Tuesday, November 5, 2024

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1996 to 2010.

1996. ஏழு பரம்பரைப பெயர்கள்:

1.நான்.

2.அம்மா, அப்பா.

3.பாட்டி, பாட்டன்.

4.பூட்டி, பூட்டன்.

5.ஒட்டி, ஓட்டன்.

6.சேயோள், சேயோன்.

7.பரை, பரன். 


1997. மருமகள் நைட்டி போட்டதால் சண்டை வந்த வீடுகளில் எல்லாம், பேத்திகள் லெக்கிங்ஸ் போடுகிறார்கள்! 


1998. தன் தவறை பொண்டாட்டிகிட்ட மறைக்கிறவன் சராசரி மனுஷன்; தனக்கு பொண்டாட்டி இருக்கிறதையே மறைக்கிறவன் பெரிய மனுஷன்! 


1999. ஆண்களின் பெருங்குறைகளுள் ஒன்று... 'அன்பாக இருக்கத் தெரியும்; ஆனால், யார் மீதெனத் தேர்ந்தெடுக்கத் தெரியாது’! 


2000. நம்மதான் விளம்பரம் போடுறப்பல்லாம் சேனலை மாத்திடுறோமே... அப்புறம் ஏன் இவ்வளோ செலவு பண்ணி விளம்பரம் பண்றாங்க? 


2001. முன்னர் எல்லாம் மழைக்காலம் என ஒன்று இருந்தது. இப்போது மழை நாட்கள் மட்டும்.


2002. ‘ஏன் எங்கிட்ட பேசல?’னு ஆரம்பிச்சு, பேசாம இருந்ததுக்காகச் சண்டைய போட்டு, அதுக்குத் தண்டனையா நம்மகூடப் பேசாம இருப்பது தான் பெண்கள். 


2003. ஒரு காலத்தில் நல்லா ஆங்கிலம் பேசறவங்களை வியந்து பார்த்த நாம, இப்ப நல்லா தமிழ் பேசறவங்களை வியந்து பார்க்கிற நிலைமைக்கு ஆளாகிட்டோம். 


2004. காசு கொடுத்துக் கடவுளைப் பார்த்து, கடவுளுக்கும் காசு கொடுத்து, கடைசியில கடவுள்கிட்டயே காசு வேணும்னு கேட்கிறவன்தான் மனிதன்.


2005. நாத்திகர்கள் கடவுளைப் பற்றியே நினைக்கிறார்கள். ஆத்திகர்கள் அவர்களைப் பற்றியே நினைக்கிறார்கள்.


2006. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்மாக்கள் என்றால் படிப்புஅறிவில்லாதவர்கள்மாக்களை மக்கள் ஆக்குவது படித்தவர்கள் கடமை.அதுமனித தர்மம்


2007. பொய் என்றால் என்ன என்று கேட்க வேண்டும்உண்மையே பேச வேண்டும்தைரியமும்இக்கட்டான நிலையை சமாளிக்கும் திறனும் ஒருவருக்கு வரும்.


2008. தவறு செய்வது சகஜம்மன்னிப்புக் கேட்பது கஷ்டம்சுயகௌரவம்  தடுக்கும்விடக்கூடாதுஅதனால் வேற்றுமை அகலும்உறவு நீடிக்கும்வாழ்க 


2009. நாம்நம்மைவிட தாழ்ந்தவர்களையும் கஷ்டப்படுபவர்களையும் பார்த்து இரக்கம்கொண்டால்ஆண்டவன் நம் மீது இரக்கம் கொள்வார் என்பது நிச்சயம்


2010. ஸஷாக்ஷபோன்ற எழுத்துக்கள் நடைமுறையில் இருந்து விலக்கப் பட்டபின் மந்திரங்கள் கற்றுக்கொள்வதும்உச்சரிப்பதும்  கடினம்

No comments :

Post a Comment