Saturday, November 8, 2025

என்னைப் பாடச் சொன்னால் !!!

(சிரிக்காமல் படிக்கவும் )


என்னைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்..?


ENT டாக்டர் : 

"காதோடுதான் நான் பாடுவேன்.."


கண் டாக்டர்

"பார்வை ஒன்றே போதுமேபல்லாயிரம் சொல் வேண்டுமோ.."


ஆர்தோ டாக்டர்:

"ஆஹா மெல்ல நட ,மெல்ல நடமேனி என்னாகும்

முல்லை மலர்ப் பாதம் நோகும்.."


ஹார்ட் டாக்டர்:

"என்னதான் ரகசியமோ இதயத்திலே.."  


குழந்தை நல டாக்டர்

"இது குழந்தை பாடும் தாலாட்டு.."


மகப்பேறு டாக்டர்

"காது கொடுத்து கேட்டேன்ஆஹாகுவா குவா சத்தம்.."


இஸ்ரோ விஞ்ஞானி

"நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்."


தபால்காரர்

"அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்.."


பூக்கடைகாரர்:  

"ரோசாப்பூ சின்ன  ரோசாப்பூஉன் பேர சொல்லும் ரோசாப்பூ.


தீ அணைப்பு அதிகாரி :

"அய்யோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு.."


கூகுள் அலெக்சா

"உள்ளதைச் சொல்வேன் சொன்னதைச் செய்வேன்வேறொன்றும்தெரியாது..!


கரப்பான் பூச்சி

"இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இதுதான் எங்கள் உலகம்.."


விமான பைலட்

"பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே.."


ஓட்டல் உரிமையாளர்

"கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்.."


கணக்கு வாத்தியார்:

"வரவு எட்டணாசெலவு பத்தணாஅதிகம் ரெண்டணா  கடைசியில்  துந்தனா.."


சோசியல் ஸ்டடிஸ் வாத்தியார்:

"மதுரையில் பறந்த மீன் கொடியில் உன் கண்களைக் கண்டேனே.."


PT வாத்தியார்

"பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும்போது..."


டிராயிங் மாஸ்டர்:  

"சித்திரம் பேசுதடிஎன் சிந்தை மயங்குதடி.."


ஏர்டெல் நெட்வர்க்

"நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ.."


சில்லரை வியாபாரி

"இந்தப்  புன்னகை என்ன விலை..?"


பாதிரியார்

"தேவன் கோவில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை.."


AC மெகானிக்:  

"ஜில்லென்று காற்று வந்ததோ.."


இளைஞன்

"குமரிப் பெண்ணின் உள்ளத்திலேகுடியிருக்க நான் வரவேண்டும்.."


காதல் தோல்வியுற்றவர் :

"காதலுக்கு கண்கள் இல்லை மானேகண்ணுக்குள்ள உன்ன வச்சேன்நானே.."


பால்காரர்:

"வந்தேன்டா பால்காரன் அடடா.. பசு மாட்ட  பத்திப் பாடப்  போறேன்.."


குடும்பஸ்தன்

"சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.."

No comments :

Post a Comment