில் தனியாக வாழ வேண்டும். தங்கள் எதிர்காலத் தேவைக்கு சேமிக்க வேண்டும்.

After the marriage of the children, the parents should try live independently until they can manage and save for their future.


தனியாக வாழும் பெற்றோர்களுக்கு குழந்தைகள் பணம் அனுப்புவது மட்டும் இல்லாமல், அவர்களுடன் தொலைபேசியில் பேசி நலம் விசாரிக்க வேண்டும்.


The children apart from sending money to their parents every month, should also talk to them over phone and inquire about their health etc.

திருமணமான குழந்தைகள் அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள் நமக்கு துளியும் சம்பந்தம் இல்லை என்ற ஞானம் பெற்றோர்க்கு வர வேண்டும்.

The parents should understand that the children are leading their own life and that they have no connection whatsoever with them.

கணவன் மனைவி இருவரிடையேயும் பரஸ்பரம் பிரியம் இருக்க வேண்டும். கருத்து வேற்றுமை வந்தால் தயங்காமல் விட்டுக் கொடுக்க முன் வர வேண்டும்.

There must be mutual love and understanding between the husband wife and in case of any misunderstanding they should not hesitate to compromise.

பெற்றோர்கள் அந்திம காலத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ நேர்ந்தால் எந்தக் காரணம் கொண்டும் அவர்கள் வாழ்க்கையில் தலையிடுதல் கூடாது.

The parents when they decide to live with their children due to old age, should not in any way interfere in the day to day affairs of the children.

குழந்தைகளுடன் சேர்ந்து வாழும்போது, முடிந்த வரையில் அவர்களுக்கு உடல் உதவி செய்து கொண்டு, தங்களுடைய பணத்தில் சந்தோஷமாக வாழ வேண்டும்.

When they live with the childre, they can physically contribute to their maximum and live happily within their money.

பேரன் பேத்திகள் கொஞ்சி விளையாடுவதற்கு மட்டும் தான்.அவர்களை கண்டிப்பதோ,அறிவுரை சொல்வதோ சிறிதும் கூடாது.அது மன வேற்றுமையை வளர்க்கும்

The grand children are only to play with and enjoy. They should not be controlled or advised for whatever reason. This will spoil the harmony of the family.


இந்தக் குறிப்புகளைப் பின்பற்றுவது மிகவும் கடினம். பின்பற்றினால் தானும் சந்தோஷமாக வாழ்ந்து பிறரையும் சந்தோஷமாக வாழ வைப்பது நிச்சயம்


It is very difficult to follow these points. If followed then the parents can live happily and peacefully and also make others happy.

Thursday, February 14, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1081 TO 1095

1081. ஒரு குற்றவாளி நல்லவனாகத் திருந்தி விடலாம். ஆனால் அவன் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் பாவ மன்னிப்பு பெறுவது ஹிந்து தர்மத்தில் இல்லை.

1082. தேய்ந்துபோன சந்திரனக்கும் குளுமையும் பிரகாசமும் இருப்பதால் பரமசிவன் தம் தலையில் தரித்து உலகமெல்லாம் பார்த்து புகழும்படி செய்கிறார்


1083. ஈசுவரனையும் குருவையும் நேராகவும், பந்து மித்திரர்களை பிறரிடமும், வேலையை முடித்த பிறகு ஊழியரையும் பாராட்டலாம்.பிள்ளையை புகழக்கூடாது


1084. சொந்தக் குழந்தைகளை ஒரு போதும் ஸ்தோத்திரம் பண்ணக்கூடாது. அவர்களை இடித்தும் காட்டலாம் என்று சாஸ்திரமே சொல்கிறது.இப்போது அப்படியில்லை.

1085. வழக்கறிஞர்களும், கணக்காயர்களும் நேர்மையை கடைப்பிடிக்காத வரை லஞ்சம், ஊழல், கறுப்புப்பணம், வரி ஏய்ப்பு இந்த நாட்டை விட்டுப் போகாது.


1086. வயதானவர்கள் இரவு உணவை, சூரிய அஸ்தமனத்திற்குள் முடித்து கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறதே நீங்கள் எப்போது சாப்பிடுகிறீர்கள்?


1087. மரத்தை வெட்டுவதற்கு பத்து நிமிடம் மட்டும் கொடுத்தால் என்ன செய்வாய் என்ற கேள்விக்கு முதல் நாலு நிமிடம் கோடாலியை தீட்டுவேன் என்றான்.


1088. ஒருவரிடம் எத்தனை குறை இருந்தாலும் அதைப் பெரிது படுத்தக் கூடாது. அதே சமயம் சிறிது நல்ல குணம் இருந்தாலும் அதை பாராட்டத் தவறக் கூடாது.


