Monday, February 18, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1096 TO 1110

1096. ஆயிரம் சாதிகள், ஆயிரம் பிரிவுகள், ஆயிரம் தெய்வங்கள், ஆயிரம் வழிபாடுகள், ஆயிரம் கொள்கைகள், ஆயிரம் நம்பிக்கைகள், ஆயிரம் பிரச்சனைகள்.

1097. பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகும் போது விதவிதமாக கண்ணை கவரும்படி ஆடை அணிகிறார்கள். வீட்டில் இருக்கும்போது அப்படி அணிவதில்லை ஏன்?


1098. காஷ்மீர் பிரச்சனையால் நமது நாட்டின் பாதுகாப்புக்கு கோடிக்கணக்கான பணமும், லக்ஷக்கணக்கான உயிர் பலியும் ஆகிறது. இதற்கு தீர்வு என்ன?


1099. காஷ்மீர் பிரச்னை70 வருடங்களாக இருக்கிறது.எந்த நாட்டுடன் சேரவேண்டும் என்று முடிவு எடுப்பதை காஷ்மீர் மக்களிடம் விட்டு விட்டால் என்ன?


1100. ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இல்லாவிட்டால், வெளி மனிதர்கள் குடும்பத்தில் குழப்பம்,சண்டை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்.


1101. மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரியல்ல.ஏற்றத் தாழ்வுகள் கண்டிப்பாய் உண்டு.சுண்டு விரல் சிறியதாய் இருப்பதால் யாரும் வெட்டி விடுவதில்லை.


1102. பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை இவை மூன்றும் மக்களிடையே இப்போது அதிகம் ஆகிவிட்டது தான், நாட்டில் எல்லா விதமான கோளாறுகளுக்கும் காரணம்.


1103. இந்திய மக்களுக்கு பொருளாதார அறிவோ பணவீக்கம் என்றால் என்னவென்றோ தெரியாது. அதை அவர்கள் புரிந்து கொள்வதுமில்லை. நியூயார்க் டைம்ஸ்.


1104. கருப்பு நிறத்திற்கு ஒரு தனி அழகுண்டு. கசப்பிற்கு ஒரு தனி ருசி உண்டு. கரிய நிறப் பெண்கள் அழகானவர்கள். கசப்பான பாகற்காய் மருந்தாகும்


1105. ஒரு நாட்டின் பிரச்னை அந்த நாட்டை சேர்ந்தது.இரு நாடுகளின் பிரச்னை ஐநா சபையை சேர்ந்தது.வேறு நாடு தலையிட்டால் தீவிரவாதம் முளைக்கிறது.


1106. நமது நாட்டில் ஹிந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதத்தினர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நட்பாக வாழ்ந்தால் தீவிரவாதம் உள்ளே நுழைய முடியாது


1107. அந்தக் காலத்திலிருந்து இந்த காலம் வரை நம்மிடம் ஒற்றுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. அதனால் தீவிரவாதிகள் உள்ளே நுழைவதில் ஆச்சரியமில்லை


1108. மதச்சார்பின்மை என்றால் ஒரு மதத்தை மட்டும் சாராமல் எல்லா மதங்களையும் வளர்ப்பது. எந்த மதத்தையுமே வளர்ப்பதில்லை என்று அர்த்தம் இல்லை.


1109. டிவி சீரியல்களில், திரைப்படங்களில் பெண்களைக் கெட்டவர்களாகக் காட்டுவதால், அவர்கள் மேல் உள்ள இரக்கம்  குறைவதற்கு சந்தர்ப்பம் உள்ளது.


1110. இப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மிகவும் அன்பாக இருப்பதால், குழந்தைகள் தாத்தா பாட்டியிடம் அதிகம் நெருக்கம் காட்டுவதில்லை.












No comments :

Post a Comment