Wednesday, February 20, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1111 TO 1125

1111. நாட்டில் நடக்கும் எதையும் கிண்டல் செய்து எழுதுவதால் ஏற்படும் ஒரு சிறந்த லாபம் என்னவென்றால்,அவர் எந்த பக்கம் என்று நமக்கு தெரியாது.

1112. நாம் எழுதியதை மறுபடியும் ஒருமுறை படித்துப் பார்த்துத் தவறுகளைத் திருத்த வேண்டும். இல்லாவிடில், மற்றவர் நகைப்பதற்குக் காரணமாகும்.


1113. டாக்டராக தொழில் செய்வது கடினமான வேலை. நோயாளிகளையும் கவனிக்க வேண்டும், குடும்பத்தையும் கவனிக்க வேண்டும். எப்படி சமாளிக்கிறார்களோ!!!


1114. ஒருவருடைய தேசிய உணர்வு அவரது வாழ்க்கைத் தரம், வளர்ப்பைப் பொறுத்து அமையும். சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கும்.


1115. உரிமையைக் கேட்பது போல, கடமையையும் செய்ய வேண்டும். தவறை சுட்டிக் காட்டுவது போல நியாயத்தைப் பாராட்டவும் வேண்டும். அதுதான் நல்ல பண்பு.


1116. ஒரு பிரச்சனையை இருவிதத்தில் அணுகலாம். தன்னிலை, முன்னிலைப் படுத்தி. முதலாவதில் நமது தவறு தெரியாது. இரண்டாவதில் நமது தவறு தெரியும்.


1117. பரத நாட்டியமும், கிராமீய நடனமும் திரைப்படங்களில் காம உணர்ச்சியைத் தூண்ட முடியாததால், அதற்கு பதில் நவீன சல்சா நடனம் வந்திருக்கிறது.


1118. ரெடிமேட் துணுக்குகளில் ஒத்துக்கொள்ள முடியாத கருத்துக்கள் எவ்வளவோ இருக்கின்றன.அதனால் சொந்தமாக கற்பனை செய்து எழுதுவது சாலச் சிறந்தது


1119. காய்க்கும் மரம்தான் கல்லடி படும்.இறைவன் இருக்கின்றார்.இந்திய தேசம் முன்னேற வேண்டுமா அல்லது வேண்டாமா என்று அவருக்குத்தான் தெரியும்.


1120. நீ 90 மார்க் வாங்கினால்,நான் 90 மார்க் வாங்கியுள்ளேன் என்று மலை மேல் நின்று உரக்க கத்து.அடுத்தவன் வாங்கிய 30 மார்க்கை பற்றி பேசாதே


1121. எல்லாம் ஒரு காரணத்திற்காகத்தான் நடக்கிறது என்ற ஞானம் வந்துவிட்டால் லாப நஷ்டம்,வெற்றி தோல்வி, இன்ப துன்பம் எல்லாம் ஒன்றாக தெரியும்.


1122. சிலர் அதிகாரத்தைப் பெறுவதற்கு தேர்தலில் நிற்கிறார்கள்.சிலர் மக்களுக்கு சேவை செய்ய நிற்கிறார்கள்.மக்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும்

1123. நடிகர்கள் தேர்தலில் வெற்றி பெற நல்ல இமேஜ் வேண்டும். என்.டி.ஆர். "கிருஷ்ணா"இமேஜிலும், எம்.ஜி.அர் "ஏழைப்பங்காளர்" இமேஜிலும் வென்றனர்


1124. என்னிடம் யாராவது அன்பாகப் பேசினால் உருகிப் போய்விடுவேன். அவர்கள் சுயருபம் மாறி விட்டால் இறுகிப் போய்விடுவேன். மனம் கருகிப் போகும்.


1125. தனது தேசம்,நாடு,மொழி, மதம்,சாதி, கட்சி,தலைவர்,கொள்கை, எதைப்பற்றியும் பாராட்டி எழுதலாம்.பிறரை வசை பாடக்கூடாது.அது என் குறிக்கோள்.

No comments :

Post a Comment