1089. ஒவ்வொரு சாதியிலும் பாராட்டும்படி ஒரு தனித்தன்மை உண்டு.ஆனால் பெரும்பாலான பிராமணர்கள் அதை முழுவதும் இழந்து விட்டதாக நான் கருதுகிறேன்


1090. அறிவாற்றலையும் பணம் சம்பாதிப்பதையும் ஒப்பிட்டு பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.இரண்டுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்று தெரியணும்


1091. வருமான வரித் துறை, வரவுக்கு மேல் ஒருவர் சொத்து சேர்த்துள்ளார் என்று நிரூபித்து, நீதி மன்றம் தண்டனை வழங்கினால் தான் குற்றவாளி ஆவார்


1092. குழந்தைகள் பிறக்கும் போதும் சிறுவர்களாக இருக்கும் போதும் நல்ல குழந்தைகளாக தான் இருக்கின்றன.வளர்ப்பு முறையில் இருக்கிறது எதிர்காலம்


1093. பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தைப் பற்றி தெரிந்த விவசாயிகள் அல்லது மற்றவர்கள் எல்லோருக்கும் நன்கு புரியும் படி எழுதலாமே.


1094. ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்று கோஷம் போடுகிறோம். இருவரும் முக்கியம். ஒருவரை மதிக்கிறோம். மற்றவரை மிதிக்கிறோம். ஏன் இந்த வேறுபாடு?


1095. 
சிலருக்கு உபகாரம் செய்யுங்கள். கூச்சமில்லாமல், தயங்காமல் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். யார் பைத்தியக்காரர் என்று தெரியவே தெரியாது.







Tuesday, February 12, 2019

பரமாச்சாரியாரின் பார்வையிலே 4

நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படியே மற்றவர்களும் வாழ வேண்டும்’ என்று நினைப்பது உத்தமமான எண்ணம். ஆனால் எண்ணம் உத்தமமாயிருந்து விட்டால் போதுமா? நாம் டாம்பீகமாக வாழ்க்கை நடத்திக் கொண்டு மற்றவர்களும் அப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது நடக்குமா? 

அப்படியே நடந்து, அமெரிக்கா மாதிரி எல்லாரும் ‘லக்ஷுரியஸாக’ வாழ முடிந்தாலும் அது நல்லதுதானா? லௌகிகமான ஸெளக்யங்கள் ஜாஸ்தியாக ஆக ஆத்மாபிவிருத்திக்கே வழியில்லாமல்தானே ஆகியிருக்கிறது? எத்தனை போட்டாலும் த்ருப்தியில்லாமல் கபளீகரம் பண்ணுகிற நெருப்பு மாதிரித்தான் இந்த ஆசை என்பது. அது எவ்வளவு ஸெளகர்யம் இருந்தாலும் த்ருப்திப்படாமல் இன்னும் புதிசு புதிசாக ஸெளக்ய ஸாதனங்களைத் தேடிக் கொண்டுதான் இருக்கும். 


அத்ருப்தி, குற்றங்கள் இத்யாதியைத்தான் அமெரிக்காவில் பார்க்கிறோம். ஸெளக்ய ஸாதனங்கள் என்று நினைக்கிறவைகளை விட்டால்தான் சாந்தி கிடைக்கும் என்று அங்கே புத்திசாலிகளாக இருக்கப்பட்டவர்கள் புரிந்துகொண்டுதான் த்யானம், யோகம், பஜனை என்று கிளம்பியிருக்கிறார்கள்.


மநுஷ்யனின் ஆத்மாபிவிருத்திக்கு ப்ரதிகூலமாக வெறும் லௌகிக ரீதியில் செய்கிற எந்த உபகாரமும் உபகாரமேயில்லை, அபகாரம்தான். எத்தனைக்கெத்தனை எளிமையாக வாழ்கிறோமோ அத்தனைக்கத்தனை ஆத்மக்ஷேமம். ஆனதால் மற்றவர்கள் எளிய வாழ்க்கையில் இருக்கும்படியாகப் பண்ணுவதுதான் நிஜமான உபகாரம். இதை எப்படிப் பண்ணுவது? நாம் டாம்பீகமாக வாழ்ந்து கொண்டு அவர்களுக்கு உபதேசம் செய்தால் நடக்குமா? 


ஆகையால் நாமே எளிமையாக வாழ்ந்துகாட்ட வேண்டும். அதாவது, ‘நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே பிறரும் வாழவேண்டும்’ என்று நினைப்பதற்கு முந்தி, நாம் எப்படி வாழவேண்டும் என்பதையும் தீர்மானம் பண்ணிக் கொள்ள வேண்டும். ‘ஏழைகள் உள்பட மற்றவர்கள் எல்லோரும் எப்படி வாழ முடியுமோ, எப்படி வாழ்ந்தால்தான் ஆத்மாபிவிருத்திக்கு நல்லதோ, அப்படித்தான் நாமும் வாழவேண்டும்; அதாவது ரொம்ப ஸிம்பிளாக வாழவேண்டும்’என்று முதலில் தீர்மானம் பண்ணிக்கொள்ள வேண்டும்.


