Monday, November 10, 2025

மனதில் தோன்றிய எண்ணங்கள் 2011 to 2025.

மனம் ஒரு குரங்குஅது தவறான வழிகளில் போகாமல் இருக்கதனக்குத்தானே கட்டுப்பாடுகள் வைத்துக்கொண்டுநல்ல வழிகளில் செல்வதுநல்லது.


மற்றவரைப் பாராட்டுவது ஒரு கலை.யாருக்கும் சுலபத்தில் வராது.ஏன்பாராட்ட வேண்டும் என்று தோன்றும்விடாதீர்கள்பலன் பின்னால் தெரியும்


மகன் அப்பா ஆகும்போதுஅப்பா தாத்தா ஆகி விடுவார்மகன் ஒருபோதும்உலக அறிவிலும்அனுபவத்திலும்ஞானத்திலும் அப்பாவை விஞ்சமுடியாது.


தாய்தந்தைமனைவிமக்கள்தான் உலகம் . அவர்களுக்காக உயிரைக்கொடுஅதில் தான் உண்மையான சந்தோஷம் இருக்குமற்றது எல்லாம்மாயை.


என்னை விட நீ பெரியவன் என்றால்நான் உன்னை விட மிகப் பெரியவன்நீஎன்னை விடச் சிறியவன் என்றால் அடியேன்  உன்னை விட மிகச் சிறியவன் .


நண்பன் கடன் கேட்டான்என் தந்தை கூறினார்பணம் முக்கியம் என்றால்  நண்பனை மறந்து விடுநண்பன் முக்கியம் என்றால் பணத்தை மறந்துவிடு.


ஒவ்வொரு ஆண்டு முடிவிலும்ஒருவர் தன்னுடைய நிதி நிலைமுன்னேற்றத்தைக்  கணக்கு இடுதல் மிக அவசியம் . அதுவே அவர்வளர்ச்சியைக் காட்டும்.


சினிமா மோகம்அரசியல் ஆதரவுமதச் சார்புஜாதி உணர்வுஇவைகளைநாம் அறவே தவிர்த்தால் நமது நாடும்மக்களும் முன்னேறும் வாய்ப்புண்டு.


அடதினம் காலையும் மாலையும் இறைவனிடம் சில  நிமிடங்கள்பிரார்த்தனைசின்ன ஸ்லோகம், 12 தோப்புக்கரணம்இது கூட நம்மால்செய்யமுடியாதா?


வாழ்க்கையில் முன்னேறசிறந்த அறிவுபண்பாடு , ஞானம்நல்ல குணம்  உள்ள ஒருவரை வழி காட்டியாக ஏற்று அவர் சொற்படி  நடக்க வேண்டும்.


ஏழைத் தொழிலாளிகள்வேலைக்காரர்கள்சிறு வியாபாரிகளிடம் பேரம்பேசுவது மனிதாபிமானம் அல்லமேலே போட்டுக் கொடுப்பது [டிப்ஸ்உத்தமம்.


இருக்கும் வரை ஆஸ்தி.  இறந்த பிறகு அஸ்தி. இதில் யார் ஒஸ்தி என்று ஏன் போடுகிறான் குஸ்தி?


ஒரு வார்த்தைக்கு இறுதியில் “நர்”  வருமா, “னர்” வருமா என்பதற்கு விதி தெரியுமா? (ஓட்டுநர் / செய்தனர் )


தமிழில் எந்த மூன்று  மெய் எழுத்துக்களுக்கு அருகில் இன்னொரு மெய் எழுத்து வரும்? ய்,  ர்,  ழ் இந்த மூன்று மெய் எழுத்துக்களுக்கு அருகில் மட்டும் இன்னொரு மெய் எழுத்து வரும். தாழ்ப்பாள்,  தேர்ப் பாகன், தேங்காய்ப் பால். 


தோப்பா அல்லது தோட்டமா? அதிக நாட்கள் பயன் பட்டால் தோப்பு. குறைந்த நாட்கள் பயன் பட்டால் தோட்டம். தென்னந் தோப்பு / வாழைத் தோட்டம்.

No comments :

Post a Comment