Thursday, July 6, 2023

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1891 to 1905.

1891. பணம் அதிகமாக இல்லாவிட்டாலும், “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற மனது இருந்தால் அவன் பெரிய பணக்காரன் தான்.


1892. தனது அறிவுக்கு மீறிய, தகுதிக்கு மீறிய, விஷயங்களைப் பற்றி விவாதிப்பது, விளக்கம் கூறுவது ஒருவரது அறியாமையும், அகங்காரத்தையும் காட்டும்.


1893. எவ்வளவு முயற்சி செய்தாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது. எவ்வளவு விளக்கிக் கூறினாலும் சிலர் மனதை மாற்ற முடியாது.


1894. ஜீரகத்தை வருத்து பொடி செய்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் ஜீரணம் ஆகும் என்று சொன்னார். எது ஜீரணம் ஆகும் என்று சொல்லவில்லை.


1895. ஒருவரிடம் குறை சொல்வதால் பலனில்லை. அதனால் மாற்றம் எதுவும் ஏற்படாது. குறை சொல்பவருக்குத்தான் கெட்ட பெயர் வந்து சேரும்.


1896. ஒரு காலத்தில் தமிழ் மீது மோகம் அதிகம். ஆங்கிலம் பிடிக்காது. பிறகு மோகம் ஆங்கிலத்தின் மீது திரும்பியது. இப்போது இருமொழிக் கொள்கை.


1897. அதிகமாக புத்தகம் படித்தவர்கள் எல்லோரும் எழுத்தாளர்கள் ஆக முடியாது. நல்ல எழுத்தாளர்கள் எல்லோரும் அதிகம் புத்தகம் படித்தவர்கள்.


1898. என்ன செலவு செய்யலாம் என்று சிலர். செலவுக்கு என்ன செய்யலாம் என்று சிலர். 


1899. புத்தகம் அமைதியாக இருக்கும். படித்தவன் ஆட்டம் போடுவான். பாட்டில் அமைதியாக இருக்கும். குடித்தவன் ஆட்டம் போடுவான்.


1900. பணம் அமைதியாக இருக்கும். வைத்திருப்பவன் ஆட்டம் போடுவான். பிணம் அமைதியாக இருக்கும். தூக்கிச் செல்பவன் ஆட்டம் போடுவான்.


1901. ஆமை போல மெதுவாக வருவது சம்பளம். முயல் போல வேகமாகப் போவது செலவு.


1902. இட்லிக்கான அரிசியை வெந்நீரில் ஊறவைத்து பிறகு அரைத்தால் இட்லி பஞ்சு போல மிருதுவாக இருக்கும்.


1903. வயதானால் முதுகில் தோல் சுருங்கி அரிப்பு வருவது இயற்கை. குளிக்கும் போது ஷவரில் குளிர்ந்த நீர் முதுகில் படும்படி சிறிது நேரம் நின்றால் அரிப்பு வராது.


1904. தினம் காலையில் என் மனதில் முதன் முதலில் தோன்றும் நல்ல எண்ணங்களை செய்வது என் வழக்கம். இன்று எனது முகநூலை மூடும்படி வந்தது. நல்லதா கெட்டதா?


1905. உடல் உபாதை ஏதேனும் வந்தால் இன்று வழக்கத்திற்கு மாறாக என்ன செய்தோம் என்று யோசித்து அதைச் செய்யாமல் இருந்தால் அந்த உபாதை திரும்ப வருவதைத் தவிர்கலாம்.




No comments :

Post a Comment