வயிறு ரொம்பச் சாப்பாடு, மானத்தைக் காப்பாற்றத் துணி, இருப்பதற்கு ஒரு வீடு — இம்மாதிரியான அடிப்படை (பேஸிக்) தேவைகள் எல்லோருக்கும் பூர்த்தியாக வேண்டும். இதற்குமேல் ஆசைக்குமேல் ஆசை, தேவைக்குமேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை. அப்படி மற்றவர்களைப் பறக்காமல் இருக்கச் செய்வதற்காக நாமும் எளிமையாக வாழவேண்டும்.


-தெய்வத்தின் குரல் 

Wednesday, February 6, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1066 TO 1080

1066. சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இருப்பதுதான்; மனசில் ஒன்றும், வாக்கில் வேறொன்றுமாக இருந்தால், அதுவே அசத்தியம் எனப்படும்.

1067. மனத்தில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக நாம் பேசினால் இறைவன் அடுத்த ஜன்மத்தில் பேசும் சக்தியை பறித்து கொண்டு மிருக ஜன்மத்தை தருவார்.


1068. சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றுபடுவது. மனதிலே தோன்றுகிற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வது.நல்ல விளைவுகளை உண்டக்குவது சத்தியம்


1069. பேச்சினாலும், செயலாலும், எண்ணத்தினாலும் உயிரினங்களுக்கு நன்மையை உண்டாக்குவதே சத்தியம் எனப்படும். கெடுதல் செய்வதெல்லாம் அசத்தியமே.


1070. 
மகன்/மருமகனுடன் உலக நடப்பு, மகள்/மருமகளுடன் ஷாப்பிங், பேரன் பேத்திகளுடன் விளையாட்டு, எல்லோருடனும் அரட்டை, சாப்பாடு. அது சொர்க்கம்.

1071. எனக்கு குடும்பப் பாங்கான, வன்முறை, மது அருந்துதல், ஆபாச நடனங்கள் இல்லாத, நல்ல பாடல்கள்,கருத்துடன் கூடிய திரைப்படம் தான் பிடிக்கும்


1072. பணம் ஒரு இடத்தில் நிலையாக நிற்காது. அது சுற்றிக்கொண்டே இருக்கும்.நம் கையில் இருந்தால் சந்தோஷம்.நம்மை விட்டு போய்விட்டால் வருத்தம்.


1073. 
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்று சொல்வார்கள்.நல்ல குடும்பத்தில் கிடைக்கும் நல்ல விஷயம் அதிகம்.அதைப்பற்றி எழுதுவது சந்தோஷம்.

1074. ஒரு சினிமா ஹீரோவுக்கு உள்ள தகுதிகள் அழகு, வீரம், பாசம், நேர்மை, பரோபகாரம், மது அருந்தாமை, ஒரு நண்பன், ஒரு பெண் மீது காதல். சரிதானே?


1075. 
வரவுக்குள் செலவு செய்து, சேமித்து, தனது குடும்பத்தை சரியான வழியில் நடத்த தெரியாதவர்கள் எல்லாம் மற்றவர்களைக் குறை சொல்வது வேடிக்கை.

1076. அன்பொடு, பரிவோடு, பாசத்தோடு, பிரியத்தோடு, இரக்கத்தோடு ஒருவரை ஒருவர் நேசித்தால், கணவன் மனைவி உறவுக்கு, ஈடு இணை எதுவும் கிடையாது.


1077. என்னிடம் ஏடிஎம் கார்ட், டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட், ஐபோன் எதுவும் கிடையாது என்று நான் சொன்னால் என்னை பற்றி என்ன நினைப்பீர்கள்?

1078. பாதுகாப்பு சிறிதும் இல்லாத சீட்டுக் கம்பெனிகளில் தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை முதலீடு செய்வது பைத்தியக்காரத்தனம்

.
1079. .அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை போல, அதிக வட்டியை நம்பி முதலையே இழப்பது பெரும் வேதனைக்குறியது. பேராசை பெரு நஷ்டம். விதி வலியது.

1080. சேமிப்புகள் செய்ய சிறந்தது வரிசை முறையில்.1.வீடு,நிலம் 2.தபால் நிலையம்.3.அரசு வங்கி.4.தங்ககாசு. 5.ம்யூசுவல் பண்டு.6.பங்கு முதலீடு.