1. யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?
கடிகாரத்தில் பேட்டரியை எடுத்து விட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். Think Differently !!
***********************
2. இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!
***********************
3. அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?
*************************
4. ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோல உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு மாடு தெரியுமா?
------ பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.
********************************
5. அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே ஓடி போய்ட்டாங்க!!
************************
6. உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே !
வருத்த படாதே !
ஃபீல் பண்ணாதே !
உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள் !
*********************
7. காதல் ஒரு மழை மாதிரி ,
நனையும் போது சந்தோஷம்,
நனைந்த பின்பு ஜலதோஷம்..
*****************************
No comments :
Post a Comment