1081. ஒரு குற்றவாளி நல்லவனாகத் திருந்தி விடலாம். ஆனால் அவன் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் பாவ மன்னிப்பு பெறுவது ஹிந்து தர்மத்தில் இல்லை.
1082. தேய்ந்துபோன சந்திரனக்கும் குளுமையும் பிரகாசமும் இருப்பதால் பரமசிவன் தம் தலையில் தரித்து உலகமெல்லாம் பார்த்து புகழும்படி செய்கிறார்
1083. ஈசுவரனையும் குருவையும் நேராகவும், பந்து மித்திரர்களை பிறரிடமும், வேலையை முடித்த பிறகு ஊழியரையும் பாராட்டலாம்.பிள்ளையை புகழக்கூடாது
1084. சொந்தக் குழந்தைகளை ஒரு போதும் ஸ்தோத்திரம் பண்ணக்கூடாது. அவர்களை இடித்தும் காட்டலாம் என்று சாஸ்திரமே சொல்கிறது.இப்போது அப்படியில்லை.
1085. வழக்கறிஞர்களும், கணக்காயர்களும் நேர்மையை கடைப்பிடிக்காத வரை லஞ்சம், ஊழல், கறுப்புப்பணம், வரி ஏய்ப்பு இந்த நாட்டை விட்டுப் போகாது.
1086. வயதானவர்கள் இரவு உணவை, சூரிய அஸ்தமனத்திற்குள் முடித்து கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறதே நீங்கள் எப்போது சாப்பிடுகிறீர்கள்?
1087. மரத்தை வெட்டுவதற்கு பத்து நிமிடம் மட்டும் கொடுத்தால் என்ன செய்வாய் என்ற கேள்விக்கு முதல் நாலு நிமிடம் கோடாலியை தீட்டுவேன் என்றான்.
1088. ஒருவரிடம் எத்தனை குறை இருந்தாலும் அதைப் பெரிது படுத்தக் கூடாது. அதே சமயம் சிறிது நல்ல குணம் இருந்தாலும் அதை பாராட்டத் தவறக் கூடாது.
1089. ஒவ்வொரு சாதியிலும் பாராட்டும்படி ஒரு தனித்தன்மை உண்டு.ஆனால் பெரும்பாலான பிராமணர்கள் அதை முழுவதும் இழந்து விட்டதாக நான் கருதுகிறேன்
1090. அறிவாற்றலையும் பணம் சம்பாதிப்பதையும் ஒப்பிட்டு பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.இரண்டுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்று தெரியணும்
1091. வருமான வரித் துறை, வரவுக்கு மேல் ஒருவர் சொத்து சேர்த்துள்ளார் என்று நிரூபித்து, நீதி மன்றம் தண்டனை வழங்கினால் தான் குற்றவாளி ஆவார்
1092. குழந்தைகள் பிறக்கும் போதும் சிறுவர்களாக இருக்கும் போதும் நல்ல குழந்தைகளாக தான் இருக்கின்றன.வளர்ப்பு முறையில் இருக்கிறது எதிர்காலம்
1093. பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தைப் பற்றி தெரிந்த விவசாயிகள் அல்லது மற்றவர்கள் எல்லோருக்கும் நன்கு புரியும் படி எழுதலாமே.
1094. ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்று கோஷம் போடுகிறோம். இருவரும் முக்கியம். ஒருவரை மதிக்கிறோம். மற்றவரை மிதிக்கிறோம். ஏன் இந்த வேறுபாடு?
1095. சிலருக்கு உபகாரம் செய்யுங்கள். கூச்சமில்லாமல், தயங்காமல் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். யார் பைத்தியக்காரர் என்று தெரியவே தெரியாது.

No comments :
Post a Comment