1. என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
பூட்டுக்குள் எப்படி 5 லட்சம் வைத்திருந்தாய்?
........................................................................
2. படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
புக்கை மூடிடுவேன்!
........................................................................
3. காலில் என்ன காயம்?
செருப்பு கடித்து விட்டது.
பின்ன, அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா!
..............................................................
4. குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
தெரியல, குளிக்கும் போதே துவட்ட முடியாதே!
.......................................................................
5. இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..?
என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடணும்!
...........................................................................
6. டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு.
என்னிடம் சுத்தமா இல்ல.
பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!
..............................................................
7. ஒருவர்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.எ.
ஒருவர்: அடப்பாவி, படிச்சதே ரெண்டு எழுத்து அதையும் தலை கீழா படிச்சிருக்கே!
.................................................................
8. இன்டெர்வியு, சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?
ஒ! நிறைய, என் வீடு, கார் மற்றும் என்னுடைய மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!
............................................................
No comments :
Post a Comment