Friday, November 21, 2025

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.

1960 ஆம் ஆண்டுஎனக்குப் பதினைந்து  வயதுஎனது அம்மா வழிப் பாட்டிதாத்தாவுடன் தங்கி பள்ளி இறுதி வகுப்பு [SSLC] படித்துக்கொண்டிருந்தேன்தாத்தாவிற்கு நிலம் நீச்சு எல்லாம் உண்டுநெல்உளுந்துபயறு முதலியன அறுவடை ஆகும்


அறுவடை நாட்களில் நானும் என் சகோதரனும் வயலுக்குச் சென்றுமேற்பார்வை பார்ப்பது எங்கள் வேலைஅறுவடையான பொருட்களைதிருட்டுப் போகாமல் இருக்க இரவில் களத்து மேட்டில் திறந்த வெளியில்படுத்துக் காவல் காக்க வேண்டும்


மறுநாள் எல்லாப் பொருட்களையும் மூட்டையாகக் கட்டி வண்டியில் ஏற்றிவீட்டுக்குக் கொண்டு வந்து ஹாலில் கொட்டி வைப்போம்தினம் அதை ஒருகூடையில் அள்ளிவாசலில் தெருவில் வெய்யிலில் காய வைக்க வேண்டும்.


காய வைத்த தானியங்களை மறுபடியும் மாலையில் வீட்டுக்கு உள்ளேகொண்டு செல்ல வேண்டும்இது மாதிரி பல தடவை செய்து நன்றாகக்காய்ந்த பின்பு நெல்லை பத்து அடி உயரத்தில் உள்ள நெல் களஞ்சியத்தில்ஏற்ற வேண்டும்.


நெல்லை ஏற்றுவதற்கு முன்பு களஞ்சியத்தில் சுற்றி தரை ஓரமாக நெல்படுதைகளை விரித்து பிறகு நெல்லைக் கொட்ட வேண்டும்அரை அரைமூட்டையாக தோளில் சுமந்து ஏணியில் ஏறிக்  கொட்ட வேண்டும்அவ்வளவுநெல்லையும் கொட்டுவதற்குள் உடல் முழுதும் நெல் புழுதி படிந்து அரிக்கும்..


தேவையான போது கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து நெல் மஷினுக்குஎடுத்துச் சென்று அரைத்து அரிசியாக வீட்டிற்குக் கொண்டு வரவேண்டும்அரிசியைத் தவிர குறுணைதவிடு ஆகியவற்றைத் தனியாகவைக்க வேண்டும்.


அரிசியில் பலவகை சாதங்களும்குறுனையில் நொய்ப் பொங்கல்உப்புமாவும்சமைப்பார்கள்  தவிடை புன்ணாக்குபருத்திக் கொட்டைஆகியவற்றுடன் தண்ணீரில் கலந்து மாட்டிற்குத் தீவனமாகக்கொடுப்பார்கள்எங்கள் வீட்டில் இரண்டு பசு மாடுகள் உண்டு


ஒன்று வெள்ளை மற்றது செவலைவிடுமுறை நாட்களில் தொழுவத்தைசுத்தம் செய்துமாடுகளைக் குளிப்பாட்டிபொட்டு வைத்துசாம்பிராணிகாட்டிகாய்கறிவாழைப்பழ தோல்தவிடுபுன்ணாக்குபருத்திக் கொட்டைமுதலியவற்றை உண்ணக் கொடுப்போம்.


ஒன்று லக்ஷ்மிமற்றது கல்யாணிகூப்பிட்டால் ஓடி வரும்வாஞ்சையுடன்கையை நக்கிக் கொடுக்கும்காலையும் மாலையும் கோனார் வந்து பால்கறந்து கொடுப்பார்பாட்டி அப்பொழுதான் கறந்த நுரைப் பாலை தினமும்எங்களுக்குக் குடிக்கக் கொடுப்பார்கள்.


சில சமயங்களில் மாடுகள் ஓயாமல்நிறுத்தாமல் தொண்டை கிழியக்கத்தும்கேட்கப் பரிதாபமாயும்நாராசமாயும் இருக்கும்பாட்டியிடம் கேட்டால்அது உம்மாச்சியைப்  பார்த்துக் கத்துகிறது என்பார்பாட்டி சொல்வதைஉண்மை என்று நம்புவேன்.


பிறகு கோனார் வந்து பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு அதைக் கூட்டிச்சென்று கத்துவது நின்ற பிறகு கொண்டு விடுவார்அது உம்மாச்சியைப்  பார்த்து விட்டது என்று நினைப்பேன்ரொம்ப வருடம் கழித்துத் தான் எனக்குஅது ஏன் கத்தியது என்று புரிந்தது..


அரை நீஜார் மட்டும் அணிந்து மேல் சட்டை அணியாமல் வேர்க்க விறுவிருக்கவேலை செய்ய வேண்டும்ஒவ்வொரு தடவையும் வேலை முடிந்த பிறகுநன்றாகக் குளித்து விட்டு வந்தால் பாட்டி சாப்பாடு போடுவார்கள்


பொன்னி பச்சரிசியின்பழைய சாதத்தில்தாளிதம் செய்துஉப்புப் போட்டுஆடையுடன் பசுவின்  தயிரைக் கலந்துநன்கு பிசைந்துமாவடுநாரத்தங்காய் ஊறுகாய்பழைய வத்தல் குழம்புடன் கையில் போடுவார்கள்பாருங்கள்சொர்க்கம் தெரியும்.


இன்று ஓரளவு ஆரோக்கியமாக இருப்பதன் காரணம் அன்றுசாப்பிட்ட சாப்பாடும் உழைப்பும் தான்அதில் சந்தேகம் எதுவும் இல்லைஅந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனேஇந்த நாள் அன்று போல்இன்பமாய் இல்லையே ஏன் நண்பனே?

Thursday, November 20, 2025

Random thoughts 3306 to 3320.

3306. The biggest accomplishment in life would never be the money, nor the house nor the car. It is how we have raised our children.


3307. Oranges are green initially and then become orange. Avocados ripe quickly when they are kept near bananas.


3308. You can feel everything but still say nothing. You can cry inside but no one will notice. Strong people hide deepest cracks.


3309. The seed grows silently but the tree falls with the greatest sound. Destruction has noise but creation is silent.


3310. Dedication is more important than designation. Values are more important than valuables. Proper work is more important than paper work.


3311. In life, the hardest battle is between what you know in your head and what you feel in your heart. So be wise.


3312. In life, the only two things that you can control are your effort and your attitude. Everything else is not within your control.


3313. In communication, tonal variation in pitch, volume, and pace of speech, helps to convey meaning, emotion, and emphasis. 


3314. Often, the people who criticise your life are the same ones who don’t know the price you paid to get where you are today. 


3315. Discussion is better than argument. Because discussion is to find out what is right and argument is to find who is right.


3316. Purity of heart and clarity of mind bring confidence in life. Stay committed in your decisions but be flexible in approach.


3317. As far as my experience goes, unity among the brothers is found only in Ramayana and Maha Bharatha. 


3318. I fixed my password on my phone as “incorrect” because whenever I make a mistake, the phone will tell my password as incorrect.


3319. She said, men should pay the bill at the restaurant, because it is called “men”u. He said, no, both should pay because it is me”n”u.


3320. Among the world’s safest countries, India has ranked 67th, Canada 75th, UK 86th and the US 91 st.