Sunday, February 13, 2022

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1771 TO 1785

1771. சல்லடையில் தண்ணீர் தங்காது. ஆனால் அழுக்கான சல்லடை சுத்தமாகும். நல்ல விஷயங்கள் நமது மனதில் தங்காது. ஆனால் அழுக்கான மனது சுத்தமாகும்.

1772. ஒருமுறை, இருமுறை அல்ல, பலமுறை அனுபவித்த பிறகும் நான் சிறிதும் திருந்த மாட்டேன் என்று கூறினால் விதி வலியது என்று தானே கூற வேண்டும்?

1773. உலகம் ஒரு நாடக மேடை. எல்லோரும் நடிகர்கள். இறைவன் சூத்திரதாரி. நான் கொடுத்த வேஷத்தில் நடிக்கிறேன். ஆனால் நாடகம் இன்னம் முடியவில்லை.

1774. பாமரன் படித்தவனாக வேடம் போடுவது மிகக் கஷ்டம். அதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் படித்தவன் பாமரன் போல வேடம் போடுவது மிகவும் தவறான செயல்

1775. 200 ரூபாய்க்கு புத்தகம் வாங்கிப் படிக்க மனது வராது. பலர் படிக்கலாம். ஆனால் சினிமாவுக்கு 200 ரூபாய் கொடுக்க முடியும். விந்தையான உலகம்

1776. நமது உடலில் நோய் வந்தால் பையில் இருக்கும் பணத்தைத் தூக்கிக் கொடுத்து விடுவோம். ஆரோக்கியம் இருந்தால் தான் பணத்தை அனுபவிக்க முடியும்

1777. இந்தத் தீபாவளித் திருநாளில் நீங்கள் எல்லோரும் சந்தோஷமாக, ஆரோக்கியமாக, நிம்மதியாக வாழ நான் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

1778. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். புத்தகம் படிக்கும் பழக்கம் சிறந்த ருசி, அருமையான பசி. சுவைக்கப் பழகி விட்டால் அலுக்காது.

1779. முயற்சி திருவினை ஆக்கும். வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்ய ஆசை வேண்டும். ஆசை இல்லாத முயற்சியால் பலன் ஒன்றும் இல்லை.

1780. வாழ்க்கையில் வாய்மையும் நேர்மையும் முக்கியம். அப்படி வாழ்ந்தால் எதிர்பாராத எதிர்ப்புகளை வரவேற்க, ஜீரணிக்க முடியும்.

1781. சிலர் எப்பொழுதும் எதிர் மறையாகவே எழுதுவார், பேசுவார்,அபிப்பிராயம் சொல்வார். தான் அறிவாளி என்று நாலு பேர் கவனிக்கணும் என்பதற்காக!!!

1782. நல்ல வெளி அழகு நண்பர்களைக்  கொடுக்கும். ஆனால் அது நிலையானது இல்லை. கெட்ட அக அழகு பகைவர்களை உண்டாக்கும். நல்ல உள் அழகு மேல்.

1783. படிப்பு , அழகு, பணம், குணம், மனப் பொருத்தம் இதில் எது ஆண், பெண் திருமணத்திற்கு மிக  முக்கியம் ? ஏதாவது இரண்டை கூறவும் .

1784. பெண்கள் நம் நாட்டின், வீட்டின் கண்கள். அந்தக் கண்களைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. அதில் உங்களின் ஆலோசனைகள்  என்ன ?

1785. வெளியே செல்ல ஒரு நல்ல வேஷ்டியை தேடினால் காணவில்லை. கொலுப் படியில் இருக்கிறது. ஏன் பட்டுப் புடவையை கொலுப் படியில் விரிக்கக் கூடாது? 

No comments :

Post a Comment