அன்று வீடு நிறைய குழந்தைகள்.
இன்று வீட்டுக்கொரு குழந்தை.
அன்று பெரியவர்கள் சொல்லி பிள்ளைகள் கேட்டனர்.
இன்று பிள்ளைகள் கேட்க பெரியவர்கள் முழிக்கிறார்கள்.
அன்று குறைந்த வருமானம் நிறைந்த நிம்மதி.
இன்று நிறைந்த வருமானம் குறைந்த நிம்மதி.
அன்று படித்தால் வேலை.
இன்று படிப்பதே வேலை.
அன்று வீடு நிறைய உறவுகள்.
இன்று வீடு நிறைய பொருட்கள்.
அன்று உணவே மருந்து.
இன்று மருந்தே உணவு.
அன்று முதுமையிலும் துள்ளல்.
இன்று இளமையிலேயே அல்லல்.
அன்று உதவிக்கு தொழில் நுட்பம்.
இன்று தொழில் நுட்பமே உதவி.
அன்று யோக வாழ்க்கை.
இன்று போக வாழ்க்கை.
அன்று படங்களில் ஒரு குத்துப் பாட்டு.
இன்று குத்துப் பாட்டே படம்.
அன்று ஓடினோம் வயிற்றை நிறைக்க.
இன்று ஓடுகின்றோம் வயிற்றை குறைக்க.
அன்று பெரியோர்கள் பாதையில்.
இன்று இளைஞர்கள் போதையில்.
அன்று வந்தது புரட்சி.
இன்று கண்டது வறட்சி.
அன்று சென்றார்கள் வளர்ச்சியில்.
இன்று செல்கிறது சினிமா கவர்ச்சியில்.
அன்று ஊரே கூட கோலாகல விழா.
இன்று ஊருக்கே போக முடியாத மூடுவிழா.
அன்று கைவீசி நடந்தோம்.
இன்று கைப்பேசியுடன் நடக்கிறோம்.
அன்று ஜனநாயகம்.
இன்று பணநாயகம்.
அன்று விளைச்சல் நிலம்.
இன்று விலை போன நிலம்.
அன்று கோடை விடுமுறையில் உறவுகளிடம் தஞ்சம்.
இன்று கோடை விடுமுறையில் உறவுகளிடம் அச்சம்.
அன்று நிறைந்தது மகிழ்ச்சி.
இன்று நடக்குது வெற்று நிகழ்ச்சி.
அன்று வாழ்ந்தது வாழ்க்கை.
இன்று தாழ்ந்தது வாழ்க்கை.
No comments :
Post a Comment